பொதுவாக நேர்முக தேர்வில் கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் அளிக்க வேண்டும்? (பகுத

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணிக்கு விண்ணப்பிக்கும் எந்தவொரு வேலை தேடுபவருக்கும் நேர்முகத் தேர்வு மிகவும் முக்கியமான கட்டமாகும். நேர்காணல் செய்பவர்கள் பல கேள்விகளுடன் தயாராக இருப்பர். வேலைத் தேர்வுக்குரியவர் திறமையான பதில்களுடன் அவர்களைச் சமாளிக்க வேண்டும். நேர்காணல் என்பது நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வேலைச் சம்பந்தமான கேள்விகளையும், வேலை தேடுபவரைப் பற்றிய விவரங்களையும் கேட்பதன் மூலம் திறமையான ஊழியர்களை அடையாளம் காண்பிக்கும் ஒரு தளமாகும். நிறைய நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள் பெரும்பாலும் வேலை தேடுபவரைப் பற்றியும், அவரது / அவளது கல்வி, முன் பணி அனுபவம் பற்றி மட்டுமே இருக்கும். எனினும், வேலை தேடுபவர் பற்றிய அறிமுகம் முடிந்தவுடன், நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள் தொழில்நுட்பமாக அதாவது வேலைக்கு மிகவும் பொருத்தமான, தேவைப்படும் திறன் குறித்த கலந்துரையாடலாக மாறும். இந்த நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள் மாணவர்களுக்கு, அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களுக்கு, புதியதாக வேலை தேடுபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்தக் கட்டுரையில் உலகம் முழுவதும் பொதுவாக நேர்காணல்களில் அல்லது பேட்டிகளில் கேட்கப்படும் 15+ அடிப்படை கேள்வி பதில்கள் இடம்பெற்றுள்ளன.
நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்களின் முக்கியத்துவம்

நேர்காணல் என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான ஒரு கலந்துரையாடல் மட்டும் அல்ல. ஆனால் வேலை தேடுபவர்களைப் பற்றிய விரிவான புரிதலை பெற ஒரு வழி ஆகும். நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மனிதவள அதிகாரிகள் (எச்.ஆர்) நேர்காணல் கேள்விகளை முழுமையாகத் தயாரித்து, வேலை தேடுபவர் பொருத்தமான பதில்களுடன் வருவதை எதிர்பார்க்கின்றனர். ஒரு நேர்காணலின் கேள்விகள் பணி, நிறுவனம் அல்லது வேறு எந்தத் தலைப்பிலும் கவனம் செலுத்தலாம். வேலை தேடுபவர் ஒரு நல்ல பதிலைக் கொடுக்கத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் பெரும்பாலும் நேர்காணல்களைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ஒரு விவாதமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு நேர்காணலில் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் அவர்களின் ஆளுமை, நம்பிக்கையுடன் கூடிய பதில்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வேலை தேடுபவரையும் மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு தனிநபரை பணியமர்த்தும் போது நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் மனிதவள அதிகாரிகளால் கேட்கப்படும் மிகவும் பொருத்தமான நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள் சில இங்கு உள்ளன.

பொதுவான நேர்முகக் கேள்விகளுக்குச் சிறந்த பதில்கள்:

கீழே குறிப்பிடப்பட்ட கேள்விகளின் பட்டியலுக்குப் பதில்கள் கீழே உள்ளன.

1.

1. "உங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்" என்ற நேர்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

இது எப்போதும் ஒரு நேர்காணல் செய்பவர் வேலை தேடுபவரிடம் கேட்கும் முதல் நேர்காணல் கேள்வி. இந்தக் கேள்வி உங்களிடம் உங்களைப் பற்றிச் சுவாரஸ்யமான ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகும். மேலும் வேலை தேடுபவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இது நேர்காணலின் சூழ்நிலையை இலகுவாகி வேலை தேடுபவர் தன்னைப் பற்றித் தானே கூறுவதாகும். கல்வித்தகுதி (பள்ளி, பட்டம்), வேலை அனுபவம் (ஏதாவது இருந்தால்), கூடுதல் பாடநெறி சாதனைகள், குடும்பப் பின்னணி, சுவாரஸ்யமான வாழ்க்கை அனுபவங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை விவாதிக்க முக்கியமான விஷயங்கள். இந்தக் கேள்விக்குச் சிறந்த பதிலை, மேற்கூறிய அளவுக்குள் சுருக்கமாகவும் ஒரு நிமிடத்திற்கும் மேலாக எடுத்துக் கொள்ளாமலும் தரவேண்டும். மேலும், இந்தக் கேள்வியுடன் நேர்காணல் ஆரம்பம் என்பதால், தங்கள் பதில்களை நம்பிக்கையுடன் மற்றும் நன்கு கட்டமைப்புடன் பதிலளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நேர்காணலின் போது அளிக்கப்படும் பதில்கள் நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்த உங்கள் சுய விவரக்குறிப்புகளின் வரிசையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்வி மனிதவள அதிகாரி அல்லது நிறுவன அதிகாரிக்கு உங்கள் தனிப்பட்ட பின்னணி, ஆளுமை பண்புகள், மொழி ஆளுமை மற்றும் உங்கள் நம்பிக்கை நிலைகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. எனவே, நேர்காணலில் இந்தக் கேள்வியின் பதிலுக்கு முழுமையாகத் தயாராக இருப்பது மிகவும் அவசியம்.

 

2.
 

2. "உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

இது நேர்காணலின் போது மிகவும் தந்திரமான கேள்வியாகும். அதைச் சாதுரியமான பதிலுடன் சமாளிக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சிறந்த வழிகளைப் பார்க்கலாம்.

ஒரு போட்டியாளர் உங்கள் வலிமையைப் பற்றிக் கேட்கும்போது, அவர்கள் வேலை தேடுபவரின் நல்ல விஷயங்களை அல்லது திறமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விழைகிறார்கள். உங்களுக்கு உங்கள் சொந்த பலம் தெரியும் என்பதால், பதில் மிகவும் சுருக்கமாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். உங்கள் வலுவான திறமைகள் மற்றும் ஆளுமை பண்புகளைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டும். உங்கள் பலம் பற்றிப் பதில் தரும் போது நல்ல பகுப்பாய்வாளர், வலுவான அணி வீரர், தலைமை திறன்கள் கொண்டவர், வலுவான மொழி ஆளுமைத் திறன்கள், நல்ல படைப்பாற்றல் முதலிய சிறப்பம்சங்களை உயர்த்திக் காண்பிக்கலாம். தேவைப்பட்டால், உங்களுடைய பலங்களை அறிந்துகொள்வதற்கான கேள்விக்குச் சில உதாரணங்களை மேற்கோள் காட்டுங்கள்.

இதேபோல், பலவீனத்தைப் பற்றிய கேள்வியை நேர்காணலில் எதிர்கொள்ள ஒரு நல்ல பதில் தேவைப்படுகிறது. பலவீனம், கவனமாகச் சிந்திக்காவிட்டால், உங்களுக்கு எதிராகச் செல்லலாம். ஒவ்வொரு நபருக்கும் ஆளுமை பண்பு மற்றும் திறமை உள்ளது. இது அவர்கள் மேம்படுத்த விரும்பும் பகுதியாகும். மொழி ஆளுமை, நீண்ட காலமாகக் கவனம் செலுத்துவது, உள்முகச் சிந்தனையாளர்களாக இருப்பது போன்ற விஷயங்களைப் பதிலாகத் தரலாம். இவை நேர்காணலை பாதிக்காமல் உங்கள் பலவீனங்களைப் பற்றி ஒரு நுட்பமான வழியில் கேள்விக்குப் பதிலளிக்க உதவுகிறது. பலவீனத்தின் பதிலை முடிக்கையில், நீங்கள் நேர்காணல் செய்பவரிடம் பலவீனத்தை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்பதை அறிவியுங்கள்.

 

3.

3. "நாங்கள் ஏன் உங்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வி மிகவும் பொருத்தமானது ஏனென்றால், அவர்கள் போதுமான நிபுணத்துவம் மற்றும் அறிவுடன் வேலையில் தனது பங்கை நிறைக்கும் ஒருவரைத் தேடுகிறார்கள். இந்தக் கேள்விக்குப் பதிலாக ஒருவர் நேர்க்காணல் நடக்கும் வேலைக்கான தனது தகுதிகள், திறமைகள் மற்றும் அறிவை பற்றிய தகவல்களைப் பகிர வேண்டும். நேர்காணல் நடத்துபவர் வேலை தேர்வுக்குரியவர் கொண்டிருக்கும் தகுதிகளைப் புரிந்துகொள்ள விரும்புகிறார். மேலும் இது வேலை தேடுபவர் வேலையில் தனது பங்கை முழுமையாகப் புரிந்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்கிற குறிப்பைத் தருகிறது. எனவே, பழைய தொழிற்முறை சாதனைகள், உங்கள் அறிவாற்றல், ஒரு குறிப்பிட்ட தொழிற்துறை/பிரிவில் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல் இந்த நேர்க்காணல் கேள்வியில் நல்ல பதிலை கட்டமைக்க உதவும்.

4. தற்போது முதல் 5 வருடங்களுக்குப் பிறகு உங்களை நீங்கள் எங்குக் காண்பீர்கள், என்னும் நேர்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

4. தற்போது முதல் 5 வருடங்களுக்குப் பிறகு உங்களை நீங்கள் எங்குக் காண்பீர்கள், என்னும் நேர்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

இந்த நேர்க்காணல் கேள்வி வேலைத் தேர்வுக்குரியவரைப் பற்றி இரண்டு விஷயங்களைப் பரிசோதிக்கிறது. முதலாவதாக அது வேலைக்கு விண்ணப்பித்த தேர்வுக்குரியவர் எந்த அளவுக்கு அந்த வேலை தொடர்பான தொழிற்துறை, பிரிவுகள் மற்றும் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் அதிகாரத்துவ முறை ஆகியவற்றை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்று பார்க்கிறது. இரண்டாவதாக, இந்தப் பதில் ஒரு நபர் எந்த அளவுக்குத் தொழில் வாழ்க்கையில் கவனமாகவும் மற்றும் இலட்சியவாதியாகவும் இருக்கிறார்.

மேலும் அவள்/அவருடைய தொழிலில் உயர் இலட்சியங்கள் என்ன என்பதைத் தீர்மானிக்க உதவுகின்றன. ஒரு நபர் புத்திசாலித்தனமாக மூத்த நிர்வாகத்தின் மூலோபாயத் திட்டங்களைப் பற்றி முடிவுகளை எடுக்கும் பணிகளில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லலாம். இந்தக் கேள்விக்கான மற்றொரு பதில் ஒரு நபர் பெற்றிருக்கும் அனைத்து அறிவும் ஒரு சவாலை ஏற்றுக்கொள்வது அல்லது ஒரு புதிய தொழில் நிறுவனத்துடன் இணைவது என்பது போன்றதாகவும் இருக்கலாம். சில சமயங்களில் தொழிற்துறை சார்ந்த பக்கம் இருப்பது வேலை தேர்வுக்குரியவர் நன்றாக வேலை செய்யக்கூடியவர் என்பது போன்ற நல்ல நேர்மறையான அறிகுறியை காட்டும். எனவே, இந்தப் பதில்கள் வேலைக்கு விண்ணப்பிப்பவருடைய நேர்மறையான அணுகுமுறை, தொழில் வாழ்க்கையில் இலட்சியங்கள், மற்றும் தொழில் மீது கவனம் ஆகியவற்றை நேர்க்காணல் நடத்துபவருக்கு எடுத்துக் காட்டும்.

 

5. “உங்கள் தலைமைப் பண்பின் தரத்திற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்?” என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

5. “உங்கள் தலைமைப் பண்பின் தரத்திற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்?” என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

இந்த நேர்க்காணல் கேள்விக்கான பதில் முன்கூட்டி நன்கு தயார்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், ஏனென்றால், இது மிகப் பொதுவான ஒரு பதிலாக இருக்க முடியாது. இந்தப் பதிலுக்கான கட்டுமானம், உங்களது ஒரு அணி உறுப்பினர்களைத் தலைமை தாங்கி நடத்தும் திறன், பிரச்சனைகளைத் தீர்க்கும் திறமை, கடினமான முடிவுகளை மற்றும் தலைமை தாங்கும் திறமை ஆகியவற்றை உதாரணத்துடன் காட்டும்படியாக இருக்க வேண்டும். இந்தப் பதில் உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் ஒரு அணியைத் தலைமையேற்று ஒரு செயல்திட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை வழிகாட்டி நடத்திய முன்முயற்சியை மிகைப்படுத்திக் காட்டுவதாக அமைய வேண்டும். உதாரணத்தில் சொன்ன நிகழ்வுகளின் போது நீஙகள் எதிர்கொண்ட சவால்கள், நீங்கள் அவற்றை உங்கள் தலைமைப் பண்பைக் கொண்டு எவ்வாறு கடந்து வந்தீர்கள் மற்றும் உங்கள் சக பணியாளர்களை ஊக்குவிக்கும் திறன் ஆகியவற்றைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் விதமாக உங்கள் பதில்கள் இருக்க வேண்டும். பொதுவாக இந்தக் கேள்வி ஒரு குழுவாகப் பணியாளர்களைக் கையாளும் வேலை சுய விவரங்களைக் கொண்ட வேலைத் தேர்வுக்கு வந்தவர்களுக்கு நேர்க்காணல் நடத்தும் போது கேட்கப்படுகிறது. எனவே, ஒருவருடைய கடந்த காலத் தலைமைப்பண்பு பாத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

6. தொழில் முறையாளராக உங்கள் மிகப்பெரிய சாதனை என்ன? என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

6. தொழில் முறையாளராக உங்கள் மிகப்பெரிய சாதனை என்ன? என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

நேர்க்காணல் செய்பவர் இந்தக் கேள்வியின் வழியாக உங்கள் முந்தைய வேலையில் நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறார். இந்தக் கேள்விக்கான பதில் நீங்கள் வேலையில் இருந்த போது பல்வேறு செயல்திட்டங்களில் உங்களால் செய்யப்பட்ட வேலையைக் காட்சிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் சாதனைகளாக நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நீங்கள் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகள்,வருவாயை மேம்படுத்த வகுத்த யுக்திகள், செயல்படுத்திய செலவு குறைப்பு நடைமுறைகள், பெற்ற விருதுகள் அல்லது அங்கீகாரங்கள் போன்ற விஷயங்களாக இருக்கலாம். இந்தப் பதில் ஒருவர் தன்னைப் பற்றித் தற்பெருமை பேசிக் கொள்வதாக இருக்கக்கூடாது ஆனால் உங்கள் கடந்த கால வேலையில் நீங்கள் செய்த நற்பணிகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தொழிற்முறை சாதனைகளைப் பற்றிய பதில்கள் சில புள்ளி விவரங்கள் அல்லது எண்களோடு இருக்க வேண்டும். உதாரணமாக வருவாய் 8% உயர்ந்தது, விலைகளை 7% வரை குறைக்க உதவியது, வாடிக்கையாளர் திருப்தி 20% வரை அதிகரித்தது போன்றவையாக இருக்க வேண்டும். இது வேலையின் தேவைகளுக்கேற்ப நேர்க்காணல்களில் கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்வியாகும்.

 7. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலையின் தோற்ற முறையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

7. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலையின் தோற்ற முறையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

இந்த நேர்க்காணல் கேள்விக்கான விடை வழங்கப்பட்ட வேலை விவரத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தைப் பற்றி நிறைய ஆழமான ஆய்வு மற்றும் புரிதலுக்குப் பிறகு அளிக்கப்பட வேண்டும். இந்தப் பதில் வேலை தேர்வுக்குரியவர் இந்த வேலையில் திறம்படச் செயல்படுவதற்கு எந்தளவுக்கு வேலையின் விவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார், தேவையான பொறுப்புகள் என்ன, தேவைப்படும் திறமைகள் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டுகிறது. வேலை தேடுபவருடைய பதில்கள் சந்தையில் போட்டியாளர்களுக்கு நேரெதிராக நிறுவனத்தின் தற்போதைய நிலவரம், தொழிற்துறையின் சூழ்நிலை மற்றும் நிறுவனம் அதன் பணியாளரிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பன போன்றவற்றை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். வேலைக்கான நேர்க்காணலுக்கு வந்திருக்கும் வேலை தேர்வுக்குரியவர் வேலை தொடர்பான பொறுப்புகள், தேவையான வேலை அனுபவம், தேவையான நுண் திறன்கள், தேவைப்படும் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவரால் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை எனில் நேர்க்காணல் செய்பவர் வேலை தேடுபவர் முன்கூட்டி தயாராகவில்லை என்பதைத் தெளிவாகக் காண்கிறார். ஒரு வேலை தேர்வுக்குரியவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் சரி, வேலை தொடர்பான ஒரு தவறான அல்லது குழப்பமான பதில் நேர்காணலை பாழாக்கும் மேலும் நிறுவனத்தில் வேலையைப் பெறும் வாய்ப்பையும் இழக்கச் செய்யும்.

8. “நிறுவனத்திடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?” என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

8. “நிறுவனத்திடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?” என்கிற நேர்க்காணல் கேள்விக்கான சிறந்த பதில்

ஒரு வேலை தேடுபவர் நேர்க்காணலில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு அவர் அல்லது அவளுக்கு நிறுவனம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி நல்ல அறிதல் இருக்கிறது என்பதை நிசசயப்படுத்தும் வகையில் பதில் இருக்க வேண்டும். வேலை தேடுபவர் நிறுவனம் வழங்கும் சிறந்த வியாபார வெளிப்பாடு, இந்த வேலை துறையைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ளதல், நிலையான தொழில்வாழ்க்கை வளர்ச்சி, பயணம் செய்வதற்கும் மற்றும் புதிய மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள், புதிய திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றைப் பற்றிப் பேசலாம். இந்தப் பதில் இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது அதாவது, வேலை தேடுபவர் நிறுவனத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் அறிவு, அதன் கட்டமைப்பு, அதன் அதிகார படிநிலைகள் ஆகியன மேலும் வேலைக்கு விண்ணப்பித்தவர் வேலையில் இருக்கும் போது கற்றுக்கொள்வதற்கும் மற்றும் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஆர்வமாக இருப்பதையும் காட்டுகிறது. நிறுவன அதிகாரிகள் மற்ற கேள்விகளில் வேலை தேர்வுக்குரியவரைப் பற்றிச் சில குறிப்பிட்ட விஷயங்களில் சரியாக இருக்கிறார் என்று உணரும் போது இந்த நேர்க்காணல் கேள்வி கேட்கப்படுகிறது.

பகுதி - 2க்கு காத்திருக்கவும்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HR Interview Questions and Answers for Freshers & Experienced Professionals

HR Interview Questions and Answers for Freshers & Experienced Professionals
Story first published: Monday, November 6, 2017, 17:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X