உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க விருப்பமா? எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைம்ஸ் உயர்கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை தான் உலகிலேயே சர்வதேச பல்கலைக்கழகங்களைப் பயிற்றுவித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச தரம் போன்ற கூறுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் உலகப் பல்கலைக்கழகச் செயல்திறன் பட்டியல் ஆகும்.

2017-2018-ம் ஆண்டிற்கான தரவரிசையைக் கொண்டு உலகின் தலைசிறந்த 15 பல்கலைக்கழகங்களையும் அவற்றில் படிக்க ஆகும் செலவுகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

15) கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

15) கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

61 நோபல் பரிசு பெற்றவர்களை உருவாக்கிய பெருமையுடையது இந்தப் பல்கலைக்கழகம். இதில் 2,38,000 மாணவர்கள் படித்திருந்தாலும், இதன் மூன்றில் இரு பங்கு இளங்கலை வகுப்புகளில் 30க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால் சிறந்த மேம்பட்ட கற்பித்தல் சூழலை அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாநிலத்தவர் கள் இங்கு இளங்கலை பட்டம் படிக்க 61,443 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும். இதில் கற்பித்தல் கட்டணம், தங்குமிடம் மற்றும் தனிப்பட்ட செலவுகளும் அடக்கம். கலிபோர்னியா மாநிலத்தவருக்கு இக்கட்டணத்தில் பாதி மட்டுமே.

14) கெலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க்

14) கெலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க்

நியூயார்க் நகரத்தின் மதிப்புவாய்ந்த கல்லூரியான இது 100 நோபல் பரிசாளர்கள், 29 மாநில தலைவர்கள்,29 அகாடமி விருது பெற்றவர்கள் மற்றும் பல பில்லியனர்களையும் உருவாக்கியுள்ளது. தலைசிறந்த முதலீட்டாளர் வாரன் பப்பெட், வால்மார்ட்-ன் எஸ். ராப்சன் வால்டன் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா போன்றோர் இக்கல்லூரியின் பிரபல முன்னாள் மாணவர்கள். இங்கு இளங்கலை பட்டப்படிப்பு படிக்க ஆண்டிற்கு 79,890 டாலர் செலவாகும். இதில் கல்விகட்டணம், விடுதிகட்டணம், தேர்வு மற்றும் தனிப்பட்ட செலவுகளும் அடக்கம்.

 13) ஜான்ஸ் ஹோப்ஹின்ஸ் பல்கலைக்கழகம், பால்டிமோர், மேரிலேண்ட்

13) ஜான்ஸ் ஹோப்ஹின்ஸ் பல்கலைக்கழகம், பால்டிமோர், மேரிலேண்ட்

பால்டிமோரில் தலைமையாகக் கொண்டு செயல்பட்டாலும், உண்மையாகவே சர்வதேச பல்கலைக்கழகம் எனச் சொல்லும் அளவிற்கு மூன்று கண்டங்களில், 150 நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் இதர செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. 36 நோபல் பரிசாளர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள், எழுத்தாளர் சிம்மமண்டா நொகேசி அடிசி, முன்னாள் நியூயார்க் மேயர் மற்றும் ப்ளூம்பெர்க்கின் நிறுவனர் மெக்கேல் ப்ளூம்பெர்க் மற்றும் அதிபர் வில்சன். இங்கு இளங்கலை பட்டப்படிப்பிற்கு ஆண்டிற்கு 46,328 டாலர் குறைந்தபட்சமாகச் செலவாகும்.

12) யாளே பல்கலைக்கழகம், நியூ ஹேவன், கனெக்டிகட்

12) யாளே பல்கலைக்கழகம், நியூ ஹேவன், கனெக்டிகட்

உலகின் பிரபல ஐவி லீக் (Ivy league ) கல்லூரியான இது, 1701 ல் துவங்கப்பட்டதில் இருந்தே அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது. அதிபர் கிளின்டன், ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜான் மார்ஸ் போன்றோர் இங்குப் படித்த பிரபலங்களில் சிலர். இங்கு இளங்கலை பட்டப்படிப்பு படிக்க ஆண்டிற்கு 70,570டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும்.

11) பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிலாடெல்பியா, பென்சில்வேனியா

11) பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிலாடெல்பியா, பென்சில்வேனியா

பெஞ்சமின் பிரான்கிளினால் துவங்கப்பட்ட இந்தப் பிரபல ஐவி லீக் கல்லூரியான இதன் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகள் மட்டும் 900 மில்லியன் டாலர்கள். அமெரிக்காவின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதன் முன்னாள் மாணவர்கள் டெல்சாவின் எலான் முஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இங்கு இளங்கலை படிக்கக் கல்விகட்டணம், விடுதி மற்றும் தேர்வுக்கட்டணம் உள்பட ஆண்டிற்கு 66,000 டாலர் கட்டணம் ஆகும்.

10) ஈத் ஜூரிச், சுவிட்சர்லாந்து

10) ஈத் ஜூரிச், சுவிட்சர்லாந்து

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் உலகின் மதிப்புமிக்கக் கல்வி நிறுவனமாகச் சுவிஸ் பல்கலைக்கழகம் திகழ்கிறது. மருத்துவம்,தரவுகள், உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் கடின சிந்தனை போன்ற துறைகளில் இங்குக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உள்பட 21 நோபல் விருதாளர்களை உருவாக்கியுள்ளது. ஐரோப்பியாவின் மையப் பகுதியில் உள்ள இப் பல்கலைக்கழகம், உண்மையிலேயே சர்வதேச பல்கலைக்கழகம் எனக் கூறும் வகையில் 120 நாடுகளின் மாணவர்கள் படிக்கின்றனர். இங்குப் படிக்க ஆண்டிற்கு 26,000 டாலர்கள் செலவாகும்.

9) சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோ இல்லிநாய்ஸ்

9) சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோ இல்லிநாய்ஸ்

கேன்சர் மற்றும் மரபியலுக்கு இடையே உள்ள சம்பந்தம் கண்டறிந்த இடமான இங்கு, 90 நோபல் விருதாளர்களையும்(6 பல்கலை ஊழியர்கள்), 30 தேசிய பதக்கம் பெற்றவர்களையும் உருவாக்கியுள்ளது.எழுத்தாளர்கள் சவுல் பெல்லோ,சூசன் சோன்டாக் மற்றும் வானியல் அறிஞர் எட்வின் ஹப்பிள் போன்றோர் இதன் முன்னாள் மாணவர்கள்.இங்கு இளங்கலை படிக்கக் கல்விகட்டணம், விடுதி, தேர்வுக்கட்டணம் மற்றும் தனிப்பட்ட செலவுகள் உள்பட ஆண்டிற்கு 74,526 டாலர் செலவாகும்.

8)இம்பெரியல் காலேஜ், லண்டன்

8)இம்பெரியல் காலேஜ், லண்டன்

அறிவியல், பொறியியல், தொழில் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குப் பெயர்பெற்ற உலகத்தர நிறுவனமான இது, யூ.கே வின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. பென்சிலினை கண்டறிந்த சர் அலெக்சாண்டர் பிளம்பிங் போன்ற பலர் இதன் முன்னாள் மாணவர்கள். 15,000 மாணவர்களுடன் இப்பல்கலைக்கழகம் கல்விகற்கச் சிறப்பான சூழ்நிலையைத் தருகிறது. யூ.கே மற்றும் ஐரோப்பிய யூனியன் மாணவர்களுக்குக் கட்டணமாக ஆண்டிற்கு 12,132 டாலர் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர் களுக்குத் துறையைப் பொறுத்து மாறுபடும்.

7) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் , நியூஜெர்சி

7) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் , நியூஜெர்சி

41 நோபல் விருதாளர்கள், 2 அமெரிக்க அதிபர்கள், அமேசான் சி.ஈ.ஓ ஜெப் பீசோஸ் மற்றும் கூகுள் செயல் தலைவர் எரிக் போன்றோர் இந்தக் கல்லூரியின் குறிப்பிடத்தகுந்த முன்னாள் மாணவர்கள். அனைத்துப் பின்புலம் மற்றும் ஆர்வம் மற்றும் பெருமைகள் பெற்ற மாணவர்களையும் பொருளாதார உதவியுடன் சேர்த்துக்கொள்ளும் கல்லூரி இதுவாகும். கல்வி, விடுதி, தேர்வு கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளுடன் ஆண்டிற்கு இங்கு70,010 டாலர் செலவாகும்.

 6) ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், மசாசுசெட்ஸ்

6) ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், மசாசுசெட்ஸ்

1636ல் துவங்கப்பட்ட இது அமெரிக்காவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம். வெறும் 9 மாணவர்களுடன் துவங்கிய இதில் தற்போது 20,000 க்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மாணவர்கள் உள்ளனர். ஹார்வோர்டில் படித்துமுடித்த பல முன்னாள் மாணவர்கள் இருந்தாலும், பாதியிலேயே வெளியேறிய பேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் மற்றும் மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் குறிப்பிடத்தகுந்தவர்கள். இங்குப் படிக்க ஆண்டிற்கு 63,205டாலர்கள் செலவாகும்.

5) மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கேம்பிரிட்ஜ், மசாசுசெட்ஸ்

5) மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கேம்பிரிட்ஜ், மசாசுசெட்ஸ்

எம்.ஐ.டி எனப் பரவலாக அறியப்படும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் மெச்சத்தகுந்த கற்பித்தல் மற்றும் ஆய்வுகளுக்குப் பெயர்பெற்றது. 85 நோபல் விருதாளர்கள் மற்றும் 58 தேசிய அறிவியல் பதக்கம் பெற்றவர்களை உருவாக்கியுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்க, ஆண்டிற்கு 41,300 டாலர் கட்டணம் ஆகும்.

 3) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம், பேலோ அல்டோ, கலிபோர்னியா

3) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம், பேலோ அல்டோ, கலிபோர்னியா

கற்றல், தேடல், புதுமை, வெளிப்பாடு மற்றும் சொற்பொழிவு போன்றவற்றிற்குப் பெயர் பெற்ற இங்கு, கூகுள் சி.ஈ.ஓ லேரி பேஜ் முதுகலை மற்றும் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும்,யாஹூ இணை நிறுவனர் டேவிட் பிலோ உள்படப் பல தொழில்நுட்ப பில்லியனர்களையும் உருவாக்கியுள்ளது. இங்குப் படிக்கக் கல்வி கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களும் சேர்த்து ஆண்டிற்கு 48,987டாலர் செலவாகிறது.

3) கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா, அமெரிக்கா

3) கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா, அமெரிக்கா

அறிவியல் மற்றும் பொறியியலுக்கு உலகிலேயே புகழ்பெற்ற பல்கலைக்கழகமான இது,ஆய்வுகளுக்குப் பெயர்பெற்றது. 35 நோபல் பரிசாளர்கள்,ஒரு பீல்ட்ஸ் மெடல், 6 டூரிங் அவார்ட் மற்றும் 71 அமெரிக்க தேசிய அறிவியல் விருதாளர்களை உருவாக்கியுள்ளது.இங்கு 2,181 மாணவர்களே பயில முடியும் என்பதால், இங்கு நுழைவுத்தேர்வு மிகக்கடினமாக இருக்கும். இங்குப் படிக்கக் கல்விகட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களும் சேர்த்து ஆண்டிற்கு 68,900டாலர் செலவாகிறது.

2) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், யூ.கே

2) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், யூ.கே

1209 துவங்கப்பட்ட இது,உலகின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகவும், இரண்டாவது ஆங்கிலப் பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது. இப்பல்கலைகழகத்தினர் 92 பேர் அனைத்துப் பிரிவுகளிலும் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இங்குப் பயில பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய யூனியன் மாணவர்களுக்கு 12,132 டாலரும், வெளிநாட்டு மாணவர்களுக்கு 25,188 டாலர் கல்விகட்டணம் மற்றும் 8,640டாலர் கல்லூரி கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

1) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், யூ.கே

1) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், யூ.கே

ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் , யூ.கே-ன் பெருமைமிக்கப் பல்கலைக்கழகங்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 27 பிரிட்டிஸ் பிரதமர்களுக்கும், 30 சர்வதேச தலைவர்களுக்கும், 50 நோபல் விருதாளர்களுக்கும் கல்வி போதித்துள்ளது.இது போன்றவர்களை அதிகமாக உருவாக்கும் பட்டியலில் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. இங்குப் பயில பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய யூனியன் மாணவர்களுக்கு 12,132 டாலரும், வெளிநாட்டு மாணவர்களுக்கு 21,287 டாலர் கல்வி கட்டணம் மற்றும் 9,928டாலர் கல்லூரி கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What it costs to study at the world's 15 best universities

What it costs to study at the world's 15 best universities
Story first published: Wednesday, May 16, 2018, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X