ஃபாரின் டூர் போவதற்கு முன் ப்ரீபெய்ட் ஃபோரக்ஸ் கார்டின் பயன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்வோர் முன்பு இரண்டு பெரிய கேள்விகள் எப்போதும் எழும். அது அன்னிய செலாவணி பற்றியும் அதை எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வது என்பது பற்றியும் தான். ரொக்க பணமாக எடுத்து செல்வது ஏற்ற தக்கது அல்ல. மேலும் நீண்ட நாள பயணமாக இருந்தால் ரொக்க பரிமாற்றத்தை விட வேறு சில பணப் பரிமாற்ற முறைகளைக் கையாள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

அதற்காகவே சிறப்பான முறையில், நீங்கள் எந்த அயல் நாட்டுக்கும் எளிதாக எடுத்துச் சென்று உங்கள் அன்னியச் செலாவணிகளைச் செய்ய ஃபோரக்ஸ் - டிராவலர்ஸ் செக், டெபிட், கிரெடி பிளாஸ்டிக் மணி கார்ட்ஸ், ப்ரீபெய்ட் டிராவல்ஸ் மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும்.

 கிரெடிட் கார்ட் பயன் தருமா?

கிரெடிட் கார்ட் பயன் தருமா?

ஒவ்வொரு வகையான பரிமாற்றத்திலும் நன்மையும் உண்டு சில சவால்களும் உண்டு. கிரெடிக் கார்டுகளைப் பொறுத்தவரையில் அன்னியச் செலாவணிகளுக்கு ஏற்றதாக அமைந்தாலும் அது கொஞ்சம் காஸ்ட்லி தான். கிரெடிக் கார்டை வெளிநாடுகளில் பயன்படுத்தும் போது பணப் பரிமாற்ற கட்டணமும், ஏடிஎம் மையத்தில் பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணங்களும் கூடவே வந்து பயமுறுத்தும்.

"இந்திய கிரெடிட் கார்டுகளை வெளிநாட்டில் பயன்படுத்தும் போது அது சார்ந்த வங்கி, பயன்படுத்தும் வியாபார நிறுவனம், வெளிநாட்டு அன்னியச் செலாவணி மதிப்பைப் பொறுத்து வேறுபடும். கிரெடிக் கார்ட் பயன்பாட்டில் குறைந்த பட்சம் 3.50% முதல் 5.00% வரை பரிமாற்ற கட்டணங்கள் வசூலிக்கப்படும். மேலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வெளிநாட்டு ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்கும் போது கூடுதலாக 2% முதல் 5% வரை (கார்டு வழங்கிய வங்கியைப் பொருத்துக் கட்டணங்கள் மாறுபடும்) வசூலிக்கப்படும்" என்கிறார் வெயிஸ்மேன் ஃபோரக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன் பாக்தா.

 

ப்ரீபெய்ட் ஃபோரக்ஸ் கார்டின் நன்மைகள்

ப்ரீபெய்ட் ஃபோரக்ஸ் கார்டின் நன்மைகள்

"ஃப்ரிபெய்ட் ஃபோரக்ஸ் கார்ட்டை பயன்படுத்த பரிசீலிக்கலாம். இந்த வகைக் கார்டுகள் ரொக்க பரிமாற்றத்தை விடப் பாதுகாப்பானது. மேலும் கார்டு பின் நம்பர் பாதுகாப்போடு அமைந்துள்ளது. மேலும் அனைத்து வரை பரிமாற்றங்களுக்கும், ஏற்றத்தக்க கட்டணங்களோடு அமைந்துள்ளது" என்கிறார் மைஃபோரக்ஸ் டாட் காம் நிறுவன சிபிஓ மற்றும் நிறுவனர் ஆனந் தான்டன்.

ப்ரிபெய்ட் டிராவல் கார்டு என்றால் என்ன?

ப்ரிபெய்ட் டிராவல் கார்டு என்றால் என்ன?

இந்தக் கார்டின் சிறப்பம்சமே ஒரே கார்டில் பல நாட்டு கரன்சிகளை ஏற்றிக் கொள்ளலாம். பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் போது இந்த வகை ப்ரிபெய்ட் கார்டு மிகவும் பயன் உள்ளதாக அமையும். ஒரே நாட்டுக்கு மட்டுமே செல்வதாக இருந்தால் அந்த நாட்டின் கரன்சியை மட்டுமே கார்டில் ஏற்றிக் கொள்வது நல்லது.

"ரிசர்வ் வங்கியின் (Liberalised Remittance Scheme (LRS)) தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தபடி அதிகபட்சமாக வருடத்திற்கு இந்திய மதிப்பில் ரூபாய் 2.5 இலட்சம் வரை ப்ரீபெய்ட் கார்டில் எந்த நாட்டு பணத்தையும் ஏற்றிக் கொள்ளலாம்" என்கிறார் பாக்தா.

இந்தக் கோடை விடுமுறைக்குக் குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க வெளிநாட்டு கிளம்பி விட்டீர்களா இதோ ப்ரிபெய்ட் ஃபோரக்ஸ் கார்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

நீங்கள் ப்ரிபெய்ட் ஃபோரக்ஸ் கார்டை வங்கியிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஃபோரக்ஸ் டீலரிடமோ (பணப் பரிமாற்ற ஏஜென்ட்) வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் வாங்கும் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
கார்டுக்கான பாரத்தில் உங்களைப் பற்றித் தகவல்கள் மற்றும் தேவைப்படும் நாட்டின் அந்நியச் செலாவணி பணத்தை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. உங்களின் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் காப்பி ஒன்றை தாக்கல் செய்தல் வேண்டும். சிலர் பயணப் பத்திரங்களை உறுதி செய்ய விசா பிரதியை கேட்டாலும் தரவேண்டியது இருக்கும். பல வகைக் கார்டுகளில் உங்களுக்கு வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

 

கட்டணங்களைப் பற்றிய தகவல்கள்

கட்டணங்களைப் பற்றிய தகவல்கள்

ப்ரிபெய்ட் கார்டுகளைப் பயன்படுத்தும் முன்பு அதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். நீங்கள் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது ஃப்ரிபெய்ட் கார்டில் நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் கரன்சியை லோட் செய்த பிறகு எந்த வித கட்டணங்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. மேலும் இந்த ப்ரிபெய்ட் ஃபோரக்ஸ் கார்டை வியாபார தளங்களில் ஸ்வைப் செய்யும் போது எந்த வித கட்டணங்களும் கிடையாது. ரொக்க இருப்பு அதாவது பேலன்ஸ் என்கொய்ரி சம்பந்த சேவைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

 பயன்பாட்டிற்கான கட்டணங்கள்

பயன்பாட்டிற்கான கட்டணங்கள்

1. ஏடிஎம் மையத்தில் கார்டை பயன்படுத்து ஸ்வைப் செய்து பணம் எடுக்கும் போது வசூலிக்கும் கட்டணம்.
2. கார்டில் ரொக்க கையிருப்பை அறிந்து கொள்ளும் சேவை கட்டணம்
3. வெளிநாட்டுப் பயணத்தில் சர்வதேச குறுந்தகவலுக்கான கட்டணம்
4. கார்டை மாற்றுதலுக்கான கட்டணம் (உள்நாடு)
5. கார்டை மாற்றுதலுக்கான கட்டணம் (வெளிநாடு)
6. ஸ்டேட்மென்ட் பெறுவதற்கான கோரிக்கைக்கான கட்டணம்.
7. ஏடிஎம் மையத்தில் பரிவர்த்தனை ரசீதைப் பெற கட்டணம்
8. கரன்சி மாற்றிப் பரிவர்த்தனைக்கான கட்டணம். அதாவது நீங்கள் உங்கள் கார்டில் டாலர் மதிப்பை ஏற்றி விட்டு, ஈரோ மதிப்பில் பரிவர்த்தனை செய்யும் போது அதற்கான கட்டணம். சுமார் 3% முதல் 3.5% வரை கட்டணம் வசூலிக்கப்படும். சில வங்கிகளில் அந்த மாற்று கரன்சி பரிவர்த்தனை கட்டணங்கள் இல்லாமலும் இருக்கலாம்.
9. ப்ரீபெய்ட் கார்டை லோட் செய்து விட்டு சுமார் 6 மாதம் காலம் வரை தொடர்ந்து எந்தவித பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அதற்கான கட்டணம். சில வங்கிகள் இதை வசூலிக்காது.

 போரக்ஸ் கார்டை வாங்கும் போது உறுதி செய்து கொள்ள வேண்டியவை

போரக்ஸ் கார்டை வாங்கும் போது உறுதி செய்து கொள்ள வேண்டியவை

தினசரி வரம்பு

சில கார்டில் தினசரி பரிவர்த்தனை வரம்பு குறிப்பிட்டு இருக்கலாம். உதாரணமாக $200 முதல் $300 தின சரி வரம்பு என்று நிர்ணயித்து இருக்கலாம்.

கார்ட் ஆக்டிவேஷன்

கார்டை வழங்கியவரிடம் இருந்து கார்டை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் உதாரணமாகப் பின் நம்பரை உருவாக்கத் தெரிந்து கொள்ளுதல்.

24 மணி நேர உதவி

24 மணி நேர ஹெல்ப்லைன் நம்பர்களை விரல் நுனியில் வைத்திருப்பது அவசியம்.

 

பாதுகாப்பு

பாதுகாப்பு

வெளிநாடுகளிலும் ப்ரீபெய்ட் ஃபோரக்ஸ் கார்டுகளைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். வியாபார தளத்தில் கார்ட் உங்க முன்பு ஸ்வைப் செய்யப்படுகிறதா என்பதில் கவனம்.

"கார்ட் குளோனிங் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதால் அது சார்ந்த பயன்பாட்டை வாங்கிய வங்கி அல்லது ஏஜென்சிகளிடம் உடனே தெரிவிப்பது அவசியம்" என்கிறார் தான்டன்.

 

ஸ்வைப் செய்தல்

ஸ்வைப் செய்தல்

ப்ரிபெய்ட் கார்டில் வெளிநாட்டு கரன்சி மதிப்பை ஏற்றி உள்ளதால் அதை இந்திய ரூபாய் மதிப்பிற்கான பரிவர்த்தனைகளில் தெரியாமல் ஸ்வைப் செய்து விடக் கூடாது. அப்படிச் செய்தால் கரன்சி மாற்றுப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது இருக்கும். ஆகையால் கரன்சி பரிவர்த்தனை பற்றிய கவனம் மிக அவசியம்.

கிரெடிட் கார்ட் விருப்ப தேர்வு

கிரெடிட் கார்ட் விருப்ப தேர்வு

ஏடிஎம் மையம் அல்லது வியாபார தளத்தில் ஃபோரக்ஸ் ப்ரீபெய்ட் கார்டை பயன்படுத்தும் போது கிரெடிக் கார்ட் ஆப்ஷனைத்தான் தேர்வு செய்தல் வேண்டும். ஃபோரக்ஸ் கார்டுகளுக்குத் தனி ஆப்ஷன் கிடையாது.

பயண முடிவில்

பயண முடிவில்

பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் போது அதிகப் பட்ச வெளிநாட்டு கரன்சி உங்கள் கார்டில் மீதமிருத்தல் கூடாது.

"ரிசர்வ் வங்கியின் சட்டப்படி $2000 டாலர் மதிப்புக்கு மேல் வெளிநாட்டுக் கரன்சிகள் மீத இருப்புத் தொகையாக இருத்தல் கூடாது" என்கிறார் பாக்தா.

 

 காப்பீட்டு விபரம்

காப்பீட்டு விபரம்

ஃபோரக்ஸ் கார்டுகளுக்குப் பல்வேறு வகையான காப்பீட்டுக் கவரேஜ்கள் உள்ளன. ஆனால் நீங்கள் கார்டை வாங்கும் போது கார்ட் தொலைந்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தபட்டலோ அதற்கான காப்பீடு உள்ளதா என்பதைக் கேட்டுத் தெரிந்து காப்பீட்டை தேர்வு செய்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் தனிநபர் விபத்து காப்பீடு, சரி பார்க்கப்பட்ட பேக்கேஜ்கள் தொலைவதால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட காப்பீடுகளையும் தேவைப்படும் பட்சத்தில் தேர்வு செய்து கொள்ளலாம். சில கார்டுகள் ஏடிஎம் மையத்தில் ஏற்படும் திருட்டு, தாக்குதல் உட்படக் காப்பீட்டோடு மருத்து சிகிச்சைக்கான காப்பீட்டையும் உள்ளடக்கி இருக்கும். அதையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

 பயணத்தில் செய்ய வேண்டியது

பயணத்தில் செய்ய வேண்டியது

அதானே ஃபோரக்ஸ் கார்டு கையில் இருக்கிறதே என்கிற அஜாக்கிரதையில் அந்த ஒரு பரிவர்த்தனையை மட்டுமே நம்பி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்தல் கூடாது. முடிந்த அளவு ரொக்க பணத்தையும் கூடுதல் தேவைக்காக வைத்துக் கொள்தல் அவசியம். தேவைப்படும் இடங்களைப் பொறுத்து ரொக்க பரிவர்த்தனையோ அல்லது ஃபோரக்ஸ் கார்டு பரிவர்த்தனையோ மேற் கொள்ளலாம்.

"இந்த வகை ரொக்க, டிராவல் கார்டு பரிவர்த்தனையை 20:80 விகிதத்தில் கலவையாக உபயோகிப்பது சிறந்தது" என்கிறார் தான்டன்.
மேலும் இந்திய மதிப்பிலான பரிவர்த்தனை உலக அளவில் பல நாடுகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆதலால் ஃபோரக்ஸ் கார்டு போன்ற அன்னியச் செலாவணி பரிவர்த்தனை டிராவல் கார்டை தேர்வு செய்து கொள்தல் உங்களுக்கு மிகவும் பயன் அளிக்கும். மேலும் கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டு கூடுதல் கட்டணங்களில் இருந்து உங்கள் பணத்தை மிச்சப் படுத்திக் கொள்ளலாம். கரன்சி மாற்றங்களை முடிந்த வரை இந்தியாவில் செய்து கொள்தல் அவசியம். ஏர்போர்டிலோ அல்லது வெளிநாட்டிலோ கரன்சிகளை மாற்ற முயற்சித்தால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பதையும் மறவாதீர்கள்.

 

எந்தெந்த கார்டுகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளைத் தெரிந்து கொண்டீர்களா?

எந்தெந்த கார்டுகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளைத் தெரிந்து கொண்டீர்களா?

விடுமுறை என்பதே எந்த வித இடையூறுகளும், இன்னல்களும் இன்றி இனிமையாகக் கொண்டாடுவற்கே. ஆதலால் டிராவல் கார்டுகளைப் பொறுத்தவரை ஃபோரக் கார்டுகள் போன்ற சிறந்தவற்றைத் தேர்வு செய்து உங்க வெளிநாட்டுப் பயணத்தைச் சிறப்பானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things to know before buying a prepaid forex card for your international holiday

Things to know before buying a prepaid forex card for your international holiday
Story first published: Monday, May 14, 2018, 13:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X