உங்கள் ஓய்வு வாழ்க்கையை நரகமாக்காமல் பாதுகாக்க 7 எச்சரிக்கைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் சம்பாதிக்கும் போதே ஓய்வு வாழ்க்கைக்கு என்று சேமிப்பை ஏற்படுத்தி வைக்க வேண்டியது ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ள பொறுப்பாகும். திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள். அதுபோல் நாம் ஊர் ஊராகச் சுற்றிச் சம்பாதித்தாலும், எதிர்காலத்தில் மற்றவர்களை நம்பியோ அல்லது அடுத்தவரைச் சார்ந்தோ வாழ வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. இது ஏற்பட்டால் அது நமது பொறுப்பின்மையைத் தான் காட்டும்.

கீழ்க்காணும் காரணிகளால் உங்களது ஓய்வு அமைதியான முறையில் இருக்காது.

 உங்களது வருமானத்தை அதிகரிக்கப் போதுமான முயற்சி மேற்கொள்ளாமை

உங்களது வருமானத்தை அதிகரிக்கப் போதுமான முயற்சி மேற்கொள்ளாமை

பணியின் போது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளப் போதுமான நடவடிக்கை எடுக்காமலும் அல்லது முயற்சி மேற்கொள்ளாமலும் எதிர்காலத்தில் வருத்தப்படுவோர் 39 சதவீதம் பேர் உள்ளனர் என்று ஒரு சர்வே கூறுகிறது. சம்பளத்தை உயர்த்திக் கொள்ளத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சம்பளத்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

இது அதிர்ஷ்டம் மூலமோ அல்லது ஆசீர்வாதம் மூலமோ கிடைக்காது. அதற்கு ஏற்ற வழியில் நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே உங்களுக்கு அது சாத்தியமாகும். வாழ்க்கை செலவு என்பது நிலையான சுழற்சியாகும். அதனால் ஒருவர் முதலீடு மற்றும் செலவுகளுக்காக வருமானத்தை உயர்த்துவது குறித்த பார்வையைச் செலுத்த வேண்டும். இதைச் செய்யவில்லை என்றால் ஓய்வு காலத்தில் நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும்.

 

கிரெடிட் கார்டு மற்றும் கடன்களில் மிதப்பவர்கள்

கிரெடிட் கார்டு மற்றும் கடன்களில் மிதப்பவர்கள்

தேவைகளைப் பூர்த்திச் செய்ய ஒருவர் கிரெடிட் கார்டு மற்றும் கடன்களை அதிகம் சார்ந்து இருந்தால் அது அவருக்குப் பெரியளவில் பின்னடைவை ஏற்படுத்தும். மாத தவணைகள் அவரைப் படு பாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிடும். உங்களுக்கு வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசிய கடன் இருந்தாலும் தற்போதும் வருவாயை ஒழுங்குபடுத்திக் கொள்ள ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு முறையும் அனைத்து விஷயங்களுக்கும் கடன் வாங்கினால் அது கண் இருந்தும் பார்வையற்ற நிலையைத் தான் ஏற்படுத்தும். உடனடியாகச் சுயபரிசோதனை செய்ய வேண்டியதற்கான அறிகுறி இது என அர்த்தம்.

 கடந்த காலங்களில் விடாமுயற்சி சேமிப்பு இல்லாமை

கடந்த காலங்களில் விடாமுயற்சி சேமிப்பு இல்லாமை

ஒரு தனி நபர் கடந்த காலங்களில் விடா முயற்சியுடன் கூடிய சேமிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்காமல், அ டுத்த ஆண்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் அவரது ஓய்வு வளமாக அமையாது என்பது உறுதி. இது போன்ற தனி நபர்கள் ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை மேற்கொண்டு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது முதலீட்டிற்கான ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டு சேமிக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இலக்கு அல்லது அதற்கான வழியைத் தேர்வு செய்து உடனடியாகத் தொடங்கிவிட வேண்டும்.

சேமிப்பில் தாமதம்

சேமிப்பில் தாமதம்

எந்த ஒரு வயதினரும் சொத்துச் சேகரிப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டும். மற்றதை விட இது மிகவும் சிறந்தது. இவ்வாறு முதலீடு செய்ததில் சிலவற்றுக்கு எதிர்காலத்தில் நல்ல மதிப்பு இருக்கும். அதேபோல் உங்களது சேமிப்பும் உங்களுக்கு நிச்சயம் பலனளிக்காமல் இருக்காது.

மாத இறுதியில் போராட்டம்

மாத இறுதியில் போராட்டம்

ஒருவர் ஒவ்வொரு மாத இறுதியிலும் பணத்துக்காகப் போராடும் பழக்கம் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால் அவர் சில விஷயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டும். மாத இறுதியில் ஏற்படும் செலவுகளை எதிர்கொள்ளக் குறிப்பிட்ட ஒரு தொகையை மாதந்தோறும் தனியாகச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்த அறிகுறி ஏழ்மை மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும்.

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

ஒரு நபர், அவர் சார்ந்த துறையில் வேலை வாய்ப்பு இல்லை என்றாலோ அல்லது வளர்ச்சி குறைவாக இரு ந்தாலோ சொத்துச் சேர்க்கை அதிகமாகப் பாதிக்கப்படும். அதோடு அந்த நபரின் திறன் அர்த்தமற்றதாகிவிடும். பின்னர் இதன் அறிகுறி அவசர நிலையிலேயே தான் இருக்கும். அதனால் புதிய திறனை கற்றுக் கொள்வது தான் இதற்கு ஒரே தீர்வு. அவ்வாறு கற்றுக் கொண்டதை உங்களது வருவாயை அதிகரி க்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

முதலீட்டில் பாரம்பரிய எண்ணம்

முதலீட்டில் பாரம்பரிய எண்ணம்

வங்கி டெபாசிட், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றில் மட்டுமே முதலீடு செய்யும் பழக்கம் பலரிடம் உள்ளது. இந்த முதலீடுகள் திரும்பி வருவது என்பது பணவீக்க சதவீதத்தைப் பொறுத்தே இருக்கும். இதன் மூலம் வாங்கும் திறன் அதிகரிக்காது. அதனால் குறிப்பிட்ட ஒரு தொகையைச் சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும். வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் செலவுகளை எதிர்கொள்ள வருவாய் திறனை அதிகரித்தல் போன்ற நிலையில் சொத்துச் சேகரிப்பு என்பது நடைமுறையில் சாத்தியமாகாது. அதனால் மியூச்சுவல் பண்ட், கடன் பத்திரம், ஈக்விட்டீஸ் போன்றவற்றில் முதலீடு செய்வது நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உதவுவதோடு வளமான ஓய்வு வாழ்க்கையை அளிக்கும்.

தீர்வு

தீர்வு

இது போன்ற சில முக்கியப் பழக்கங்கள் ஒரு தனிநபருக்கு எச்சரிக்கையாக அமையும். இதில் நீங்கள் ஒருவர் என்று கருதினால் உடனடியாக அதற்கு ஏற்ற ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். முதுமை பருவத்தில் குறிப்பிட்ட அளவு சொத்துக் சேர்த்து உங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இது தான் ஒரே வழி. இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு மனதில் ஒரு எச்சரிக்கை அறிகுறியை ஏற்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் உங்களது பானை தங்கத்தால் நிறைந்திருக்கும் வகையிலான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Seven alarming signs you will not retire rich

Seven alarming signs you will not retire rich
Story first published: Saturday, May 5, 2018, 15:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X