எல்.ஐ.சி பீரிமியம் கட்டவேண்டுமா? பேடிஎம் இருக்கப் பயமேன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் இக்காலச் சூழ்நிலையில், பல்வேறு முக்கிய விசயங்கள் நினைவில் வைத்திருப்பதே பெரும் திண்டாட்டம் தான். அதிலும் முக்கியமாக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான தவணைத் தொகையைப் பெரும்பாலும் மறந்து விடுவோம்.

இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கும் வகையில் பேடிஎம் நிறுவனம் காப்பீடு திட்டங்களின் தவணை தொகையைச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

தற்போதைக்குப் பேடிஎம் தளத்தில் கீழ்கண்ட நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்குத் தவணைதொகை செலுத்த வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி
பிர்லா சன்லைப் இன்சூரன்ஸ்
ஏகன் லைப்
பார்தி ஆக்ஸா லைப்
எடில்வீஸ் டோகியா லைப்
எக்ஸைடு லைப்
ப்யூட்சர்ஜெனரலி லைப்
ப்யூட்சர்ஜெனரலி ஜெரனல் இன்சூரன்ஸ்
எச்.டி எப்.சி எர்கோ ஜெனரல்
ஐசிஐசிஐ ப்ரூ லைப்
ஐடிபிஐ பெடரல் லைப்
இந்தியா பர்ஸ்ட் லைப்
மேக்ஸ் லைப்
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்
ரிலையன்ஸ் நிப்பான் லைப்
ரெலிகேர் ஹெல்த்
ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ்
எஸ்.பி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ்
எஸ்.பி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ்
ஶ்ரீராம் லைப் இன்சூரன்ஸ்
டாடா ஏஐஏ லைப்
டாடா ஏஐஜி ஜெனரல் லைப் இன்சூரன்ஸ்

 

 பேடிஎம்-ல் பீரிமியம் செலுத்துவது எப்படி?

பேடிஎம்-ல் பீரிமியம் செலுத்துவது எப்படி?

தற்போது பேடிஎம்-ஐ பயன்படுத்தி எவ்வாறு காப்பீட்டுத் திட்டங்களுக்கான தவணை தொகையைச் செலுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை இன்ஸ்டால் செய்யவேண்டும்.

பின்னர்ப் பீரிமியம் தொகையைச் செலுத்த கீழ்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கவும்.

 

 படி#1
 

படி#1

பேடிஎம் செயலியை இயக்கி, அதில் இன்சூரன்ஸ் என்ற பெயருடன் உள்ள இலச்சினையை (icon) தேர்வு செய்தால், திரை கீழே உள்ளது போன்று தோன்றும்.

படி#2

படி#2

உங்களின் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். இங்கு எல்.ஐ.சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 படி#3

படி#3

தற்போது உங்கள் காப்பீட்டு திட்ட எண்ணை கீழே உள்ளது போல உள்ளீடு செய்யவும்.

படி#4

படி#4

உடனே காப்பீட்டு எண், காப்பீட்டாளரின் பெயர், பணம் செலுத்த வேண்டிய தேதி, செலுத்த வேண்டிய தவணைகளின் எண்ணிக்கை மற்றும் தவணைத்தொகை போன்ற தகவல்கள் தானாகவே காண்பிக்கப்படும். அந்தத் தகவல்களைச் சரிபார்த்தல் வேண்டும்.

அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பின்பு 'பணம் செலுத்த தயார்' (proceed to payment) என்பதை அழுத்தவும்.

காப்பீட்டு நிறுவனங்கள் நீங்கள் செலுத்தும் பணத்தை உங்கள் கணக்கில் வரவு வைக்க 2 வேலைநாட்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் பணம் செலுத்திய தேதி உடனடியாக மாற்றப்படும் என்பதை நினைவிற்கொள்க.

 

 படி#5

படி#5

பின்னர் இது பேடிஎம் டீல் பக்கத்திற்குக் கூட்டிச் செல்லும். அங்குப் பல்வேறு இலவச மற்றும் கட்டண டீல்களைத் தேர்வு செய்யலாம். தேர்வு செய்த உடன் 'proceed to pay' என்பதை அழுத்தவும். அதுமட்டுமின்றி இந்த டீல் பக்கத்தைத் தவிர்த்து நேரிடையாகப் பணம்செலுத்தும் பக்கத்திற்குச் செல்லலாம்.

படி#6

படி#6

தற்போது பேடிஎம் வாலெட், டெபிட்/கிரிடிட் அட்டை அல்லது இணையவழி வங்கி சேவை மூலம் பணம் செலுத்தலாம்.

 படி#7

படி#7

பணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய பின்பு, பணம் செலுத்தியதற்கான தகவல்கள் காண்பிக்கப்படும்.

நீங்கள் பணம் செலுத்திய உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண்ணிற்கு இந்தத் தகவல்களைப் பேடிஎம் அனுப்பும்.

இந்தத் தகவல்கள் அனைத்துப் பேடிஎம் பயனர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். இனி வீட்டிலிருந்தபடியே பேடிஎம் பயன்படுத்திக் காப்பீட்டு திட்டங்களின் தவணைத்தொகையை எளிதாகச் செலுத்தலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to pay LIC Premium on Paytm?

How to pay LIC Premium on Paytm?
Story first published: Tuesday, June 19, 2018, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X