ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிப்பது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இ-காமர்ஸ் நிறுவனங்கள் சலுகைகள் அளிப்பது ஒரு பக்கம் உள்ள நிலையில் கூப்பன் கோட் இணையத் தளங்களும் பல சலுகைகள் மற்றும் டிரிக்குகளை அளிக்கின்றன. பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்தால் அனைத்தும் கிடைக்கும். இவற்றின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது உங்கள் பணத்தைச் சேமிக்கும் டிப்ஸ் மற்றும் தந்திரங்களை இங்கே காணலாம்.

நியூஸ் லெட்டர்களில் பதிவு செய்யுங்கள்

நியூஸ் லெட்டர்களில் பதிவு செய்யுங்கள்

ஆன்லைன் வர்த்தகர்கள் உங்களின் ஈமெயில் ஐடிகளைச் சேகரிக்கும் ஆர்வத்தில், நீங்கள் நீயூஸ் லெட்டரில் பதிவு செய்யும்போது பல்வேறு ஆப்பர் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, H&M ல் முதல் முறை பணம் தள்ளுபடியும், இரண்டாம் முறை வாங்கும் போது இலவச டெலிவரியும் தருகின்றனர். விற்பனையாளர்கள் ஊக்கத்தொகை வழங்கவில்லை என்றாலும், நியூஸ் லெட்டர் மூலம் சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடிகள் பற்றி அறிந்துகொள்வதால் நிறைய அனுகூலங்கள் இருக்கும்.

பொருட்களை ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்து அப்படியே விட்டுவிடுங்கள்

பொருட்களை ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்து அப்படியே விட்டுவிடுங்கள்

ஆன்லைன் ஷாப்பிங்கில் உள்ள மிகச்சிறந்த தந்திரம் இது. இதில் ஷாப்பிங் இணையதளத்தில் உள்நுழைந்து, பொருட்களைக் கார்ட்டில் சேர்த்து விட்டு, எதுவும் வாங்காமல் அப்படியே விட்டுவிட வேண்டும். விற்பனையில் ஆர்வத்துடன் இருக்கும் விற்பனையாளர்கள், பல்வேறு ஆப்பர்கள் தருவதாகவும், அந்தப் பொருட்களை வாங்கவும் என்று ஈமெயில் அனுப்பும்.

லைவ் சாட்டின் மூலம் தள்ளுபடி

லைவ் சாட்டின் மூலம் தள்ளுபடி

பெரும்பாலான விற்பனையாளர்கள் லைவ் சாட் மூலம் இணையதளத்தில் ஷாப்பிங் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்திச் செய்யும் சேவையை வழங்குகின்றன. அந்தச் சாட் பாப்அப்பை க்ளோஸ் செய்வதைக் காட்டிலும், அவர்களிடம் நீங்கள் வாங்கும் பொருட்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டு அதன் மூலம் நல்ல டீல்களைப் பெறலாம். நிக், டெல் மற்றும் டைசன் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர் கேட்டதற்காக 10% க்கு அதிகமான தள்ளுபடியை வழங்கியுள்ளன.

வவ்ச்சர் கோட்-களை வேட்டையாடுங்கள்

வவ்ச்சர் கோட்-களை வேட்டையாடுங்கள்

கேஸ்பேக் ஆப்பர்கள் கிடைக்குமா என்பதைத் தேடும் அதே வேளையில், பணத்தில் தள்ளுபடிகளைத் தரும் வவ்ச்சர் கோடுகளிலும் கவனம் செலுத்தலாம். Coupon.com போன்ற இணையதளங்களில் புதிதுபுதிதாக வவ்ச்சர் கோடுகள் கிடைக்கின்றன.

டெலிவரி கட்டணங்களைத் தவிர்த்தல்

டெலிவரி கட்டணங்களைத் தவிர்த்தல்

இணையவழியில் பொருட்களை வாங்கிச் செக்அவுட் செய்யும் போது மிகவும் அதிர்ச்சியளிப்பவை டெலிவரி கட்டணங்கள். இதைத் தவிர்ப்பதற்கும் வழிகள் உள்ளன. அமேசான் போன்ற சில விற்பனையாளர்,வீட்டுக்குப் பொருட்களை டெலிவரி செய்வதற்குப் பதில் அருகிலுள்ள கடை அல்லது லாக்கர்களில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன. பெரும்பாலும் இந்தச் சேவை இலவசமாகவோ அல்லது சிறு கட்டணத்துடன் கிடைக்கும். மேலும் இதில் டெலிவரி செய்பவருக்காகக் காத்திருக்கத் தேவையில்லை மற்றும் குறித்த நேரத்தில் பொருட்களைப் பெறாமல் தவறவிடும் அபாயமும் இல்லை.

நிரந்தர வாடிக்கையாளருக்குச் சிறப்புச் சலுகை திட்டங்கள்

நிரந்தர வாடிக்கையாளருக்குச் சிறப்புச் சலுகை திட்டங்கள்

நீங்கள் ஒரே விற்பனையாளரிடம் அடிக்கடி பொருட்களை வாங்கினால், அவர்கள் வழங்கும் சலுகை திட்டங்கள் மூலம் பணத்தைச் சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக, அமேசான் ப்ரைம் மூலம் எல்லையில்லா துரித டெலிவரி, திரைப்படங்கள் மற்றும் பல நன்மைகள் கிடைக்கின்றன.

விலை ஒப்பீட்டுத் தளங்கள் மூலம் குறைந்தவிலையை அறிதல்

விலை ஒப்பீட்டுத் தளங்கள் மூலம் குறைந்தவிலையை அறிதல்

ப்ரைஸ் க்ரேப்பர் அல்லது ப்ராக்கிள் போன்ற விலை ஒப்பீட்டுத் தளங்கள், பணத்தைச் சேமிக்கச் சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் பல்வேறு விற்பனையாளர்களின் விலையைத் தேடி, ஒப்பிட்டுச் சிறந்த விலையைத் தருபவை.

சமூகவலைத்தளங்கள் மூலம் சிறப்பு விற்பனையை அறிதல்

சமூகவலைத்தளங்கள் மூலம் சிறப்பு விற்பனையை அறிதல்

இணையவழி ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிக்கச் சிறந்த வழி சமூகவலைத்தளங்கள். உங்களுக்குப் பிடித்தமான விற்பனையாளர்களின் பேஸ்புக் பக்கங்களை லைக் செய்தும், டிவிட்டரில் ஃபாலோ செய்தும் பின்தொடரலாம். இதன் மூலம் பல சலுகைகள், முதல் விற்பனை, சிறப்பு விற்பனை போன்றவற்றை முதலே தெரிந்துகொள்ளலாம்.

பொருளின் பெயரை தேடுபொறியில் தேடுங்கள்

பொருளின் பெயரை தேடுபொறியில் தேடுங்கள்

இது எளிதாகத் தோன்றலாம், ஆனால் பொருளின் பெயரை கூகுள் போன்ற தேடுபொறியில் தேடுவதன் மூலம் நூற்றுக்கணக்கில் மிச்சம் செய்யலாம். இணையச் சந்தையில் பெரிய போட்டி நிலவும் போது ஏன் அவர்கள் கூறும் விலைக்கு வாங்க வேண்டும். நீங்கள் பார்க்க விரும்பும் படத்தின் பெயரை தேடுவதன் மூலம், டிக்கெட் விலையில் பல நூறுகளைச் சேமிக்கலாம். எப்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என ஷாப்பிங் செய்யாதீர்கள்.

 டிக்கெட் கவுன்டர்களைத் தவிர்த்தல்

டிக்கெட் கவுன்டர்களைத் தவிர்த்தல்

தொலைப்பேசி மூலம் டிக்கெட் அலுவலகத்திற்கு அழைப்பதற்கு முன், எப்போதும் ஆன்லைன் மூலம் விலையை ஒப்பிடுங்கள். பேருந்து, ரயில், திரையரங்கம் மற்றும் விமானக் கட்டணங்கள் நேரிடையாக விற்பனையாளரிடம் வாங்குவதைக் காட்டிலும் இணையதளங்களில் குறைவாகக் கிடைக்கும்.

சிறப்பு விற்பனைக்காக மெம்பர்சிப் கிளப்களில் சேருங்கள்

சிறப்பு விற்பனைக்காக மெம்பர்சிப் கிளப்களில் சேருங்கள்

சில பிரபல நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர் பொருட்கள் நடத்தும் 'மெம்பர்சிப் கிளப்புகளில்', இலவசமாகப் பதிவு செய்து கொண்டு சிறப்பு விற்பனை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெறலாம். இதன் மூலம் லூயிஸ் வியூட்டன் மற்றும் சானல் போன்ற பிரபல பிராண்டுகளின் தள்ளுபடிகளைப் பெறலாம்.

அமேசான் டிஸ்கவுண்டுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

அமேசான் டிஸ்கவுண்டுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

நீங்கள் அமேசானில் அடிக்கடி பொருட்கள் வாங்குபவர்களாக இருந்தால், இதைச் சப்ஸ்கிரைப் நன்மைத் தரும். அமேசான் ப்ரைம் மட்டுமில்லாமல், சப்ஸ்கிரைப் வசதியும் தானாகவே பொருட்களை மீண்டும் வாங்கும் செயல்முறை வைத்துள்ளது. இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமில்லாமல் உண்மையான விலையில் தள்ளுபடி பெறுவதன் மூலம் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

 பல ஈமெயில் ஐடி மூலம் நிறையக் கூப்பன்கள்

பல ஈமெயில் ஐடி மூலம் நிறையக் கூப்பன்கள்

சில விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரே ஒரு தள்ளுபடி கூப்பன்களை ஈமெயில் மூலம் அனுப்புவர். இதில் நிறையக் கூப்பன்களைப் பெற, பல ஈமெயில் ஐடி மூலம் பதிவு செய்யலாம். இந்தத் தந்திரத்தின் மூலம் உங்களுக்கு விருப்பமான கடையில் 50% வரை தள்ளுபடி கிடைத்தாலே சிறப்புத் தானே.

வாங்க விரும்பும் அனைத்தையும் ஒன்றாக வாங்குங்கள்

வாங்க விரும்பும் அனைத்தையும் ஒன்றாக வாங்குங்கள்

ஆன்லைனில் பணத்தைச் சேமிக்க இருக்கும் வழிகளில் இது சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது. நீங்கள் வாங்கவிரும்பும் பொருட்களின் பட்டியலை தயாரித்து , தேடுபொறி மூலம் அனைத்து பொருட்களையும் தேடி மொத்தமாகக் குறைந்த விலைக்கு வாங்கமுடியும்.

புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல்

புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல்

விற்பனையாளர்களின் பிரபலமான தினங்களான புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தான் அதிகமான சலுகை விற்பனை மற்றும் தள்ளுபடி கோட்-களை அறிவிப்பர். எனவே அப்போது பொருட்களை வாங்குங்கள். பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செய்வார்கள் என்பதால், அப்போது விலையும் அதிகமாக இருக்கும். எனவே வார இறுதியில் ஷாப்பிங்கை தவிர்க்கவும்.

அமேசான் பில்லர் ஐட்டம் பைன்டர்

அமேசான் பில்லர் ஐட்டம் பைன்டர்

அமேசான் ப்ரைம் கட்டணத்தைச் செலுத்த விருப்பமில்லையா? இலவச டெலிவரிக்கு நீங்கள் செய்யவேண்டிய ஒரே விசயம் 25 டாலர் செலவு. அதுவும் செய்ய விரும்பவில்லை என்றால், டெலிவரி கட்டணத்தைச் சேமிக்க அதிகமான கட்டணம் இல்லாத அமேசான் பில்லர் ஐட்டம் பைன்டர் வசதியை பயன்படுத்தலாம்.

கிப்ட் கார்டுகளைப் பயன்படுத்துதல்

கிப்ட் கார்டுகளைப் பயன்படுத்துதல்

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது கிப்ட் கார்டுகளைப் பயன்படுத்தினால் நிறையத் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. வாங்க விரும்பும் அனைத்தையும் கார்ட்டில் சேர்த்து மொத்த தொகை தெரிந்தவுடன், அதற்கு ஈடான கிப்ட் கார்டுகளை Raise.com போன்ற தளங்களில் வாங்கலாம். பல கடைகளில் கிப்ட் கார்டின் விலைக்கு மேல் 5-15% அதிக மதிப்பு உள்ள கிப்ட் கார்டை பெறலாம்.

ஸ்டே கூப்பன் கோட்கள்

ஸ்டே கூப்பன் கோட்கள்

இந்த வகைக் கூப்பன்களல கண்டு பயந்துவிட வேண்டாம். மேசிஸ், கோல்ஸ் போன்ற பல ஆன்லைன் விற்பனையாளர்கள் , பொருட்களை வாங்கிச் செக்அவுட் செய்யும்போது பல வெவ்வேறான தள்ளுபடி கூப்பன்களை ஒரே தடவை பயன்படுத்த அனுமதிக்கின்றன.

ப்ரவுசிங் ஹிஸ்ட்ரி மற்றும் குக்கிஸ்-ஐ அழியுங்கள்

ப்ரவுசிங் ஹிஸ்ட்ரி மற்றும் குக்கிஸ்-ஐ அழியுங்கள்

கூப்பன் கோட்களைத் தேடும் போதோ அல்லது பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போதோ ப்ரவுசிங் ஹிஸ்ட்ரி மற்றும் குக்கிஸ்-ஐ அழிப்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லது இன் பிரைவேட் ப்ரைசர்களைப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்யவில்லை எனில், நீங்கள் ஏற்கனவே வாங்கிய ஒன்றை மீண்டும் வாங்க முயன்றால் விலை அதிகமாக்கி காட்டப்படும்(குறிப்பாக விமான டிக்கெட்டுகள்).

பிறந்தநாள் சிறப்புத் தள்ளுபடிகள்

பிறந்தநாள் சிறப்புத் தள்ளுபடிகள்

நியூஸ் லெட்டரில் பதிவு செய்யும் போது பிறந்த நாளை குறிப்பிட மறந்துவிட வேண்டாம். சில நிறுவனங்கள், காபி ஷாப்ஸ், உணவகங்கள் உங்களுடைய பிறந்தநாள் அன்று சிறப்புத் தள்ளுபடிகள் அல்லது இலவச காபி போன்ற கிப்ட்களையும் வழங்குகின்றன.

சீசனுக்குப் பிறகு வாங்குங்கள்

சீசனுக்குப் பிறகு வாங்குங்கள்

இது பழையகாலத் தந்திரமாக இருந்தாலும், சீசன் முடிந்த பின்பு வாங்கினால் அதிகப் பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்தப் பொருளுக்கும் தேவை அதிகமாக இருக்கும் போது விலையும் அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாகக் கோடை காலத்தில் நீச்சல் உடையின் விலை அதிகமாக இருக்கும். அதுவே குளிர்காலத்தில் என்றால் அடித்துப்பேசிக் குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம்.

வாங்குவதற்கு முன் இலவசமாகக் கிடைக்குமா எனப் பாருங்கள்

வாங்குவதற்கு முன் இலவசமாகக் கிடைக்குமா எனப் பாருங்கள்

இணையதளத்தின் சிறப்பம்சமே, இதில் எதுவும் சாத்தியம் என்பது தான். அதாவது பொருட்கள் சிலசமயம் இலவசமாகக் கூடக் கிடைக்கும். எனவே, ஒரு பொருளை வாங்கும் முன் ஒருமுறைக்கு இரு முறை அந்தப் பொருள் அல்லது அதே போன்ற பொருள் இலவசமாகக் கிடைக்கிறதா எனத் தேடுங்கள். ப்ரீசைக்கிள் போன்ற தளங்கள் உங்கள் பகுதியில் உள்ள இரண்டாம் தரப்புப் பொருட்களை விற்கின்றன. அதில் அடித்துபேசி கூடக் குறைந்த விலைக்கு வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Online shopping secrets that will save you money

Online shopping secrets that will save you money
Story first published: Wednesday, April 18, 2018, 19:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X