பட்ஜெட் என்றால் என்ன? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது..?

உங்களுக்காக இங்கே பட்ஜெட் பற்றிய (வரவு - செலவு திட்டத்தின்) நுணுக்கங்கள், விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய பட்ஜெட்டை நிர்ணயிப்பது, செயலாக்குவது பற்றிய எதிர்பார்ப்புகள் நம்மில் பலருக்கும் இருக்கும். அந்தப் பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்காக இங்கே பட்ஜெட் பற்றிய (வரவு - செலவு திட்டத்தின்) நுணுக்கங்கள், விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் என்றால் என்ன?

பட்ஜெட் என்றால் என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டின் பட்ஜெட்டில், அரசாங்கத்தின் அந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கான அறிக்கையை அளிப்பது.

வரவு - செலவு திட்டத்தை நிர்ணயிப்பது யார்?

வரவு - செலவு திட்டத்தை நிர்ணயிப்பது யார்?

பட்ஜெட்டானது, நிதியமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் செலவு அமைச்சகங்கள் சம்மத்தப்பட்ட ஆலோசனை செயல்முறை மூலம் உருவாக்கப்படுகிறது. அமைச்சகங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, திட்டமிட்டுச் செலவு செய்வதற்கு நிதியமைச்சகம் வழிகாட்டியாகச் செயல்படுகிறது.
நிதியமைச்சகத்தில் உள்ள பொருளாதாரத் தொடர்புகள் துறை பட்ஜெட் பிரிவானது, வரவு - செலவு திட்டத்தினை ஒருங்கிணைந்து தயாரிப்பதற்குக் காரணமாக உள்ளது.

பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது?

பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது?

பட்ஜெட் பிரிவானது, அனைத்து ஒள்றிய அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், தன்னாட்சி அமைப்புகள், துறைகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அடுத்த ஆண்டின் மதிப்புகளின்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. அதன் பின்னர், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களது கோரிக்கைகளை அரசிற்கு அனுப்பும், பின்னர் அமைச்சகங்கள் மற்றும் நிதியமைச்சகத்திற்கு இடையே விரிவான விவாதங்கள் நடைபெறும்.

அதே சமயத்தில், பொருளாதாரத்துறை மற்றும் வருவாய் துறையானது, விவசாயிகள், வர்த்தகர்கள், அந்நிய நிதிநிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், சிவில் குழுக்கள் மற்றும் பங்குதாரர்களைச் சந்தித்துக் கேட்டறிந்த தங்கள் கருத்துக்களையும் முன்னின்று கூறவேண்டும்.

 

பட்ஜெட்டிற்கு முந்திய கூட்டத்திற்குப் பிறகு?

பட்ஜெட்டிற்கு முந்திய கூட்டத்திற்குப் பிறகு?

பட்ஜெட்டிற்கு முந்திய கூட்டம் முடிவடைந்துவிட்டால், வரித் திட்டங்கள் சார்ந்த இறுதி முடிவுகள் நிதியமைச்சரால் எடுக்கப்படும். பின்னர், பிரதமர் முன்னிலையில் இந்தத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, வரவு-செலவு திட்டமானது நிலை நிறுத்தப்படும்.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியினை ஒப்புக்கொண்ட பின் லோக்சபா செயலகத்தின் பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்குகிறார். பட்ஜெட்டின் முக்கிய மதிப்பீடுகள் மற்றும் திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டுகிறார்.
நிதியமைச்சர், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் தன்னுடைய 'அமைச்சரவை சுருக்கம்' மூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

'ஆண்டு நிதி அறிக்கை' மத்திய நிதி அமைச்சர் உரையாற்றிய பின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் தினத்தன்று காலையில், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்த பின் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படுகிறது.

 

செயல்முறை

செயல்முறை

பகுதி 1 - நாட்டின் பொதுவான பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் நாட்டின் கொள்கை அறிக்கைகளைக் கொண்டது
பகுதி 2 - வரித் திட்டங்கள் அடங்கியது
'ஆண்டு நிதி அறிக்கை' மத்திய நிதி அமைச்சர் உரையாற்றிய பின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்ட அன்று எந்த விவாதமும் நடைபெறுவதில்லை.

பட்ஜெட் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது

பட்ஜெட் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது

வரவு-செலவு திட்ட விவாதமானது இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது.

1. பொது விவாதம்
2. விரிவான விவாதம்

 

பொது விவாதம்

பொது விவாதம்

பட்ஜெட் தாக்கல் செய்த ஓரிரு நாட்களுக்குப்பின், மாநிலங்களவையில் 2-3 நாட்களுக்குப் பொதுவான விவாதம் நடைபெறும். நிதி அமைச்சர் பதிலளித்த பின் விவாதம் ஒரு முடிவுக்கு வருகிறது. நிதி ஆண்டில் ஆரம்ப மாதங்களில் ஏற்பட்ட செலவினங்களைச் சரிக்கட்ட வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் கருத்துக்கள் பெறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் சபை ஒத்தி வைக்கப்படுகிறது.

விரிவான விவாதம்

விரிவான விவாதம்

இடைவேளையின் போது மானியங்கள் பற்றிய கோரிக்கைகள் உரிய நிலைக் குழுக்களால் ஆராயப்படுகிறது. இந்தக் கோரிக்கைகள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

எந்த ஒரு உறுப்பினரும் பின்வரும் மூன்று இயக்கங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளைப் பெற முடியும்.

1) கொள்கை குறைப்பு ஒப்புதலின்மை
2) பொருளாதாரம் குறைப்பு
3) டோக்கன் குறைப்பு

மானியங்கள் பற்றிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் கடைசி நாளில், நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்குச் சபாநாயகர், சபையில் வாக்கெடுப்பை முன்வைக்கிறார்.

 

பட்ஜெட் இயற்றம்

பட்ஜெட் இயற்றம்

மானியக் கோரிக்கைகளுக்குப் பின், மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் இந்தியாவின் திரட்டு நிதியிலிருந்து எடுத்துச் செலவிட அரசு, அதிகாரங்களை வழங்குகிறது.

பாராளுமன்றத்தில் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் நிதி மசோதா கருதப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

நிதி மசோதா இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு 75 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் அனுமதி பெறப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி கையெழுத்திட்ட பின் வரவு-செலவு திட்ட செயலாக்கம் முடிவடைகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is a budget? Who makes the budget? How is the budget made?

What is a budget? Who makes the budget? How is the budget made?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X