தமிழக மக்களுக்கு ஓர் நற் செய்தி. தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் (TNEPDS) செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலம் தமிழக மக்கள் பல நன்மைகளை அடைய இயலும்.
மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் குடும்பத்தின் ஆதார் எண்களைக் குடும்ப அட்டையுடன் இணைக்க இயலும்.

ஒரு முறை கடவுச்சொல்
உங்கள் ஆதார் எண்ணை பொது விநியோகத் திட்டம் (TNEPDS) செயலியில் உள்ளிடுவதன் மூலம் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் ஒன்று வரும். அதனை உள்ளிட்ட பிறகு உங்களது குடும்ப அட்டை விவரங்களைச் செயலியில் உள்ளிட்டு எளிதாக ஆதார் அட்டையுடன் இணைக்கலாம்.

ஏற்கனவே பதிவு செய்திருந்தால்
உங்களது குடும்ப அட்டையின் கடைகளில் ஏற்கனவே ஆதார் அட்டையை இணைத்திருந்தால் மொத்த குடும்ப விவரமும் பட்டியலிடப்படும். ஒரு வேலைப் பதிவு செய்யவில்லை என்றால் நீங்கள் செயலியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

செயலியின் முக்கிய பயன்
பொது விநியோகத் திட்டம் (TNEPDS) செயலியின் மூலம் உங்களது குடும்ப அட்டையின் கடை விவரம், இப்போது கடையில் பொருட்களின் விவரங்கள், உங்கள் குடும்பத்தின் விவரம், புகார் அளிக்கும் சேவை போன்றவை உள்ளது.

முகவரி மற்றும் கூடுதல் நபர் சேர்த்தல்
மேலும் இந்தச் செயலியின் மூலம் முகவரி திருத்துதல், கூடுதல் நபரைச் சேர்த்தல் போன்றவற்றைச் செய்யலாம்.

பொது விநியோகத் திட்டம் (TNEPDS) செயலி பதிவிறக்கம்
பொது விநியோகத் திட்டம் (TNEPDS) செயலியை இங்கே உள்ள இரண்டு இணைப்புகளின் உதவியுடன் பதிவிறக்கம் செய்யலாம்.
ஸ்மார்ட்போன் மூலம் ஆதார் எண்ணைக் குடும்ப அட்டையுடன் இணைப்பது எப்படி? - வீடியோ
ஸ்மார்ட்போன் மூலம் ஆதார் எண்ணைக் குடும்ப அட்டையுடன் இணைப்பது எப்படி? - வீடியோ