வீடு வாங்கும் போது இளம் ஜோடிகள் செய்யும் தவறுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பணியாளரான கண்ணன், தனது குடும்பத்தின் தொடர் வற்புறுத்தலுக்கு இணங்க, தனது 26 வயதிலேயே 25 வயது நிரம்பிய பத்திரிக்கையாளரான மதுமதி-ஐ திருமணம் செய்துகொண்டார். திருமணம் வாழ்வில் ஒரே ஒரு முறை நிகழும் நிகழ்வு என்பதால், அனைத்து சேமிப்புகளையும் பயன்படுத்திப் பிரம்மாண்டமாகத் திருமணத்தைச் செய்து முடித்தனர்.

 

வீடு

வீடு

நாட்கள் அப்படியே நகர்ந்தது, இருவரும் ஒரு நல்ல வீட்டை வாங்க முடிவுசெய்தனர். ஏனெனில் இனி மேலும் இருவரும் பேச்சிலர் இல்லை, அடிக்கடி குடும்பத்தினரும், நண்பர்களும் வீட்டிற்கு வந்து செல்வர்.

வீட்டுக்கடன் பெறுவது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. எனவே இருவரும் தங்களது அனைத்தும் முயற்சிகளையும் எடுத்து, இருக்கும் பணத்தை முடிந்தளவு திரட்டி, வங்கியில் கூட்டுக்கடன் (Joint Loan) பெற்று நெய்டாவில் கட்டுமான நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினர்.

 

 நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

இந்தப் புதிய ஜோடிக்கு அனைத்துமே புதிதாக இருக்கவேண்டும். எது எப்படியிருந்தாலும் துவக்கத்தில் நல்ல வாழ்க்கைத்துணை, நல்ல வீட்டை பதிவு செய்தல் என இருந்த வாழ்க்கை, பின்னர்க் குடியிருக்கும் வீட்டின் வாடகை மற்றும் வங்கி வீட்டுக் கடனுக்கான ஈ.எம்.ஐ என இரண்டும் ஒன்றாக இருவருக்கும் அழுத்தம் தர ஆரம்பித்தன. மேலும் மற்ற மாதந்திர செலவுகளும் சேர்ந்துகொண்டு பொருளாதார ரீதியில் உலுக்கி எடுத்தன.

தலைகீழாகப் புரண்டது
 

தலைகீழாகப் புரண்டது

நல்ல அமைதியான வாழ்க்கை, புதிய இடங்களுக்குச் செல்லுதல், நண்பர்களை விருந்துக்கு அழைத்தல், புதிய உடை, கொண்டாட்டங்கள், நகைகள் என உள்ள வாழ்க்கையை விரும்பியவர்களுக்கு அவை அனைத்தும் அசாத்தியமானது.

மதுமதி திட்டம்

மதுமதி திட்டம்

திருமணத்திற்குப் பின்பு தனது பணியில் இருந்து இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என மதுமதி நினைத்தார். அடுத்து அதுவும் சாத்தியமில்லாமல் போனது. பாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்ற திருமணங்கள் நிஜ வாழ்வில் ஒத்துவராது எனத் தற்போது தான் இந்த ஜோடி உணர்ந்தது. பின்னர் ஏற்படும் பின்விளைவுகள் தெரியாமல் தங்களின் திருமணமாகாத பருவம் தான் சிறந்தது என மாற்றிமாற்றிக் கலாய்த்துக்கொண்டிருந்தனர்.

திருமணம்

திருமணம்

திருமணத்தால் ஏற்படும் நிதி தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல், பெரும்பாலான மக்கள் ஒரு கனவுடனேயே திருமண வாழ்வில் நுழைகின்றனர். "நான் சற்று விவேகமாக எனது சொந்த சேமிப்பை வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தியிருந்தால் இப்படியொரு நிதி நெருக்கடியில் சிக்கியிருக்க மாட்டோம். அவை அனைத்தையும் தேவையில்லாமல் பிரம்மாண்ட திருமணம் செய்யச் செலவளித்துவிட்டோம்" என்கிறார் மதுமதி.

தேவையில்லாத காரணம்

தேவையில்லாத காரணம்

"நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நம்மைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள, அவசர அவசரமாக வீட்டை முன்பதிவு செய்வது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. ஒரு சிறிய தவறு எங்களை இனி காலாகாலத்திற்கும் துன்புறுத்தப்போகிறது. நாங்கள் வங்கிக்கடனைக் கூட்டுக்கடனாகப் பெற்றது தான் மிகப்பெரிய தவறு.

வங்கி கடனும் இல்லை

வங்கி கடனும் இல்லை

ஏதேனும் அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் கூட , எங்கள் இருவராலும் மற்றொரு வங்கிக்கடன் பெறமுடியாது. பெற்றோர் எனது திருமணத்திற்கு அதிகச் செலவு செய்தது தேவையற்றது என இப்போது வருந்துகிறேன். அந்தப் பணத்தை நன்கு திட்டமிட்டு வேறு வழியில் பயன்படுத்தியிருக்கலாம்" என்கிறார் கண்ணன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mistakes Couples Make When Buying A House

Mistakes Couples Make When Buying A House
Story first published: Monday, July 2, 2018, 11:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X