எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யலாமா..?? வேண்டாமா..??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: எஸ்ஐபி அல்லது சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் முதலீடுகள் தற்போது முதலீட்டாளர்களின் மத்தியில் பிரபலமான முதலீட்டுத் தேர்வாக உள்ளது.

மியூச்சுவல் பண்டுகள் தங்கள் முதலீட்டாளர்களை எஸ்ஐபி திட்டங்கள் வாயிலாக முதலீடு செய்யும்படி அதிகள் அளவில் வலியுறுத்த தொடங்கியுள்ளன. இந்தத் திட்டத்தின் அடிப்படை மாதாந்திர தவணைகளில் முதலீடு செய்வதாகும். முதலீட்டு ஆய்வாளர்கள், நிதி மேலாளர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் குறிப்பிடும் ஒரு முக்கியச் சாதகமான அம்சம் மதிப்புக் குறைந்து வரும் சந்தையில் முதலீட்டுச் செலவுகளைச் சராசரியாகப் பார்க்கும்போது நீங்கள் இலாபமடைய முடியும் என்பதுடன் முதலீட்டு அபாயங்களும் குறைக்கப்படும்.

என்னதான் சாதகப் பாதகங்கள் இருந்தாலும், எஸ்ஐபி முதலீட்டுத் திட்டங்களில் சில நடைமுறை சிக்கல்கள் முதலீட்டாளர்களுக்கு இருக்கவே செய்கின்றன. அவை என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யலாமா..?? வேண்டாமா..??

நிதித் தட்டுப்பாடு

எஸ்ஐபி முதலீடுகள் என்றாலே அதில் நீங்கள் முன்பணமோ அல்லது முன் தேதியிட்ட காசோலைகளோ கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் சில நேரங்களில் உங்கள் வங்கிக் கணக்கில் போதிய இருப்பை நீங்கள் பராமரிக்க இயலாத நிலையில் உங்கள் காசோலை அல்லது இசிஎஸ் எனப்படும் வங்கி அறிவுறுத்தல்கள் பணமின்றித் திரும்ப வாய்ப்புள்ளது. எனவே வங்கிக் கணக்கில் எப்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பது சிறந்தது.

உங்கள் முதலீட்டுச் சேவை நிறுவனம் இதற்கான முன்கூட்டிய எச்சரிக்கையைத் தரும் வடிவமைப்பைக் கொண்டிருக்குமானால் அவ்வாறு முன்கூட்டியே தெரிவிக்குமாறு அறிவுறுத்துங்கள். இல்லையெனில் நீங்கள் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளலாம்.

நிதி நிறுவனத்தின் சிக்கல்கள்

இது பொதுவாக நடக்காத ஒன்றுதான். ஆனால் சில நேரங்களில் நீங்கள் கொடுத்த காசோலையை அவர்கள் செலுத்த தவறக்கூடும். எஸ்ஐபி திட்டங்கள் உங்கள் முதலீட்டுச் செலவுகளைச் சராசரியாகக் கணக்கிடுவதன் மூலம் உங்களுக்குப் பணவரவைத் தருகின்றன.

எஸ்ஐபி திட்டங்களில் உள்ள ஒரு குறைபாடு அவை இலாபங்களை மட்டுமே தரும் என்பது. சில நேரங்களில் சராசரி கணக்கீடு சரிப்பட்டு வராது. இதனால் முதலீட்டாளரும் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

நீங்கள் கடந்த ஒரு வருட காலமாக இந்த எஸ்ஐபி திட்டம் மூலம் முதலீடு செய்து வருபவராக இருந்தால் இன்றைக்கு நீங்கள் கவலைக்குள்ளான ஆளாக இருக்கலாம். ஏனென்றால், பெரும்பாலும் சந்தை உயர்ந்து இருந்ததால் ஒரு வருடத்திற்குண்டான சராசரி செலவுகள் மிக அதிகமாக இருக்கும். ஆனால் அண்மை காலமாகச் சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எஸ்ஐபி திட்டம் உங்களுக்கு எதிர்மறை முடிவுகளையே கொடுத்திருக்கும்.

நீங்கள் முதலீட்டின் மூலம் இலாபமடைய என்னும் போது ஒரேயடியாகச் சந்தை நிலவரங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் சந்தை நிலவரம் மிகப்பெரும் தனிக் காரணியாக உள்ளது.

உதாரணமாக, 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைகள் 27,507 என்ற புள்ளிகளுடன் தொடங்கின ஆனால் தற்போது 24,900 புள்ளிகளுடன் உள்ளது. இது ஒரு பெரிய வீழ்ச்சி. இந்தக் காலகட்டத்தில் எஸ்ஐபி திட்டங்களை அதிகம் நீங்கள் வாங்கியிருப்பீர்கள். ஆகஸ்ட் மாதம் நீங்கலாக ஏனென்றால் அப்போது சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. எனவே இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு இது நல்ல செய்தி அல்ல. இந்த நட்டங்களை மீட்டெடுக்கத் தற்போது நீங்கள் சந்தைகள் மீளும் வரை பொறுமை காத்துத் தான் ஆகவேண்டும்.

எனவே செலவுகளைச் சராசரியாகக் கணக்கிடுவதன் மூல இலாபம் அடைவது என்பது எப்போதுமே பயன்தரக் கூடியதல்ல. சந்தைகள் வீழும் வரை நீங்கள் பணத்தை இழந்துகொண்டுதான் இருப்பீர்கள்.

இது பொதுவாக எஸ்ஐபி திட்டங்களின் குறைகளில் முக்கியமான ஒன்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Are The Disadvantages Of Investing In A SIP?

Systematic Investment Plans (SIPs) have become the most popular investment option for investors these days.
Story first published: Sunday, January 10, 2016, 12:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X