2017: ஒவ்வொரு மாசமும் என்னென்ன செய்ய வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வார இறுதி விடுமுறைகள் என அனைத்தும் முடிந்து இயல்பு நிலைக்கு அனைவரும் திரும்பியுள்ளோம்.

சரி, 2016ஆம் ஆண்டு எனக்கு மோசமான வருடம், உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை என்று எத்தனை பேர் புத்தாண்டு நாளில் நினைத்திருப்போம்.? கண்டிப்பாகப் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். இதற்கு என்ன காரணம் என்று என்பதை இப்போது தேவையில்லை.

2017ஆம் ஆண்டை எப்படிச் சிறப்பானதாக அமைக்க வேண்டும் என்பதில் நாம் கவனத்தைச் செலுத்தினாலே போதுமானது. அப்படி இந்த வருடம் முழுவதும் என்னென்ன செய்ய வேண்டும்.

ஜனவரி

ஜனவரி

1. இந்த ஆண்டுக்கான உங்கள் நிதி இலக்குகளைச் சரியாகத் திட்டமிடுங்கள். தற்காலிக முதலீடுகளைப் பட்டியலிடவும், செலவினம் மற்றும் பெரிய கொள்முதல் திட்டங்களைச் சரியாக மதிப்பிடவும்.
2. அனைத்து காப்புறுதித் திட்டங்களுக்கான பிரீமியம் பணம் செலுத்தும் தேதிகளுக்கான நினைவூட்டல் அமைக்கவும்.
3. மேலும் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான நாளை தெரிந்தெடுத்து பயன்பாட்டுப் பில்கள், கடன் அட்டைச் சீட்டுக்கள் போன்றவற்றைச் செலுத்த நினைவூட்டல் அமைக்கவும்.
4. நீங்கள் முதலீடு செய்ததற்கான ஆதாரத்தைத் தங்களுடைய பணி நிறுவன தலைமைக்குச் சமர்ப்பிக்கவும்.

 பிப்ரவரி

பிப்ரவரி

1. நாட்டின் வரைவு திட்ட அறிவிப்பு. வரிவிதிப்பு விதிகள் மாற்றங்கள் பற்றிய குறிப்பு எடுத்து அது உங்கள் முதலீடுகளை எப்படிப் பாதிக்கும் என்று குறிப்பு எடுத்துக்கொள்ளவும்
2. இந்த நிதி ஆண்டு முடிவதற்குள் தங்களின் அனைத்து ஈட்டு ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ளவும். ஏனென்றால் வரிச் சமர்ப்பித்தபின் விடுப்பு பயண ஊதியம்(எல்டிஏ) போன்றவற்றைப் பெற இயலாது.

மார்ச்
 

மார்ச்

1. 2016 - 2017 ம் ஆண்டுக்கான நான்காவது மற்றும் இறுதி முன்கூடியே வரித் தவணை செலுத்த கடைசி நாள் 15 மார்ச்.
2. தங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அடுத்த மாதம் நீங்கள் ஆண்டுப் பள்ளி கட்டணம் செலுத்துவதற்குப் போதுமான நிதி உங்கள் வங்கி கணக்கில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
3. பீதியடையாமல், உங்களுடைய நிதி இலக்குகளுக்கு அப்பாற்பட்ட, கடைசி நிமிடத்தில் வரிச் சேமிப்பு முதலீடு செய்யவேண்டாம்.

ஏப்ரல்

ஏப்ரல்

1. உங்களுடைய குறிக்கோள்களுக்குப் பொருத்தமான வரிச் சேமிப்பு முதலீடு மற்றும் அவசர மதிப்பீடு செய்ய இது சரியான நேரம். தங்களுடைய வங்கி கணக்கில் ஒரு இசிஎஸ் தரவினை ஏற்படுத்திக்கொள்ளவும். அது சம்பளம் உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டவுடன் ஒரு தொகை நேரடியாகத் தங்களின் முதலீட்டுக்குச் சென்று விடும்.
2. நீங்கள் ஒரு மே-ஜூன் விடுமுறைக்குச் செல்ல போகிறீர்கள் என்றால், விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓய்வு விடுதி புக் செய்வதற்கு அது சிறந்த ஒப்பந்தங்கள் பெற இது சரியான நேரம்.
3. 28ம் தேதி அக்ஷய் திரிதி, தங்களுடைய "தங்கம் இருப்பு" 10 சதவீததற்கும் குறைவாக இருந்தால், தங்கம் வாங்க தயாராக இருக்கவும்.

மே

மே

1. நீங்கள் ஒரு பதவி உயர்வு அல்லது போனஸ் பெற்றீர்கள் என்றால், ஒரு விலையுயர்ந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கோ அல்லது அதை முதலீடு செய்யாவதற்கோ பயன்படுத்தலாம். மேலும் உங்கள் குடும்பத்துடன் செலவழிக்கச் சிறு தொகை ஒதுக்கி வைப்பது நலம்!
2. உங்கள் கடன் மதிப்பீட்டைப் பாருங்கள். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், பில்கள், EMIS மற்றும் கடன் அட்டை கட்டணம் செலுத்தி கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஜூன்

ஜூன்

1. முன்கூட்டிய வரி முதல் தவணை செலுத்தும் கடைசித் தேதி 15.
2. ஒரு தேதியை நிர்ணயம் செய்து உங்களுடைய பேப்பர் வேலைகளை முடிப்பதற்கான திட்டமிடவும். அதாவது மோட்டார், உடல் நலம், வீட்டிற்கான காப்பீட்டுத் திட்டங்கள், உங்கள் வரவு செலவு திட்டத்தின் மறு ஆய்வு, பில்கள் மற்றும் ரசீதுகள் நிரப்புதல், உயில் அல்லது தங்களின் முதலீட்டுப் திட்டங்களை மறு ஆய்வு செய்தல் முதலியன.
3. உங்கள் ஸ்மார்ட்போன், இணையம் மற்றும் கேபிள் திட்டம் போன்றவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தெரிந்தெடுப்பது அல்லது திட்டங்களை மாற்றியமைப்பது.

ஜூலை

ஜூலை

1. 2016-17 ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய 31 ஆம் தேதி கடைசித் தேதியாகும். கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இணையத் தாக்கல் செய்யவும். தாக்கல் செய்யும் முன் ஒரு வாரம் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட்

1. 15ம் தேதி சுதந்திர தினம், மனதை ரிலாக்ஸ் செய்ய நீண்ட வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
2. 2016-2017 ஆண்டுப் பிரிவு 80ஜி வரி விலக்கு பெறுவதற்காக ஒரு நன்கொடை அளிப்பதற்குத் திட்டமிடவும்.

செப்டம்பர்

செப்டம்பர்

1. முன்கூடிய வரி இரண்டாம் தவணை செலுத்தும் கடைசித் தேதி 15.
2. இந்த மாத இறுதியில் பண்டிகைக் காலம் துவங்குகிறது. செப்டம்பர் 21-29 நவராத்திரி மற்றும் செப்டம்பர் இருந்து 25-30 துர்கா பூஜைக்கான காலங்கள். நீங்கள் வாங்க வேண்டிய மற்றும் செலவழிக்கவேண்டிய பொருட்களுக்கான பட்டியல் மற்றும் பட்ஜெட் தயார் செய்யவும் மேலும் இதற்கான செலவு வரவு செலவு திட்டத்தை மீறிச் சென்று விடாதபடி பார்த்துக் கொள்வது நல்லது.

 அக்டோபர்

அக்டோபர்

1. நீங்கள் உங்களுடைய வீட்டை வண்ணம் தீட்ட அல்லது சீராக்கவேண்டும் திட்டமிட்டால், இப்போது பண்டிகை தள்ளுபடிகள் முழு மூச்சில் இருப்பதால் இது ஒரு நல்ல நேரம். மேலும் விற்பனை காலத் தள்ளுபடியை உபயோகப்படுத்திக் கொள்ள உடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்குவது நலம்.
2. பண்டிகைக் காலத்தை நன்றாக அனுபவிக்கவும், ஆனால் அதிகமாகச் செலவிடும் முயற்சி கூடாது. தாந்திராஸ் (17 அக்டோபர்) அல்லது தீபாவளி (19 அக்டோபர்) போன்ற பண்டிகைகளை ஒட்டிப் பொழுதுபோக்கு டிக்கட்டுகளை வாங்கவும். ஆனால் இது உங்களுடைய பட்ஜெட்டுக்கு உள்ளே இருக்குமாறு பார்த்து கொள்ளவும். .
3. நீங்கள், டிசம்பர் மாதம் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், இப்போது உங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓய்வு விடுதி யை புக் செய்யவும்.

நவம்பர்

நவம்பர்

1. இந்த மாதம் முடிந்தவரைக் குறைவாகச் செலவழித்து உங்களை மற்றும் உங்கள் பணத்திற்கு ஓய்வு கொடுக்கவும். நீங்கள் கடன் கொடுப்பதற்கும் ஒரு நல்ல ஓய்வு எடுப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம்.

டிசம்பர்

டிசம்பர்

1. முன்கூடியே வருமான வரி செலுத்தும் மூன்றாவது தவணைக்கான தேதி 15.
2. உங்கள் நிதி மேலாண்மையை வருடாந்திர ஆய்வு நடத்தவும் மற்றும் உங்கள் இலக்குகளைச் சாதித்து விட்டீர்களா அல்லது பட்ஜெட்டுக்கு மிகையாகச் சென்றதா ? என்பதனை சரிபார்க்கவும்.
3. இறுதியாக, அது ஒரு குளிர்கால இடைவேளைக்கான நேரம் இது. உங்கள் விடுமுறையை அனுபவிக்கவும்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2017 Will Be Great Year For You.. Just Follow These Things

2017 Will Be Great Year For You.. Just Follow These Things - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X