நிறுவனத்தில் நீங்கள் செய்த வேலைக்கான நன்மதிப்பை முதலாளியிடம் இருந்து பெறுவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூட்டனின் மூன்றாம் விதி, ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு எனத் தெரிவிக்கின்றது. எனினும் நம்முடைய கார்பரேட் அனுபவத்தின் காரணமாக இந்த விதி செயல்படாத ஒரு இடமும் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது கார்பரேட் அலுவலகத்தில் நாம் நன்றாக உழைத்தால் அதற்குரிய பாராட்டு அல்லது பரிசு கிடைக்காது. அதே சமயம் நாம் ஏதேனும் தவறு புரிந்தால் அதற்குரிய தண்டனை வெகு நிச்சயமாக மற்றும் வெகு சீக்கிரமாகக் கிடைத்து விடும். நல்ல செயல்களில் நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்யாமல் அமைதி காத்து விடுகின்றது. ஏன் நியூட்டனின் மூன்றாம் விதி நல்ல விஷயங்களுக்கு மட்டும் வினை புரிவதில்லை? தவறு நம்முடைய முதலாளி மீதா? அல்லது நம் மீதா? முதலாளி என்பவர் எப்பொழுதும் தப்பிக்கவே பார்ப்பார். அவரை நாம் நம்மை நோக்கி திருப்ப வேண்டும். எனவே தவறு கண்டிப்பாக நம் மீது தான். இந்தத் தவறை எவ்வாறு நிவர்த்திச் செய்வது. வாருங்கள் தொடர்ந்து இந்தக் கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்வோம்.

 

நீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாகக் கிடைக்கக் கூடிய நற்பலன்களின் பங்கை நீங்கள் கண்டிப்பாகப் பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தாலும், அல்லது ப்ரீலேன்சராக இருந்தாலும் உங்களுடைய செயல்களின் காரணமாக உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பெயரை கண்டிப்பாகப் பெற வேண்டும். ஏனெனில் இந்த நற்பெயர் என்பது வெறுமனே கடந்து போகக் கூடியதன்று. அந்தப் பெயர் ஒரு ப்ராண்ட் மதிப்பைப் போன்றது. அந்தப் பெயருடன் உங்களுடைய பணி, பணம், பதவி உயர்வு, அதிகாரம், தொழில் முறை நிலை போன்றவை இணைந்திருக்கின்றன. அதை விட நீங்கள் செய்த செயலுக்குரிய பங்கு உங்களுக்குக் கிடைக்கவில்லை எனில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஆத்ம திருப்தியும் கிடைக்காது. எனவே நீங்கள் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய நற்பெயரின் பங்கை வேறு யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அவ்வாறு செய்வது உங்களுடைய தொழில்முறை வாழ்க்கையைக் கண்டிப்பாகப் பாதிக்கும். எனவே உங்களுடைய நற்பெயரை மற்றொருவர் திருடாமல் எவ்வாறு தடுப்பது?

முதலாவதாக, உங்கள் வாடிக்கையாளர், சக பணியாளர் அல்லது உங்களுடைய முதலாளி ஆகிய மூவரில், உங்களுடைய பணிக்கான நற்பெயரை திருடுகின்றவர் யார் என்பதை அடையாளம் காணுங்கள். ஒருவேளை நீங்கள் ப்ரீலேன்சராக இருந்தால் உங்களுடைய பணிக்கான பெயர் கிடைக்கின்றதா? என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு இல்லையெனில், வேறு ஒருவர் உங்களுடைய பணிக்கான பெயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால அதற்குரிய இழப்பீடு பணம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். இவை அனைத்து நீங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருக்கின்றதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இதுவே உங்களுடைய சக பணியாளராக இருந்தால், உங்களுடைய மேலாளர் உங்களுக்கு உதவலாம். அதுவே உங்களுடைய முதலாளி என்றால், சரியான சந்தர்ப்பத்திற்குக் காத்திருங்கள். அதுவரை அமைதியாக இருங்கள்.

இது ஒரு பெரிய விஷயமா?

இது ஒரு பெரிய விஷயமா?

உங்களுக்கான சந்தர்ப்பத்தைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்கவும். ஒருவருடைய பணியிடத்தில் நாம் புரியும் அனைத்து செயல்களுக்குமான நற்பெயர் கண்டிப்பாக நமக்குக் கிடைக்காது. உதாரணத்திற்கு ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நண்பர் தன்னுடைய புரோஜெட்டை முடிக்கத் திணறும் பொழுது அவருக்கு நீங்கள் கண்டிப்பாக உதவுவீர்கள். அவர் உங்களுடைய பெயரை கண்டிப்பாகக் குறிப்பிடமாட்டார். எனினும் பிரித்தொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அவர் கண்டிப்பாக உதவுவார். எனவே இந்தச் சிறிய விஷயங்களைக் கண்டிப்பாகப் புறந்தள்ளி விடுங்கள். அதே சமயத்தில் நீங்கள் முடித்துக் கொடுத்த ஒரு புரோஜெக்டை வேறு ஒருவர் தனதாக்கிக் கொள்ள முயலும் பொழுது வாய்மூடி மௌனமாக இருந்து விடாதீர்கள். இது கண்டிப்பாக உங்களுடைய தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே இத்தகைய நேரங்களில் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட மறவாதீர்கள்.

 இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதா?
 

இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதா?

ஒரு வேளை உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நற்பெயரை யாரேனும் திருடிக் கொண்டால் நீங்கள் மிகவும் கோபப்படுவீர்களா? கோபம் உங்களுடைய ஆற்றலை வீணாக்கி விடும். எனவே கோபத்தில் இருக்கும் பொழுது ஒன்றும் பேசாதீர்கள். அப்பொழுது ஏதேனும் பேச நேர்ந்தால் அதைப் பற்றிப் பிறகு வருத்தப்படுவீர்கள். எனவே இந்தச் சமயத்தில் என்ன செய்வது? சிக்கல் உண்மையானதா, அது உங்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும்,ம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் மிகவும் அமைதியாகச் சிந்தியுங்கள். அமைதி அடைந்த பின்னர் உங்களுடைய தொழில்முறை செய்கையைச் செய்யத் தொடங்குங்கள். அமைதி திரும்பிய பின்னர்த் தர்க்கரீதியாக உங்களுக்கான வாய்ப்புகளை அலசி அதன் படி செயல்படுங்கள்.

என்ன பேசுவது மற்றும் எப்படிப் பேசுவது?

என்ன பேசுவது மற்றும் எப்படிப் பேசுவது?

ஒரு வேளை நற்பெயர் திருட்டுக் காரணமாக நீங்கள் பாதிக்கப்பட்டால் உங்களுக்கு மேல் பொறுப்பில் உள்ள நபரை சந்தித்து, நீங்கள் கவனித்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவரின் மீது குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, அவரைப் பற்றிய மேல் அதிகாரியின் கனிப்பைப் பெற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குத் தகுந்த மாதிரி உங்களுடைய கேள்விகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இது தவிர்க்கமுடியாத சில பல தவறுகளை நீக்குகிறது மற்றும் தீர்க்கிறது. மேலும் இந்த விஷயத்தைப் பொருத்த வரை நீங்கள் எந்தவிதமான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அந்தப் பொறுப்பான நபர் சூழ்நிலையை உங்களிடம் விளக்கிய பிறகு, அதில் இருக்கும் பிழைகளை நீங்க உங்களுடைய பரிந்துரைகளை மிகவும் மெதுவாக மற்றும் அழுத்தமாகப் பரிந்துரையுங்கள். இதுவும் வேலை செய்யவில்லை என்றால், உங்களுடைய மேலாளரிடம் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவும்.

உங்கள் முதலாளியை எப்படிச் சமாளிக்க வேண்டும்?

உங்கள் முதலாளியை எப்படிச் சமாளிக்க வேண்டும்?

உங்கள் முதலாளி உங்கள் பணிக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய நற்பெயரை எடுத்துக் கொண்டால் அதைப் பாரபட்சமான செயல்பாடாகக் கருதுங்கள். உங்களுடைய அணி தனக்கான இலக்கை அடையும் பட்சத்தில், உங்கள் மேலாளர் அந்தப் பணிக்கான நற்பெயரைப் பெற்றுக் கொள்ளலாம். அவருக்கு அதற்கான முழுத் தகுதியும் உள்ளது. இங்கே எழக்கூடிய முக்கியமான கேள்வி என்னெவெனில், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நற்பெயரை உங்களுடைய அணியினரிடமாவது அவர் பகிர்ந்து கொண்டாரா? ஆம் எனில் உங்களுடைய நற்பெயர் உங்களுடைய அணியினரிடம் வளரத் தொடங்கும். இது மிகவும் முக்கியம்.

ஒரு வேளை அவர் உங்களுடைய அணியினரிடம் உங்களுக்கான நற்பெயரைப் பகிரவில்லை எனில், உங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பைப் பதிவு செய்ய உங்களுக்கான தொழில்முறை வல்லுனரிடன் மெதுவாக இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவும். அவருடைய ஆலோசனையின் படி இந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுங்கள். உங்களுடைய கருத்தை ஒருவேளை உங்களுடைய முதலாளி தன்னுடைய சொந்த கருத்து எனத் தெரிவித்தால், அந்தக் கருத்து உருவாக்கத்தில் உங்களுடைய முதலாளியின் பங்கு உள்ளதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய மேலாளர் உங்களுடைய கருத்தை உள்வாங்கி அதை மேலும் மெருகேற்றி ஒரு இறுதி யோசனையை வழங்கினால், அந்த இறுதி யோசனையில் உங்களுடைய பங்கும் இருக்கின்றது என்பதைப் பதிவு செய்ய மறவாதீர்கள். இவ்வாறு செய்வது இரண்டு பேருக்கும் நன்மை அளிக்கும். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

 உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்

வாழ்த்துக்கள்! யாரோ கடன் வாங்க முயற்சி செய்து திருடுவதற்கு ஏற்ற தரத்தில் உங்களுடைய வேலை மிகவும் சிறப்பாக இருக்கின்றது, என உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்தவற்றில் எது மிகவும் சிறப்பானது அதை எவ்வாறு செய்தீர்கள் என்பதை மீண்டும் பகுப்பாய்ந்து அறியுங்கள். உங்களுடைய பகுப்பாய்வு உங்கள் பலத்தை அடையாளம் காண உங்களுக்கு உதவுவதுடன், உங்களுக்கான வேலையில் உங்களுடைய திறனை உறுதிப்படுத்த உதவுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யுங்கள்

அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யுங்கள்

யாராவது உங்களிடமிருந்து உங்களுக்கான நற்பெயரைத் திருடுகின்றார்கள் என நீங்கள் நினைத்தால், அதைத் தடுக்கத் தகுந்த அதிகாரமில்லாமல் தவிக்கின்றீர்களா? ஆம் எனில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யுங்கள். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தகுதிப் படுத்திக் கொண்டு அதிகாரத்தை நோக்கி முன்னேறுங்கள். இதற்கு அர்த்தம் அரசியல் செய்வதல்ல. உங்களுடைய பணி மிகவும் முக்கியமானது மற்றும் அதைத் திறம்பட நிறைவேற்ற நீங்கள் தகுதியானவர். எனவே அந்தத் தகுதியைப் பயன்படுத்தி உங்களுக்குத் தீங்கு செய்ய நினைக்கின்றவர் யார் என்பதைக் கண்டறியுங்கள். மேலும் அவர் எதற்காகச் செய்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றுக் கொண்டே இருங்கள்

கற்றுக் கொண்டே இருங்கள்

இப்போது நற்பெயரை இழப்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? இந்தச் சூழ்நிலையில் இருந்து வெளிவர என்ன செய்யலாம். இந்தக் சூழ்நிலையில் வசித்ததன் மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள்? மிகவும் முக்கியமாக உங்களுடைய நற்பெயரைத் திருடும் நபரிடம் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக உங்களுடைய வேலையைப் பற்றி வேறு விதமாக உரையாடுங்கள் அவ்வாறு செய்வது நீங்கள் திருந்தி விட்டீர்கள் என்பதையும் உங்களிடம் இருந்து எதையும் கறக்க இயலாது என்பதையும் உங்களுடைய எதிரிக்குத் தெரிவித்து விடும்.

உங்களுடைய சாதனையை நீங்களே முறியடியுங்கள்.

உங்களுடைய திறன் என்ன என்பதை உலகுக்குக் காட்ட இது ஒரு அருமையான வாய்ப்பு. உணர்ச்சி வயப்பட்ட இந்தச் சூழ்நிலையை உங்களுடைய சொந்த சாதனைகளை உடைக்கவும் மற்றும் உங்களுடைய செயல்திறனை அடுத்த நிலைக்கு நகர்த்தவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய திறன் உங்களுடைய நற்பெயரைத் திருட நினைக்கும் அந்த நபருக்கு கண்டிப்பாகப் பொருந்தாது. ஏனெனில் உங்களிடம் உள்ள திறன் கண்டிப்பாக அவரிடம் இருக்காது. அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய நற்பெயரை யாராலும் திருட இயலாத நிலையை உருவாக்கும்.

தற்காப்பே சிறந்த ஆயுதம்.

தற்காப்பே சிறந்த ஆயுதம்.

கொடுக்க முயன்ற ஒருவரால் மட்டுமே பெற இயலும்.

ஒரு செயலை ஒருவர் செய்யும் பொழுது அதற்கான நற்பெயரை அவருக்குக் கொடுக்கத் தயங்காதீர்கள். அவ்வாறு செய்யும் பொழுது உங்களுக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய நற்பெயரைப் பிறரும் தயக்கமின்றி வழங்குவார்கள். உங்களுடைய செய்கை அவர்களைத்த தூண்டும். குழு தலைவராக உங்களுக்குப் பாராட்டு கிடைக்கப்பெற்றால், அதை உடனடியாக உங்களுடைய குழு உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து அளியுங்கள். உங்களுடைய அணிக்கு மின்னஞ்சல் மூலம் இதைத் தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் சக பணியாளர் ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்க உங்களுக்கு உதவியிருந்தால், அந்தச் சக பணியாளரைப் பற்றி உங்களுடைய மேலாளரிடம் நல்ல விதமாகத் தெரிவிக்க மறவாதீர்கள்.

உங்களுடைய முதலாளி உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியிருந்தால், அதோடு அதை நிறைவேற்றக் கூடிய ஆதாரங்களையும் வழங்கியிருந்தால், குழுவிற்குள்ளேயும், மேலாளரின் முன்னிலையிலும் அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்.

விற்கவும், விற்கவும், மேலும் விற்கவும்

விற்கவும், விற்கவும், மேலும் விற்கவும்

ஒரு நல்ல பொருள் அல்லது சேவை, வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படாவிட்டால் அந்தச் சேவை அல்லது பொருள் மெல்ல மரணத்தை நோக்கிய தன்னுடைய பயணத்தைத் தொடங்கி விடும். இதைப் போன்றே நீங்களும் ஒரு பொருள் போன்றவரே. உங்களுடைய பணி நீங்கள் புரியக் கூடிய சேவை போன்றதே. இங்கு உள்ள ஒரே வித்தியாசம், உங்களை நீங்களே விற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவ யாரும் கிடையாது. எனவே உங்களை நீங்களே தொடர்ந்து விற்க வேண்டும். அடுத்தக் குழுக் கூட்டத்தில் உங்களுடைய நிறைவு திட்டத்தை வழங்கவும். உங்களுடைய மேலாளரிடம் நீங்கள் அடைந்த இலக்குகள் மற்றும் சந்தித்த காலக்கெடுவைப் பற்றி அடிக்கடி புதுப்பிக்கவும்.

எல்லைகளை வரையறுக்கவும்

எல்லைகளை வரையறுக்கவும்

ஒவ்வொரு தொழில்முறை விற்பன்னரும் தன்னுடைய நல்வாழ்வு மற்றும் புறத்தோற்றத்தை பற்றி மிகவும் அக்கறையுடன் இருப்பார்கள். எனவே தொழில் முறை வாழ்க்கையால் நற்பெயரைத் திருடுவது மிகவும் பொதுவானது. எனவே புலம்புவதைத் தவிர்த்து எந்த விதமான தாமதமின்றி, எது நற்பெயர் திருட்டு என்பதைக் கண்டறியுங்கள். அதைக் கண்டறிந்த பின்னர் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தொடங்குங்கள். உதாரணமாக, உங்கள் குழுவின் தலைவர் தவறுதலாக நீங்கள் தெரிவித்த யோசனைக்கு உங்களுடைய நண்பரைப் பாராட்டுகின்றார் மற்றும் அதற்கு உங்களுடைய நண்பர் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்க வில்லை எனில் நீங்கள் உடனடியாக எழுந்து "ஆம், நான் கடந்த வாரம் இந்த விஷயத்தை இந்தக் குழுவுடன் பகிர்ந்து கொண்டேன். அதைப் பற்றிய செயல்முறை விவரங்களைத் தற்பொழுது விவாதிக்கலாமா? ", எனத் தெரிவியுங்கள்.

புகழ் உருவாக்கம்

புகழ் உருவாக்கம்

உங்களைப் பாதுகாக்கும் சிறந்த பாதுகாப்பு அம்சம் உங்களுக்கான நற்பெயர் ஆகும். எதையும் ஏற்றுக் கொள்ளுபவர், படைப்பாற்றல் மிகுந்தவர், பிரச்சினைகளைத் தீர்ப்பவர், தொழில்முறை விற்பன்னர் எனப் பல்வேறு நிலைப் பெயர்களைப் பெற மறவாதீர்கள். பொது வெளியில் உங்களுடைய கருத்துக்களை வெளியிட தயங்காதீர்கள். அதில் மற்றவர்களின் நல்ல எண்ணங்களைச் சேர்ப்பதற்கும் மறவாதீர்கள். தெரிவித்த கருத்தயதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதைப் பற்றிச் சக பணியாளர்களின் கருத்துக்களுக்கும் இடம் கொடுங்கள். அதன் பிறகு உங்களுடைய சக பணியாளர்களுக்கான நன்றியை தெரிவிக்கவும். இது உங்கள் நற்பெயர் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தைத் தருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to get your boss to give you credit for your work

How to get your boss to give you credit for your work
Story first published: Wednesday, April 11, 2018, 15:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X