வீட்டில் வீணாகும் உணவைக் கட்டுப்படுத்தி 30 வருடத்தில் 20.5 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருடத்திற்கு உலகளவில் 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது. இதில் இந்தியாவில் வீணடிக்கப்படுவதே அதிகம். இந்தியாவில் வீணாகும் உணவை வைத்து இங்கிலாந்து மொத்தத்திற்குமே உணவைப் பங்கிட்டு வழங்க இயலும்.

உணவு வீணடிக்கப்படுவதை மொத்தமாகக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் ஓர் அளவுக்குக் குறைக்க இயலும். இப்படி வீணாகும் உணவை குறைப்பதன் மூலம் எவ்வளவு சேமிக்க இயலும் என்று இங்குப் பார்ப்போம்.

உணவிற்குச் செலவு செய்வதில் இருந்து நாம் பின்வருமாறு சேமிக்கத் தொடங்கி 10 சதவீதம் வட்டி விகிதம் லாபம் அளிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும் போது 30 வருடத்தில் 20.5 லட்சம் பெற இயலும் ஆனால் இது தோராயமான கணக்கு மட்டுமே. உணவுப் பொருட்கள் எப்போது விலை ஏறும் இறங்கும் என்று கூற இயலாது.

உணவுப் பொருட்கள் விலை ஏறும் போது செலவுகள் அதிகரிக்கும், அதை நாம் குறைத்து சேமித்து வந்தால் அதுவே ஒரு சிறந்த முதலீடாக மாறும்.

சூப்பர் மார்க்கெட்கள்

சூப்பர் மார்க்கெட்கள்

நகரத்தில் வாழும் பலர் தங்களுக்குத் தேவையான நுகர்பொருட்களை ஏதேனும் சூப்பர் மார்க்கெட்கள், சில்லறையாக வாங்கும் போது அண்ணாச்சி கடைகள் போன்றவற்றில் வாங்குவர்.

இவ்வாறு வாங்கும் போது சூப்பர் மார்க்கெட்களில் சலுகைகள் உள்ள பொருட்களை பார்த்து வங்காளம். மேலும் ஏதேனும் பிறாண்டு பொருட்களை வாங்குவதை விட அதை விடச் சிறிது விலை குறைவான ஸ்டோரின் பிறாண்டு பொருட்களை வாங்குவதன் மூலம் 7 முதல் 8 சதவீதம் வரை உங்கள் செலவுகளை குறைக்கலாம்.

 

பொருட்களை வீணாவதைக் குறைப்பது எப்படி?

பொருட்களை வீணாவதைக் குறைப்பது எப்படி?

மொத்தமாக உங்களால் வீணாவதைக் குறைக்க முடியாது என்றாலும் கவனமாக பார்த்து வாங்குவது, புத்திசாலித்தனமாகப் பதப்படுத்தி வைப்பது மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தேர்வு செய்வது போன்றவற்றால் ஓர் அளவுக்குக் குறைக்க முடியும்.

பசியில் பொருட்களை வாங்காதீர்கள்

பசியில் பொருட்களை வாங்காதீர்கள்

ஒரு பொருட்களை வங்கும் போது பசியில் பொருட்களை வாங்குபவர்கள் அதிக பொருட்களை வாங்குவார்கள். ஷாப்பிங் செல்லும் போது நல்ல உணவை சாப்பிட்ட பின்பு செல்க.

உங்களால் உங்களது செலவுகளை குறைக்க முடியாது என்றால் ஷாப்பிங்கிற்கான பட்ஜெட்டை முடிவு செய்து கொண்டு பணமாக எடுத்துச் செல்லவும். கார்டுகள் எடுத்துச் செல்லும் போது சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்ய நேரிடலாம்.

 

வாங்குதலை திட்டமிடவும்

வாங்குதலை திட்டமிடவும்

வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை முதலில் தயார் செய்து கொண்டு அதற்கு ஏற்றது போல் பொருட்களை வாங்கவும். ஆஃபர்களை கண்டு ஆசைப் பட்டு அதிகம் வாங்க வேண்டாம்.

தேர்வுசெய்து வாங்குதல்

தேர்வுசெய்து வாங்குதல்

மொத்தமாக வாங்குவது எப்போதும் லாபத்தைத் தராது. சில பொருட்களை மொத்தமாக வாங்கலாம், சில பொருட்களை சில நாட்களே பயன்படுத்த இயலும். அதற்கு ஏற்றவாறு பொருட்களை தேர்வு செய்து வாங்கவும்.

குளிர் சாதன பெட்டியில் சேமிக்கும் முறை

குளிர் சாதன பெட்டியில் சேமிக்கும் முறை

குளிர் சாதன பெட்டியில் பொருட்களை சேமித்து வரும் போது ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் ஔட் முறையைக் கடைப்பிடிக்கவும். பழங்கள், காய் கரிகள் போன்றவற்றை ஒரே இடத்திலும் பிற பொருட்களை வெவ்வேறு இடத்திலும் சேமித்து வைக்கலாம்.

காற்று பைகளை பயன்படுத்தவும்

காற்று பைகளை பயன்படுத்தவும்

காய் கரிகளை பதப்படுத்தி வைக்கப் பேப்பர் பைகள், மக்கும் துணி பைகள் போன்று எளிதாகக் காற்று சென்று வரக்கூடிய பைகளை பயன்படுத்தவும்.

கவனமாக நுகர்தல்

கவனமாக நுகர்தல்

வீணாவதை தவிர்க்க சரியாகத் திட்டமிட்டு தேவையான அளவு மட்டும் சமைக்கவும். குறைவான அளவே உணவைத் தயாரிக்கவும். இதுவே வீணாவதைக் குறைக்கும்.

தட்டில் எடுத்துக் கொண்ட உணவை வீணாக்காமல் உண்ண வேண்டும்.

 

செலவை குறைக்க முடியும்

செலவை குறைக்க முடியும்

உணவு வீணாவதைக் குறைப்பதன் மூலம் வருடத்திற்கு 10 சதவீதம் வரை உங்கள் உணவுக்கான செலவை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அந்த 10 சதவீத சேமிப்பை சரியான முதலீடுகளில் சேமிப்பதன் மூலம் 30 வருடத்தில் 20 லட்சம் வரை நீங்கள் சேமிக்க இயலும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to reduce food wastage and gain more?

How to reduce food wastage and gain more?
Story first published: Saturday, October 1, 2016, 12:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X