துபாயில் உங்கள் பெற்றோர்களுக்கு 'ரெசிடென்ட் விசா' வாங்குவது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறைந்தபட்சம் 25,000 டிர்ஹம்கள் அல்லது மாதம் 19,000 டிர்ஹம்களுக்கும் கூடுதலாக சம்பளம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரண்டு படுக்கை அறை கோண்ட வீடு இருக்கும் போது அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரு வருடம் புதுப்பிக்கத்தக்க குடியுரிமை விசாக்கள் வழங்கும் முறையை பரிசோதனை முறையில் அளிக்க முடிவு செய்துள்ளது.

 

தாய், தந்தை இருவருக்கும் எப்படி யூஏஈ விசா பெறுவது?

தாய், தந்தை இருவருக்கும் எப்படி யூஏஈ விசா பெறுவது?

புதிய விதிகளின் படி உங்களது தாய் நாட்டில் பெற்றோரை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்றும் உங்களது பெற்றோருக்கு நீங்கள் ஒருவர் தான் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விசா பெற்றுக்கொள்ளலாம்.

பெற்றோர்கள் விவாகரத்து பெற்று இருந்தால் அல்லது இறப்பை சந்தித்து இருந்தால்

பெற்றோர்கள் விவாகரத்து பெற்று இருந்தால் அல்லது இறப்பை சந்தித்து இருந்தால்

ஒருவேலை பெற்றோர்கள் விவாகரத்து பெற்று இருந்தால் அல்லது ஒருவர் இறந்து இருக்கும் போது அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவு அனுமதிப்பத்திர விசாவைப் பெறுவதற்கு, குடியுரிமை மற்றும் ரெசிடென்சி துபாய் துறையை (DNRD) பார்வையிடவும், இதுவே நீங்கள் நிரந்தர குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதற்கு இது முதல் படியாகும்.

நுழைவு விசா
 

நுழைவு விசா

உங்களது பெற்றோரை நுழைவு விசா பெற்று யூஏஈ அழைத்து வந்த 60 நாட்களுக்குள் நிரந்த குடியேற்ற விசாவை பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

1. டைப்ங் மையங்களில் டைப் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்

2. பெற்றோர் / கள் மற்றும் உங்களது அசல் பாஸ்போர்ட் அளவு போட்டோ

3. பெற்றோர்/களின் ஒரு புகைப்படம்

4. உங்களுடைய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திலிருந்து உறவை உறுதிப்படுத்தும் சான்று மற்றும் உங்களுடைய பெற்றோர் / பெற்றோருக்கு ஒரே பாதுகாவலர் நீங்கள் மட்டும் தான் என்பதற்கான அத்தாட்சி பெற்ற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

5. நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து வேலை ஒப்பந்த நகல் அல்லது சம்பள சான்றிதலை சமர்ப்பிக்க வேண்டும்.

படிகள்

படிகள்

1. மேலே குறிப்பிடப்பட்ட தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு துபாயில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரக அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

2. உங்களுடைய பெற்றோர் / நண்பர்களுக்கான நுழைவு விசாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் வேண்டுகோள் விடுக்க உங்கள் பக்கத்திலிருந்து ஒரு கடிதத்துடன், அனைத்து ஆவனங்களையும் அவர்களிடம் சமர்ப்பிக்கவும்.

3.இரண்டு வாரத்தில் அனுமதிகள் வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற விவரங்கள் அளிக்கப்படும்.

4. கட்டணம் செலுத்திய பின்னர் ஒரு பதிவுசெய்யப்பட்ட தட்டச்சு படிவத்தை முடிக்க வேண்டும்.

5. DNRD இன் வதிவிட பிரிவில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.

6. நுழைவு அனுமதிப்பத்திரம் வழக்கமாக 48 மணிநேரத்திற்குள் Empost மூலம் அனுப்பப்படும், அல்லது நீங்கள் அவசர விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், நீங்கள் சில நிமிடங்களில் கவுண்டரில் இருந்து அனுமதியை பெற முடியும்.

கட்டணம்

கட்டணம்

2,000 டிர்ஹம் திரும்பப் பெறக் கூடிய டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். ரசீதுகளை பத்திரமாக வைத்து இருக்க வேண்டும். ஒரு வேலை விசா நிராகரிக்கப்பட்டால் அல்லது இறக்க நேர்ந்தால் கட்டணம் தொகையை திரும்பப் பெற ரசீது கட்டாயம் தேவை.

விண்ணப்பம் மற்றும் டைப்பிங் கட்டணமாக 110 டிர்ஹம் செலுத்த வேண்டும். ஒருவேலை விரைவாக விசா வேண்டும் என்றால் கூடுதாலாக 100 டிர்ஹம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

நிரந்தர விசா பெறுதல்

நிரந்தர விசா பெறுதல்

நுழைவு விசா பெற்ற 60 நாட்களில் நிரந்தர விசா பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

1. பெற்றோர்/களின் விண்ணப்பதுடன் கூடிய மூன்று பாஸ்போர்ட் புகைப்படம்

2. பெற்றோர் மற்றும் உங்களுடைய அசல் பாஸ்போர்ட்

3. அசல் நுழைவு அனுமதி ஆவணம்

4. பெற்றோரின் சுகாதார அட்டை

5. திரும்பப்பெறும் தொகையின் வைப்பு ரசீது

6. அசல் வேலை அனுமதி அல்லது சம்பள சான்றிதல்

படிகள்

படிகள்

1. மருத்துவ சோதனை செய்து மருத்துவ கார்டு பெற்றுக்கொள்ள வேண்டும்

2. அனைத்து ஆவனங்களையும் எடுத்துக்கொண்டு துபாய் ரெசிடென்சி விவகார பொது இயக்குநரகம் சென்று டைப் செய்ய செலுத்த வேண்டிய கட்டணத்தை அளிக்க வேண்டும்.

3. நிரந்தர விசா பிரிவுக்கு சென்று அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

4. விசாவுடன் கூடிய பாஸ்போர்ட் ஸ்டாப் குத்தப்பட்டு Empost வழியாக அனுப்பி வைக்கப்படும்.

6. 600 டிர்ஹம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை பெற்றோர்கள் பெயரில் எடுக்க வேண்டும்.

கட்டணம்

கட்டணம்

ஒவ்வொறு வருடமும் 110 டிர்ஹம் டைப்பிங் கட்டணம் இல்லாமல் செலுத்த வேண்டும். வேகமாக விண்ணப்பம் செயல்பட கூடுதலாக 100 டிர்ஹம் செலுத்த வேண்டும். Empost கட்டணமாக 10 டிர்ஹம் செலுத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to get UAE residence visa for your parents in Dubai in Tamil

How to get UAE residence visa for your parents in Dubai in Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X