உங்கள் ‘கிரெடிட் ஸ்கோர்’-ஐ தொடர் இடைவெளியில் ஏன் சரிபார்க்க வேண்டும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில வருடங்களாகத் தொடர்ந்து உடல் நலத்தினைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே பொன்று தான் தங்களது பினான்ஷியல் ஹெல்த் செக்கப்பும். உடல் நல பரிசோதனை போன்றே பினான்ஷியல் செக்கப்பும் முக்கியம் ஆகும். உங்களது வருவாய், கடன், சொத்துக்கள் போன்ற நிலையை ஆராய்ந்து முதலீடுகளைச் செய்யப் பினாஷியல் செக்கப் என்பது உதவியாக இருக்கும்.

ஃபினான்ஷியல் ஹெல்த் செக் அப் ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்கள்:

 உங்கள் கடன்மதி

உங்கள் கடன்மதி

கடனுக்கு விண்ணப்பிப்பது அல்லது மிகப் பெரிய தொகை கொடுத்து ஏதேனும் வாங்கும் போது சேமிப்பு மற்றும் கடன் பெறக்கூடிய தகுதியை தெரிந்துகொள்வது தேவையான ஒன்று. உங்கள் நிதி இலக்குகளை நிர்ணைக்கவும், கடன் பெறும் அளவை தெரிந்துகொள்ளவும், உங்களால் வாங்க முடியும் என்பதற்கான நிதி உள்ளதா என்பதைத் தொடர் கிரெடிட் ஸ்கோர் சரிபார்த்தல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 கடன் சரிபார்த்தல்

கடன் சரிபார்த்தல்

அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிர்க உங்கள் நிதி நிலையை மதிப்பிடு செய்தல் அவசியம். வருமானத்திற்கு அதிகமாகக் கடன் இருக்கிறது என்றால் சரியான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். மாத செலவுகளைக் குறைப்பதன் மூலமாகவும் கிரெட்டி கார்டு பில் அல்லது வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்தி வருவதன் மூலம் அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்கலாம். செலவுகளைக் குறைத்துச் சேமிப்பது நல்ல பயனை அளிக்கும்.

உபரி பட்ஜெட்

உபரி பட்ஜெட்

வருவாயில் குறிப்பிட்ட அளவிலான தொகையினை உபரியாக வைத்துக்கொண்டு அவசர காலங்களில் பயன்படுத்தலாம். உபரி தொகையினை அவசரக் காலங்களில் எடுக்கக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் நிதி நிலையில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் போது இது உங்களுக்கு உதவும்.

 அவசர கால நிதிக்கு திட்டமிடுதல்

அவசர கால நிதிக்கு திட்டமிடுதல்

அவசர கால நிதி தேவைக்குத் திட்டமிடுதல் என்பது தனி நபர் ஒருவருக்கு முக்கியமான ஒன்றாகும். எப்போது அவசர தேவைக்குப் பணம் தேவை எனும் நிலை வரும் என்று யாராலும் கூற முடியாது. உங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் அவசர கால நிதி திட்டங்களுக்குப் பணத்தினை ஒதுக்குவது தேவையான ஒன்று. இல்லை என்றால் உபரியாக நீங்கள் சேமித்த தொகையினைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கான முதலீடு தெரிவுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

உங்களுக்கான முதலீடு தெரிவுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

தொடர்ந்து உங்கள் நிதி நிலையினை ஆராய்வதன் மூலம் நாம் எங்குத் தேவையில்லாமல் செலவு செய்கிறோம் என்பதைக் கண்டறியலாம். தேவையில்லாமல் நாம் ஏதேனும் வழிகளில் பணத்தினைச் செலவு செய்துகொண்டு வந்தால் அதனை முதலீடு செய்து செல்வத்தினைப் பெருக்கலாம் அல்லது வரியை குறைக்க முயற்சி செய்யலாம். அதே நேரம் முதலீட்டைச் செய்வதற்கு முன்பு ஆலோசனைகள் மற்றும் அதில் உள்ள ரிஸ்க்குகள் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.

  கற்பித்தல் அனுபவம்

கற்பித்தல் அனுபவம்

தொடர்ந்து பினான்ஷியல் செக்-அப் செய்வது என்பது தனிநபர்கள் பொருளாதார நிலையை அறிய மற்றும் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தினை லாபம் அளிக்கும் வகையில் முதலீடு செய்வது நல்லது என்பதைப் பிறருக்கும் எடுத்துக் கூறலாம். வருங்காலத்திற்குத் தேவையான நிதியைச் சேமிக்கும் நுட்பங்களைத் தங்களது இலக்கிற்கு ஏற்றவாறு சேமித்துப் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும். இது நிதியை எப்படி அணுக வேண்டும் என்பதற்குப் பாடமாக அமையும்.

ஓய்விற்காகச் சேமித்தல்

ஓய்விற்காகச் சேமித்தல்

உங்கள் ஓய்விற்க்காக சேமிக்கத் திட்டமிடுவது மிக முக்கியம். மருத்துவச் செலவு அதிகரித்தல், வாழ்க்கை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்தல் போன்ற காரணங்களால் எங்கு முதலீடு செய்வது நல்லது என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். தொடர்ந்து நிதி நிலையினைச் சரிபார்ப்பதன் மூலம் உங்களால் ஓய்வு காலத்திற்காகத் திட்டமிட முடியும்.

அடுக்கோடு

அடுக்கோடு

நாம் மேலே பார்த்தவை எல்லாம் தொடர்ந்து நிதி நிலையை ஆராய்வதன் மூலம் சரியாகத் திட்டமிட்டு நல்ல ஆரொக்கியம் மற்றும் பிரகாசமான வருங்காலத்தினைப் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why is a financial health checkup important at regular intervals?

Why is a financial health checkup important at regular intervals?
Story first published: Thursday, May 10, 2018, 14:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X