ஓய்வூதிதத்திற்குத் திட்டமிடும் போது நீங்கள் செய்யவே கூடாத தவறுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015 ஆம் ஆண்டு நடத்ப்பட்ட உலகளாவிய ஓய்வு காலத்திற்குத் தயாராதல் பற்றிய மதிப்பாய்வில் சராசரியாக இந்திய ஊழியர்கள் ஒரு சீரான ஓய்வு கால வாழ்க்கையை மேற்கொள்ளத் தேவையான வருமானத்தை விட 30% குறைவான வருவாயைப் பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக மக்கள் ஓய்வு கால ஊதியத்தைத் திட்டமிடும் போது செய்யும் தவறுகள் மற்றும் அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம் வாருங்கள்.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

இது நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் கூட என்ன மாதிரியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் அடிக்கடி வெளியே சாப்பிட விரும்புகிறீர்களா? வாரம் தோறும் திரையரங்குகளுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? ஒவ்வொரு வருடமும் சர்வ தேச பயணங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? சொத்துக்கள் வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் ஓய்வுகால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று திட்டமிட முயற்சி செய்யவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள், எவ்வளவு பணத்தைச் சேமிக்கும் மற்றும் செலவழிக்கும் இலக்கைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமாகிவிடும்.

இதற்குத் தீர்வு உங்கள் ஓய்வு காலத்திற்சுகு எவ்வளவு பணம் தேவை என்பதை முடிவு செய்வதே ஆகும். பொதுவாக உங்கள் நடப்பு ஆண்டு வருமானத்தில் 80% ஓய்வு காலத்திற்குப் பிறகு தேவைப்படும். இந்த ஓய்வூதிய திட்ட கால்குலேட்டரைப் பயன்படுத்தித் துல்லியமான கணக்கை தெரிந்து கொள்ளுங்கள்.

மிகக் குறைவாகவும் மிகுந்த தாமதமாகவும் சேமித்தல்
 

மிகக் குறைவாகவும் மிகுந்த தாமதமாகவும் சேமித்தல்

உங்கள் இளம் வயதில், வீட்டுக் கடன்கள், கார கடன்கள் மற்றும் பல்வேறு காப்பீடு பாலிசிகள் போன்ற எந்தச் சுமைகளும் இல்லாத போதே, சொல்லப் போனால் நீங்கள் முதல் சம்பளம் பெறும் பேதிலிருந்தே ஓய்வு காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்க வேண்டும். ஆனால், இதுவரை நீங்கள் அப்படிச் செய்திருக்கவில்லை என்றாலும் கூட, இப்போதே உங்களுக்கு நீங்களே ஒரு சேமிப்புப் பரிசைத் தரத் தொடங்குங்கள். பணியாளர்களுக்கான சேமிப்பு வைப்பு நிதி (ஈபிஎஃப்) இதற்கான பாதுகாப்பான வழியாகும். இந்தத் திட்டத்தில் உங்கள் சம்பளத்தில் பெருமளவு சேமிக்க முடியும் மேலும் மற்ற வைப்பு நிதித் திட்டங்களை விட 8.5% க்கு நெருக்கமான லாப வட்டி விகிதத்தையும் தருகிறது. ஒரு விதிமுறையின் படி நீங்கள் எப்பொழுதும் உங்கள் மாத சம்பளத்தில் குறைந்தபட்சம் 30% மாவது சேமிக்க வேண்டும்.

பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப போதுமான அளவு திட்டமிடாமல் இருத்தல்

பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப போதுமான அளவு திட்டமிடாமல் இருத்தல்

ஒரு பொருளின் விலை இன்று ரூ. 50 என்று வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 7% பணவீக்கத்தில் 30 ஆண்டுக் காலத்தில் அதே பொருள் ரூ. 381 விலையை அடைகிறது. பணவீக்கத்தைச் சமாளிக்க ஓய்வு பெறுவதற்கு முன்பும் பின்பும் உங்கள் ஓய்வூதிய கணக்கீட்டில் சில சதவிகிதம் சேமிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல ரியல் எஸ்டேட்டில் செய்த உங்கள் முதலீடுகள் குறைந்த லாபம் தரும்போதோ அல்லது நீங்கள் வேலையை விட்டு நீக்கப்படும் சூழ்நிலை வரும்போதோ அத்தகைய பொருளாதாரச் சரிவுகளை நீங்கள் எதிர்க்கொள்ள நேரிடும் போது பின்புலத்தில் உங்களுக்கு ஆதரவாக இருக்க நீங்கள் சேமிப்பும் முதலீடும் செய்ய வேண்டியது அவசியமாகும்.

போதுமான மருத்துவக் காப்பீட்டை செய்து கொள்ளாமல் இருப்பது

போதுமான மருத்துவக் காப்பீட்டை செய்து கொள்ளாமல் இருப்பது

உங்கள் குடும்பப் பின்னணி மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆரோக்கிய நிலையைப் பொறுத்து நீங்கள் மருத்துவ நிகழ்வுகளைத் திட்டமிட சிறந்த வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களை நீங்களே மூன்று கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்

உங்கள் உடல்நலமே பெருஞ்செல்வம். அதை நீங்கள் சிறப்பாகக் காப்புறுதி செய்திருக்கிறீர்களா?

உங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அல்சைமர், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு எதிராகப் போதுமான அளவு காப்புறுதி அளிக்கக் கூடியதா?

இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை - உண்மையில் உங்களால் அதைப் பெற முடியுமா?

எது எப்படி இருப்பினும், நீங்கள் ஆரோக்கியத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியமானது. அதற்கான முயற்சிகளை எடுக்கத் தாமதம் செய்யாதீர்கள். நீங்கள் மருத்துவக் காப்பீட்டைத் தொடங்கவும், உங்களை ஆரோக்கியமாகப் பராமரித்துக் கொள்ளவும் இங்கே சில உண்மைகளையும் குறிப்புகளையும் தந்திருக்கிறோம்.

உங்கள் நிதிகளைப் பரவலாக முதலீடு செய்யாமல் இருத்தல்

உங்கள் நிதிகளைப் பரவலாக முதலீடு செய்யாமல் இருத்தல்

ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பாதுகாப்பானதும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கலாம் ஆனால் அதிக வருவாயைத் தரும் பங்குச்சந்தை திட்டங்கள் மற்றும் சமச்சீர் நிதித் தேர்வுகளான பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலல்லாமல், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் வரிப்பிடித்தம் போக 7 முதல் 8% வரை மிகக் குறைந்த வட்டி விகிதங்களையே தருகின்றன. எனவே நீங்கள் சரியான வழியில் உங்கள் முதலீட்டு வருவாயை அதிகரிக்க முதலீடுகளைப் பரவலாக்கி பல்வேறு நிதித் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

கூடுதல் ஆலோசனை

கூடுதல் ஆலோசனை

நிச்சயமாகத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பமாக இருந்தாலொழிய நீங்கள் ஓய்வு பெறும் போது வந்த பணத்தை வேறு எதற்காகவும் செலவு செய்ய வேண்டாம் என்பதை நாங்கள் தனியாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு புத்திசாலித்தனமான ஓய்வூதியத் திட்டம் என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீண்ட காலத்திற்கு ஒரு மகிழ்ச்சிகரமான மன அழுத்தங்களற்ற ஓய்வுகால வாழ்க்கையை அளிப்பதாக இருக்க வேண்டும். எனவே, இப்பொழுதே அதற்காகச் சேமிக்கத் தொடங்குங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five Retirement Planning Blunders to Avoid

Five Retirement Planning Blunders to Avoid
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X