கிரெடிட் கார்டுகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! இந்தியாவை கலக்கும் 15 கிரெடிட் கார்டு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் அட்டை என்று சொல்லப்படுகின்ற கிரெடிட் கார்டுகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன் தரக் கூடிய வகையில் உள்ளன. உதாரணமாக ஆன்லைனில் பொருள்களை வாங்குவதில் அதிகம் விருப்பம் கொண்டவர்கள், ஷாப்பிங் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சிறந்தது. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், "டிராவல் கிரெடிட் கார்டு" பயன்படுத்துவது நல்லது. இப்படி எத்தனை வகையான கிரெடிட் கார்டுகள் உள்ளன ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன் தரக் கூடியன என்பதைப் புரிந்து கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

கிரெடிட் கார்டின் பயன்பாடு
 

கிரெடிட் கார்டின் பயன்பாடு

பணத்தைப் பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கிரெடிட் கார்டு முறை. காகிதப் பணத்திற்குப் பதிலாக வந்த பிளாஸ்டிக் பணம்தான் கிரெடிட் கார்டு. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, கடனாக, நமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தக் கடன் தொகையை வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகளின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.

1. வணிகக் கடன் அட்டை (Business Credit Cards)

1. வணிகக் கடன் அட்டை (Business Credit Cards)

வியாபாரம் செய்பவர்கள் மற்றும் நிறுவனங்களை நடத்துபவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவை இவ்வகைக் கடன் அட்டைகள். வணிகத்தை நடத்துவதற்குத் தேவையான கடனை மிக விரைவாகப் பெறுவதற்கு இவ்வகைக் கடன் அட்டைகள் உதவுகின்றன. செலவுகளைக் கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல், வணிகச் சேமிப்புத் திட்டம், பயணம் மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகள், கடன் பெறுவதற்கான உச்ச வரம்பு போன்றவற்றில் வணிகக் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் சலுகைகளை வழங்குகின்றன. SBI Corporate Platinum card, Business Money back HDFC Card மற்றும் ஆக்சிஸ் வங்கி வழங்கும் My Business Credit card ஆகியவை சிறந்த வணிகக் கடன் அட்டைகளுக்கு உதாரணங்களாகும்.

2. இருப்புத் தொகை மாற்ற வசதிக் கடன் அட்டை (Balance Transfer Credit Cards)
 

2. இருப்புத் தொகை மாற்ற வசதிக் கடன் அட்டை (Balance Transfer Credit Cards)

இவ்வகைக் கடன் அட்டைகளை வைத்திருப்போர், செலுத்த வேண்டிய கடன் தொகையை ஒரு கிரெடிட் கார்டிலிருந்து இன்னொரு கிரெடிட் கார்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். கடன் அட்டைகளுக்காகச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் இவ்வகைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தலாம். ஒரு அட்டையில் உள்ள இருப்புத் தொகையை இன்னொரு அட்டைக்கு மாற்றுவதற்காகக் குறைந்த அளவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். பெரும்பாலான வங்கிகள் முதல் மூன்று மாதங்களுக்குத் தங்களுடைய இருப்புத் தொகை மாற்றக் கடன் அட்டைகளுக்கு (Balance Transfer Credit Cards) எவ்வித வட்டியும் வசூலிப்பதில்லை. ICICI, SBI மற்றும் Standard Chartered போன்ற வங்கிகள் இத்தகைய கடன் அட்டைகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கின்றன.

3. பணம் திரும்பப்பெறும் கடன் அட்டைகள் (Cashback Credit Cards )

3. பணம் திரும்பப்பெறும் கடன் அட்டைகள் (Cashback Credit Cards )

நாம் செலவு செய்யும் தொகைகளுக்கு ஏற்பப் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை இவ்வகைக் கடன் அட்டைகள் வழங்குகின்றன. இவ்வகை அட்டைகளை வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்துப் பணம் திரும்பப் பெறல் மற்றும் பரிசுத் தொகை பெறும் வசதிகள் அமைகின்றன. Citibank மற்றும் Standard Chartered வங்கி ஆகியவை இவ்வகை அட்டைகளை வழங்குவதில் சிறந்த நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.

4. கூட்டிணைவுக் கடன் அட்டைகள் (Co-branded Credit Cards )

4. கூட்டிணைவுக் கடன் அட்டைகள் (Co-branded Credit Cards )

வணிக நிறுவனங்கள், இணையம் வழியாகச் செயல்படும் மின்-வணிக நிறுவனங்கள்,பயண ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் வங்கிகள் வழங்குகின்ற கடன் அட்டைகளைக் கூட்டிணைவுக் கடன் அட்டைகள் (Co-branded Credit Cards ) என அழைக்கலாம். தங்களோடு இணைந்துள்ள நிறுவனங்களின் மூலமாக வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளையும், பயன்பாடுகளையும் வங்கிகள் பெற்றுத் தருகின்றன. Yatra SBI Credit Card, IRCTC SBI Platinum Credit Card மற்றும் HDFC Snapdeal Credit card ஆகியவை இவ்வகையான கடன் அட்டைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

 5. மகளிருக்கான கடன் அட்டைகள் (Credit Cards for Women )

5. மகளிருக்கான கடன் அட்டைகள் (Credit Cards for Women )

மகளிரை மட்டும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை இவ்வகையான கடன் அட்டைகள், பொருள்களை வாங்குவதற்கு ஏற்பப் பரிசுப் புள்ளிகள், பணத்தைத் திரும்பப் பெறும் வசதி ஆகியவற்றை இந்த அட்டைகள் கொண்டுள்ளன. மேலும், பொருட்களை வாங்குவதற்கான கூப்பன்கள், வாங்கும் பொருட்களுக்கான வரி விலக்கு, காப்பீடு போன்ற பல்வேறு வகையான சிறப்புச் சலுகைகளையும் இந்த அட்டையைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. HDFC Bank Solitaire - Premium Women's Credit Card, Citibank Rewards credit card, ICICI bank coral card ஆகியவை மகளிருக்கான கடன் அட்டைகளுள் சிலவாகும்.

6. ஆன்லைன் ஷாப்பிங் கடன் அட்டைகள் (Credit Cards for Online Shopping)

6. ஆன்லைன் ஷாப்பிங் கடன் அட்டைகள் (Credit Cards for Online Shopping)

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த வகையான கடன் அட்டைகள் பயனுள்ளவையாக இருக்கும். ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கிடைக்கும் அனைத்து வகையான சலுகைகளையும் பெறுவதற்கு இவ்வகைக் கடன் அட்டைகள் உதவுகின்றன. தள்ளுபடி மற்றும் மின் வணிகத்திற்கான கூப்பன்கள், தவணைமுறையில் பொருட்களை வாங்குதல் ஆகிய சலுகைகள் இவ்வகைக் கடன் அட்டைகளுக்குக் கிடைக்கின்றன. SBI Simply Click மற்றும் Axis bank buzz credit card ஆகிவை ஆன்லைன் ஷாப்பிங் கடன் அட்டைகளுக்கான உதாரணங்களாகும்.

7. சிறப்புமிகு கடன் அட்டைகள் (Classic Credit Cards )

7. சிறப்புமிகு கடன் அட்டைகள் (Classic Credit Cards )

சிறப்புமிகு கடன் அட்டைகள் அல்லது கிளாசிக் கிரெடிட் கார்டுகள் பல வகையான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. உலகம் முழுவதும் பயன்படுத்துவதற்கேற்ற தன்மை, முன் பணம் பெறுதல், வட்டியில்லாக் கடன் காலம், அட்டைத் தொலைந்தால் அதற்கான காப்பீடு, வாடிக்கையாளர்களுக்கான மிகச்சிறந்த சேவை ஆகியவற்றின் காரணமாக இவ்வகைக் கடன் அட்டைகள் பிறவற்றிலிருந்து சிறந்து விளங்குகின்றன. IOB Classic Credit card, Indian Bank Global Classic Credit Card மற்றும் ICICI Bank British Airways Classic Credit Card ஆகியவை கிளாசிக் கிரெடிட் கார்டுகளுக்கு உதாரணங்களாகும்.

8. பொழுதுபோக்குக் கடன் அட்டைகள் (Entertainment Credit Cards )

8. பொழுதுபோக்குக் கடன் அட்டைகள் (Entertainment Credit Cards )

திரைப்படம், நாடகங்கள், தீம் பார்க், கண்காட்சிகள், விளையாட்டு அரங்குகள் போன்ற பொழுது போக்கு நிகழ்வுகளை அதிகம் விரும்புபவர்களுக்கு இவ்வகைக் கடன் அட்டைகள் பெரிதும் உதவுகின்றன. பொழுது போக்கு தொடர்பான நிகழ்வுகளின் மீது அதிகமான சலுகைகளைப் பெற இவ்வகைக் கடன் அட்டைகள் உதவுகின்றன. பரிசுப் புள்ளிகள் மற்றும் செலவுகளின் மீதான கழிவுகள் போன்ற பல கவர்ச்சிகரமான அம்சங்களும் உள்ளன. HDFC Titanium Times Card மற்றும் Kotak PVR Gold Credit Card ஆகியவை இவ்வகைக் கடன் அட்டைகளுக்கான உதாரணங்கள்.

9. வாகன எரிபொருளுக்கான கடன் அட்டைகள் (Fuel Credit Cards )

9. வாகன எரிபொருளுக்கான கடன் அட்டைகள் (Fuel Credit Cards )

பெட்ரோல் மற்றும் டீசலுக்காக அதிகமாகச் செலவு செய்பவர்கள் இவ்வகையான கடன் அட்டைகளைப் பயன்படுத்திப் பலன் அடையலாம். தள்ளுபடி, பணம் திரும்பப் பெறல், வரி விலக்கு எனப் பல அம்சங்களை இந்த அட்டைகள் கொண்டுள்ளன. Standard Chartered Super Value Titanium Card, ICICI Bank HPCL Coral American Express Credit Card மற்றும் Indian Oil Citi Platinum Credit Card ஆகியவை இவ்வகையான அட்டைகளுக்கான உதாரணங்களாகும்.

 10. வாழ்வியல் முறை மாற்றத்திற்கு ஏற்றக் கடன் அட்டைகள் (Life Style Credit Cards )

10. வாழ்வியல் முறை மாற்றத்திற்கு ஏற்றக் கடன் அட்டைகள் (Life Style Credit Cards )

வாடிக்கையாளர்களின் வாழ்வியல் முறையின் மாற்றம் மற்றும் அவர்களின் வருமான மாற்றத்திற்கு ஏற்பப் பயன் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கடன் அட்டைகள் இவை. ஷாப்பிங், ஓட்டல், பயணங்கள் எனத் தங்களுடைய வாழ்வியல் முறைக்கு ஏற்பப் பல்வேறு வகையான சலுகைகளை இந்த அட்டையைப் பெற்றிருப்பவர்கள் அனுபவிக்க முடியும். ஆக்சிஸ் வங்கியின் Signature Credit card இவ்வகையான அட்டைக்கு உதாரணம்.

11. முன் செலுத்தும் கடன் அட்டைகள் (Prepaid Credit Card )

11. முன் செலுத்தும் கடன் அட்டைகள் (Prepaid Credit Card )

இவ்வகையான அட்டைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னரே செலுத்த வேண்டும். இந்த அட்டைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உள்நாட்டு பண மதிப்புக்கானது மற்றொன்று அயல்நாட்டு பணமதிப்புக்கானது. இவ்வகையான அட்டைகள் டெபிட் கார்டுகளைப் போலவே செயல்படுகின்றன. கடன் மற்றும் கடனுக்கான வட்டி குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

12. உயர்வருவாய்க் கடன் அட்டைகள் (Premium Credit Cards )

12. உயர்வருவாய்க் கடன் அட்டைகள் (Premium Credit Cards )

வசதி படைத்தவர்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரிமியர் கடன் அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர் நிலை அமைப்புகள்(Clubs), விருந்து உபசரிப்புச் பணி, போன்றவற்றில் மிகச் சிறந்த சேவைகளைப் பெற இந்த வகையான அட்டைகள் உதவுகின்றன. உயரிய வருமானம் மற்றும் அதிகமான செலவு ஆகிய இரண்டும் இந்த அட்டையைப் பெறுவதற்கான தகுதிகள் ஆகும். HDFC Regalia Credit Card மற்றும் Citi Prestige Credit Card ஆகியவை இவ்வகையான அட்டைகளுக்கு உதாரணங்களாகும்.

13. மாணவர்களுக்கான கடன் அட்டைகள் (Students Credit Cards)

13. மாணவர்களுக்கான கடன் அட்டைகள் (Students Credit Cards)

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டவை மாணவர் கடன் அட்டைகள். இந்தியாவில் உள்ள சில வங்கிகள் மட்டுமே இவ்வகையான கடன் அட்டைகளை வழங்குகின்றன. 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு மட்டுமே இந்தக் கார்டுகள் வழங்கப்படும். வருமானத்திற்கான ஆதாரம், வேலைவாய்ப்புக்கான சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பித்தால் இவ்வகையான கடன் அட்டைகளைப் பெறலாம்.

 14. பாதுகாக்கப்பட்ட கடன் அட்டைகள் (Secured Credit Cards )

14. பாதுகாக்கப்பட்ட கடன் அட்டைகள் (Secured Credit Cards )

பாதுகாக்கப்பட்ட கடன் அட்டை நிலையான வைப்புத் தொகைகளின் மீது வழங்கப்படுகிறது. வைப்புத் தொகையைப் பொறுத்து கடன் அட்டைகளுக்கான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. கடன் பெறுவதற்கான நல்ல கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்கள் மற்றும் கடன் அட்டைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் இந்தப் பாதுகாக்கப்பட்ட கடன் அட்டைகளைப் பெற முயற்சிக்கலாம். இந்த அட்டைகளின் மீது பெறப்படும் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தத் தவறினால் அட்டை உரிமையாளரின் வைப்புத் தொகையிலிருந்து வங்கிகள் பிடித்தம் செய்து கொள்ளும்.

 15. பயணக் கடன் அட்டைகள் (Travel Credit Cards )

15. பயணக் கடன் அட்டைகள் (Travel Credit Cards )

அடிக்கடிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இவ்வகையான அட்டைகள் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து, பயணக் காப்பீடு, தங்கும் இடவசதி, விமான நிலைய சேவைகள் போன்றவற்றில் சலுகைகளைப் பெறப் பயணக் கடன் அட்டைகள் உதவுகின்றன. Citibank PremierMiles Credit Card, American Express Platinum Travel மற்றும் JetPrivilege HDFC Bank World Credit Card ஆகியவை சிறந்த பயணக் கடன் அட்டைகளாக உள்ளன.

 மேலும் சில வகைக் கடன் அட்டைகள்

மேலும் சில வகைக் கடன் அட்டைகள்

மேற்கண்ட கடன் அட்டைகள் தவிர மேலும் சில வகையான கடன் அட்டைகளும் புழக்கத்தில் உள்ளன. அவை, contactless credit card, life time free credit card, virtual credit card, , gold credit card, Platinum credit card, signature credit card மற்றும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கான கடன் அட்டைகள் போன்றவை ஆகும்.

கவனம் சிதறினால் கடனில் மூழ்கடித்துவிடும்

கவனம் சிதறினால் கடனில் மூழ்கடித்துவிடும்

கடன் அட்டைகள் நமக்குப் பலவகையிலும் பயன் அளிக்கக் கூடியவை. ஆனால் அவற்றை முறையாகவும் முன் யோசனையுடனும் பயன்படுத்த வேண்டும். கடன் அட்டையைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் கடனில் மூழ்க வேண்டிவரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 கடன் அட்டையை முறையாகப் பயன்படுத்துவதற்கு உரிய வழிமுறைகள்

கடன் அட்டையை முறையாகப் பயன்படுத்துவதற்கு உரிய வழிமுறைகள்

• நீங்கள் செலவு செய்யும் விதம், செலவுகளுக்கான தொகையைச் செலுத்தும் முறை ஆகியவற்றுக்கு ஏற்பக் கடன் அட்டையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

• கடன் அட்டைகளுக்கான ஆண்டுக் கட்டணம், வட்டி விகிதம், வட்டியில்லாக் காலம் ஆகியவற்றை ஒரு நிறுவனத்தின் கடன் அட்டையோடு பிற நிறுவனத்தின் கடன் அட்டையை ஒப்பிட்டுப் பார்த்து எது சிறந்ததோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

• கடனுக்கான உச்ச வரம்பு, வட்டியில்லா தவணைக் காலம் ஆகியவை குறித்த தகவல்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகுதான் கடன் அட்டையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

• ஒரே சமயத்தில் பல வகைக் கடன் அட்டைகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

• வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வகையில் சேவை அளிக்கக் கூடிய நிறுவனத்தின் கடன் அட்டைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

• கடன் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ரசீதுகளையும் பாதுகாத்து வைக்க வேண்டும்.

• பொருட்களைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என எழுகின்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிடாமல், தேவை ஏற்படாமல் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது என உறுதியேற்க வேண்டும்.

• கடன் அட்டையைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும். விருப்பத்திற்கு ஏற்பப் பயன்படுத்தக் கூடாது.

• கடனுக்கான தொகையை ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்த வேண்டும்.

• பரிசுப் புள்ளிகள் மற்றும் செலவுகளின் மீது திரும்ப அளிக்கப்படும் தொகை ஆகிய பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 Types of Credit Cards in India and Usage

15 Types of Credit Cards in India and Usage
Story first published: Wednesday, June 27, 2018, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X