‘உதான்’ திட்டம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

உதான் திட்டத்தைப் பிரதமர் மோடி அவர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மலை பிரதேசத்தில் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். எனவே நாம் இந்தத் திட்டம் பற்றி முழுமையாக இங்குப் பார்ப்போம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் பிராந்திய விமான அமைப்பை நேற்று கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்கு 'உதான்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என்று அர்த்தமாகும்.

 

உதான் திட்டத்தைப் பிரதமர் மோடி அவர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மலை பிரதேசத்தில் வியாழக்கிழமை கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். எனவே நாம் இந்தத் திட்டம் பற்றி முழுமையாக இங்குப் பார்ப்போம்.

உதான் திட்டம்

உதான் திட்டம்

விமானப் பயணத்தைச் சந்தை அடிப்படையிலான வழிமுறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்படும் உலகளாவிய ரீதியில் முதன்மையானது உதான் திட்டம் எனப் பிரதமர் மோடி நேற்று டிவிட் செய்திருந்தார்.

முதல் படி

முதல் படி

உதான் திட்டத்தின் மூலம் முதலில் சிம்லா-தில்லி, கடப்பா-ஹைதராபாத் மற்றும் நந்தேட்-ஹைதராபாத் வழித்தடங்களில் விமானச் சேவை நேற்று முதல் துவங்கப்பட்டது.

விமான டிக்கெட் எவ்வளவு?

விமான டிக்கெட் எவ்வளவு?

1 மணி நேர விமானப் பயணம் அல்லது 500 கிமி தூரம் கொண்ட விமானப் பயணங்களுக்கு அதிகபட்சம் 2,500 ரூபாயாக விமானக் கட்டணம் இருக்கும்.

ஹெலிகாப்ட்டர்
 

ஹெலிகாப்ட்டர்

ஹெலிகாப்ட்டர் மூலமாகவும் 30 நிமிடம் வரை அதிகபட்சம் 2,500 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம்.

விமான நிலையங்கள்

விமான நிலையங்கள்

இந்திய விமான நிலையங்கள் அமைப்பு 27 பரிந்துரைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் பயன்பாட்டில் உள்ள 27 விமான நிலையங்கள், குறைந்த அளவு பயன்பாட்டில் உள்ள 12 விமான நிலையங்கள் மற்றும் முறையாகப் பயன்படுத்தாமல் இருக்கும் 31 விமான நிலையங்கள் உள்ளிட்ட 70 விமான நிலையங்கள் மூலமாக உதான் சேவை அளிக்க இந்திய விமான நிலையங்கள் அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

விமான நிறுவனங்கள்

விமான நிறுவனங்கள்

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேவை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஸ்பைஸ் ஜெட், டர்போ மேகா ஏர்வேஸ், ஏர் டெக்கான் மற்றும் ஏர் ஒரிசா ஆகிய விமானச் சேவை நிறுவனங்கள் இந்தப் புதிய சேவையை அளிக்க முன்வந்துள்ளன.

சீட்டுகள்

சீட்டுகள்

உதான் சேவை அளிக்கும் விமானங்கள் பொதுவாக 19 முதல் 78 நபர்கள் அமரக்கூடியதாக இருக்கும். 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் இந்த 2,500 ரூபாய் சலுகை அளிக்கப்படும்.

பயனடையும் பகுதிகள்

பயனடையும் பகுதிகள்

தெற்கு மாநிலங்களில் இருந்து 11 விமான நிலயங்களும், மேற்கு மாநிலங்களில் இருந்து 24 விமான நிலயங்களும், வடக்கு மாநிலங்களில் இருந்து 17 விமான நிலயங்களும், கிழக்கு மாநிலங்களில் இருந்து 12 விமான நிலயங்களும், வட கிழக்கு மாநிலங்களில் இருந்து 6 விமான நிலையங்களும் விமானச் சேவை அளிப்பதினால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here’s all you need to know about UDAN flight scheme

Here’s all you need to know about UDAN flight scheme
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X