குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க குழந்தை நலத்திட்டம் அவசியமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உங்களில் பெரும்பாலானோருக்கு உங்கள் குழந்தையின் கல்விக்கு ஒரு 'பாதுகாப்பான வழிமுறை' என்பதற்கு அர்த்தம் சேமிப்பு என்பதாகவே இருக்கும். பெரும்பான்மையான பெற்றோர் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் செலுத்த வேண்டிய நேரம் வரும் போது அவர்கள் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருக்கத் தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பதையே நம்புகிறார்கள்.

 

இருந்தாலும் அவர்களில் பலர் இறுதியில் உயர்ந்த வட்டி விகிதங்களுக்குக் கல்விக் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

கல்வியின் முக்கியத்துவம்

கல்வியின் முக்கியத்துவம்

கல்வி நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இந்தியாவின் இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமானதாகும்.

ஏனென்றால் இது சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கு உறுதியளிக்கும் அரசாங்கத்தைக் கொண்ட நம்பிக்கையளிக்கும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பரந்த வாய்ப்புகள்

பரந்த வாய்ப்புகள்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கல்வி மிகப் பெரிய அளவில் பன்மயமாக்கப்பட்டுள்ளது. எனவே 2015-16 ஆம் நிதியாண்டுகளில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்திய கல்விச் சந்தையின் மதிப்பு 2016-17 ஆம் நிதியாண்டுகளில் 116.4 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உங்கள் குழந்தைகள் தேர்வு செய்வதற்குப் பரந்த பல்வேறு வகையான பாடத்திட்டங்களும் மற்றும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

கல்வி செலவுகள்
 

கல்வி செலவுகள்

அதே சமயம் இது நிச்சயமாக நாம் எதிர்நோக்கும் ஒரு நல்ல விஷயம் தான் என்றாலும், இந்தக் கதையின் மறுபக்கமானது, கடந்த 7 வருடங்களில் இந்தியாவில் கல்விக்கான செலவுகள் இருமடங்காகியுள்ளது. மேலும் அடுத்த 15 வருடங்களில் இந்தியாவில் கல்விக்கான செலவுகள் தற்போதுள்ள கட்டணங்களைப் போல 4 மடங்காகும் என்று கூறுகிறது.

உயர்வு

உயர்வு

தற்போதைய நிலவரங்களைப் பார்க்கும் போது, உங்கள் பிள்ளைகள் ஒரு தொழிற்முறை படிப்பையோ அல்லது உயர்கல்வி துறைகளையோ தேர்வு செய்து படிக்க முடிவெடுக்கும் காலம் வரும் போது, கல்விக்கான செலவுகள் பல மடங்குகள் உயர்ந்து விடும் என்று சொன்னால் அது மிகையாகாது.

வருமானம்

வருமானம்

ஆனால் உங்கள் வருடாந்திர சராசரி சேமிப்பும் அதே போல உயரும் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? வரவிருக்கும் வருடங்களில் உங்கள் குழந்தையின் உயர்கல்வி செலவுகளை எதிர்கொள்ளப் போதுமான நிதிகள் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறதா?

சரியான நேரம்

சரியான நேரம்

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால் இது நிச்சயமாக நீங்கள் தற்சோதனை செய்ய வேண்டிய மற்றும் உங்கள் குழந்தைகள் அவர்களது வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் இலட்சியங்களையும் மற்றும் கனவுகளையும் நீங்கள் நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான வழிமுறைகளையும் தேட வேண்டிய ஒரு நேரமாகும்.

இடைவெளி

இடைவெளி

ஒவ்வொரு வருடமும் கல்வி கட்டணங்களின் உயர்வு மற்றும் தனி நபர் வருமானத்துக்கும் இடையே உள்ள பரந்த இடைவெளியே இதன் பின்னணியில் உள்ள எளியக் காரணம் ஆகும்.

ரிசர்வ் வங்கியின் கூற்றின் படி, கல்விக்கான பணவீக்கம் தொடர்ந்து 7 முதல் 8 % உயர்ந்து கொண்டே இருக்கும். அப்படியென்றால், இன்று ரூபாய் 5 இலட்சங்கள் வரை செலவாகும் அதே பட்டப்படிப்பிற்கு, இப்போது முதல் சரியாக 20 வருடங்களில் உங்களுக்குக் கிட்டத்தட்ட 20 இலட்சங்கள் ( 2 மில்லியன்) வரை செலவாகும்.

குழந்தை நலத்திட்டத்தின் அவசியம்

குழந்தை நலத்திட்டத்தின் அவசியம்

எனவே உங்கள் குழந்தை உயர் கல்விக்குச் செல்லும் நேரத்தில் நீங்கள் வங்கியிலிருந்து எடுக்கும் உங்கள் சேமிப்பு பணமும் கூட அந்தத் தருணத்தில் பற்றாக்குறையாக இருக்கும்.

ஆகவே ஒரு குழந்தை நலத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இன்று முதலே சேமிக்கத் தொடங்குவதென்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். மேலும் அந்தத் திட்டம் உங்கள் குழந்தை விரும்பித் தேர்ந்தெடுக்கும் துறையில் சிறந்த உயர்கல்வியைப் பெற முடியுமென்பதை உறுதி செய்கின்றது.

முக்கியமானது

முக்கியமானது

நீங்கள் மிகச் சிறந்த குழந்தை கல்வித் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, உங்கள் குழந்தையின் கல்வி காலத்தில் வெவ்வேறு நிலைகளில் வரும் வெவ்வேறு மைல்கற்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகிறது.

எந்தத் துறை.. எந்தப் படிப்பு..

எந்தத் துறை.. எந்தப் படிப்பு..

உங்கள் பிள்ளைகள் உயர்கல்வி கற்க போகும் போது எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பார் என்பதை உங்களால் முன்கூட்டி கணிக்க முடியாது. உதாரணமாக, அது ஒரு 4 நீண்ட ஆண்டுக்காலப் பொறியியல் பட்டப்படிப்பாக இருக்கலாம், 5 ஆண்டுக்கால எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப்படிப்பாக இருக்கலாம் அல்லது 3 ஆண்டுக்காலப் பட்டப்படிப்புப் பாடமாக இருக்கலாம். எனவே ஒரு நெகிழ்தன்மை உடையத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

தேவையைப் பூர்த்திச் செய்யலாம்

தேவையைப் பூர்த்திச் செய்யலாம்

மேலும் அந்தத் திட்டக் காலத்தின் கடைசி வருடங்களில் திட்ட விதிமுறைகளின் படி, நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் தேர்வை ஒத்தி வைப்பதன் மூலமாகவோ அல்லது முன்கூட்டி பெறுதலின் மூலமாகவோ, உங்கள் குழந்தையின் கல்விக்கான எதிர்பாராத செலவுகளை வரையறுத்துக் கொள்ளலாம்.

குழந்தை கல்வித் நலத்திட்டங்களில் வழங்கப்படும் பணத்தைத் திரும்பப் பெறும் தேர்வுகளைத் தவிர இதில் உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால், இது திட்டக் காலத்தின் இறுதி நாள் வரை ஒரு காப்பீட்டுத் திட்டமாகச் செயல்படுகிறது. மேலும் குழந்தையின் கல்வி காலத்தில் எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் செலவுகளுக்கும் நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

கட்டண விலக்குச் சலுகை

கட்டண விலக்குச் சலுகை

இந்தக் குழந்தை நலத்திட்டத்தில் வேவர் ஆஃ பிரீமியம் (WOP) எனப்படும் காப்பீட்டு கட்டண விலக்குச் சலுகை ஒரு கவர்ச்சிகரமான சிறப்பம்சமாகும். இதன் பொருள் பாலிசிதாரருக்கு ஏதேனும் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தால், பாலிசிதாரரால் நியமிக்கப்பட்டவர் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டு முனைமத் தொகையைப் பெற்றுக் கொள்வார்.

அதே சமயம் பாலிசி ரத்து செய்யப்பட மாட்டாது மற்றும் மேற்கொண்டு பிரீமியம் செலுத்த தேவையில்லை. கூடுதல் சலுகையுடைய திட்டங்களுக்குப் பணம் செலுத்தி இருந்தால், பாலிசிதாரருக்கு விபத்து ஏற்பட்டால் கூட, பாலிசியைப் பிரீமியம் செலுத்தாமலே தொடரலாம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

எதிர்பாராத நிகழ்வுகள்

எதிர்பாராத நிகழ்வுகள்

சில திட்டங்களில், எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால், உடனடி கல்விச் செலவுகளை எதிர்கொள்ள உதவும் வகையில், மொத்த உறுதி செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையில் 1% சதவிகிதத்தை மாதாந்திர வருமானமாக ஐந்து வருடங்களுக்குப் பெறும் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இலக்கை நோக்கிய பயணம்

இலக்கை நோக்கிய பயணம்

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்குச் சீரமைக்கப்பட்ட சேமிப்புத் தேவைப்படுகிறது. நீங்கள் உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அதே சமயம் இதர நிதி இலக்குகளையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் சேமிப்பதில் சிரமங்கள் அதிகரித்து வருகிறது.

ஒரு குழந்தை நலத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதென்பது, உங்கள் குழந்தையின் கல்விக்கான குறிப்பிட்ட இலக்கை நீங்கள் எதிர்கொள்வதற்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிக்கும் பழக்கத்தில் உங்களை ஈடுபடுத்துகிறது.

இன்றே துவங்குங்கள்

இன்றே துவங்குங்கள்

இன்றைய உலகில், கல்வியானது ஒரு முழுமையான புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ள நிலையில், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த மனதும் உடலும் வளர்ச்சியடையத் தேவையானவற்றைக் கொடுக்கும் ஒரு வழிமுறையை நீங்கள் அவர்களுக்குத் தர வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதில் இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை.

குழந்தை நலத்திட்டம்

குழந்தை நலத்திட்டம்

இப்போதே உங்கள் குழந்தைக்கு ஒரு சரியான குழந்தை நலத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்த உங்கள் மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம் மேலும் உங்கள் குழந்தையை எப்படிச் சாத்தியமான வழிகளில் சிறப்பாக வளர்க்கலாம் என்பதில் கவனத்தைச் செலுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why you must secure the future of your child with a child plan

Why you must secure the future of your child with a child plan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X