வங்கி மோசடியிலிருந்து தப்ப வேண்டுமா.. இதோ உங்களுக்கான 31 எளிய வழிமுறைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைபர் கிரைம் காவல்துறையின் காதில் பூச்சுற்றும் வேலைகள் உலகம் முழுவதும் ஒரு நிழல் யுத்தத்தைப் போலத் தொடங்கியிருக்கிறது. கடல் கடந்து, கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள யாரோ ஒருவர், நம்முடைய வங்கிப் பணத்தில் கைவைப்பது மிகச்சாதாரணமாகி விட்டது. கணினிமயமான வளர்ச்சியில் மர்ம ஆசாமிகளின் கைவரிசை பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

 

பணப்பரிமாற்றங்கள் மின்னணு பரிமாற்றமாக மாற்றம் பெற்றதில் ஆபத்தும் இருக்கிறது. உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் அழைப்பை விட அநாமதேய நபர்களின் அழைப்புகள் நமது செல்போனிலும், மின்னஞ்சலிலும் வந்து கொண்டே இருக்கிறது. வங்கிக் கணக்கு விவரங்களையும், கடவுச் சொற்களையும் கேட்கும் அவர்களின் நல்ல நோக்கத்தில், நமது துரதிர்ஷ்டமும் மறைந்து கிடக்கிறது. இந்த ஆன்லைன் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எளிய வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள்

பண அட்டைகளில் கையெழுத்துக் கட்டாயம்

பண அட்டைகளில் கையெழுத்துக் கட்டாயம்

கிரீடிட் கார்டுகளையோ, டெபிட் கார்டுகளையோ நீங்கள் வாங்கிய பிறகு முதலில் கார்டின் பின்புறத்தில் உங்கள் கையெழுத்தைப் போடுங்கள். டூப்ளிக்கேட் கார்டு என்பதைக் கண்டறிய இதுஒரு பொதுவான முறையாகும்.ஒரு கடையில் பணப்பரிமாற்றத்துக்குச் சென்ற கார்டு திருப்பி அனுப்பப்பட்டால், உங்களிடம் சேர்க்க இது உதவுகிறது.

 கேம் விளையாட்டில் தகவல் கூடாது

கேம் விளையாட்டில் தகவல் கூடாது

கணினியில் கேம் விளையாடும்போது உங்களின் அடையாளம் தொடர்புடைய முக்கியத் தகவல்களை அதில் தரக்கூடாது.

மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கவும்
 

மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கவும்

நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், வரி அதிகாரிகள், கடன் அறிக்கை முகவர்களைத் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் முகவரி மற்றும் அனைத்து தகவல்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இது ஹேக்கர்கள் உங்கள் கணக்குகளுக்குள் ஊடுருவாமல் தவிர்க்க உதவும்

ஆன்லைன் ஷாப்பிங்கில் நம்பகம்

ஆன்லைன் ஷாப்பிங்கில் நம்பகம்

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் நம்பகமான ஒரு வணிக நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஒவ்வொரு தகவலும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பாதுகாப்பான பரிவர்த்தனைதானா என்பதை உறுதி செய்ய உங்கள் இணைய முகவரி https:/ என்று தொடங்குகிறதா என்று பாருங்கன்.

சந்தேகப்படும் நபரா - ஜாக்கிரதை

சந்தேகப்படும் நபரா - ஜாக்கிரதை

சந்தேகப்படும் நபர் ஒருவர், உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார் என்று தெரிந்தால் அதை, பிளாக் செய்து விடுங்கள். அல்லது ஸ்பேம் ஆப்சனில் வைத்து விடுங்கள்.

கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம்

கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம்

மின்னஞ்சல் மூலமாகக் கணக்கு எண்ணையோ, கடவுச் சொல்லையோ நீங்கள் வாடிக்கையாளராக இருக்கும் வங்கி நிர்வாகம் உங்களிடம் ஒருபோதும் கேட்காது. ஆகையால் வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

 

 நல்ல எதிர்ப்பு வைரஸை பெறுங்கள்

நல்ல எதிர்ப்பு வைரஸை பெறுங்கள்

உங்கள் கம்ப்யூட்டர், செல்போன், டேப்லெட்களில் ஒரு நம்பகத்தன்மை மிக்க ஆன்டி வைரஸ், ஆன்டி மால்வேர் மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். மென்பொருள் புதுப்பிக்கப்படுவதை வழக்கமாகச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

பொதுக்கணினிகளில் வங்கி கணக்கை திறக்காதீர்கள்

பொதுக்கணினிகளில் வங்கி கணக்கை திறக்காதீர்கள்

உங்கள் வங்கிக் கணக்குகளைப் பார்க்க பொதுவான இடங்களில் உள்ள கணினிகளையோ, அலுவலகக் கணினிகளையோ பயன்படுத்த வேண்டாம். தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் பயன்படுத்திய பின் அந்தப் பக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறி விடுங்கள்.

 விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்

விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்

இணையத்தில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

கிரீடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்கவும்

கிரீடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்கவும்

ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் கிரீடிட் ரிப்போர்ட்டை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்கள் பெயரைப் பயன்படுத்தி யாராவது கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கலாம்.இது மாதிரியான மோசடிகள் உங்கள் மாதாந்திர அறிக்கையில் பிரதிபலிக்காது.

காசோலைப் புத்தகம்

காசோலைப் புத்தகம்

கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் உங்கள் காசோலைப் புத்தகங்களை எடுத்துச் செல்லாதீர்கள். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள்.

பல கடவுச் சொல்லை பயன்படுத்துங்கள்

பல கடவுச் சொல்லை பயன்படுத்துங்கள்

சமூக வலைத்தளங்கள், வங்கி லாக்கின்ஸ், மின்னஞ்சல்களில் ஒரே மாதிரியான கடவுச் சொல் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். பிறந்த தேதி, முகவரி போன்றவற்றைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்த கூடாது.பலவீனமான கடவுச் சொற்கள் உங்கள் அக்கவுண்டில் எளிதாக ஊடுருவிவிட முடியும். Lass Pass போன்ற கடவுச் சொற்கள் பாதுகாப்பானதாக இருக்கும்.

ஏடிஎம் பின் நம்பர்

ஏடிஎம் பின் நம்பர்

ஏடிஎம் பின் நம்பர்களை உங்கள் நினைவுகளில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனைக் கண்ட இடத்தில் எழுதி வைக்கக்கூடாது. குறிப்பாக உங்கள் கிரீடிட், டெபிட் கார்டுகளில் எழுதாதீர்கள்

ஆன்லைன் சேமிப்பில் கவனம்

ஆன்லைன் சேமிப்பில் கவனம்

தகவல்களை ஆன்லைனிலோ அல்லது பகிரப்பட்ட டிரைவிலோ சேமித்து வைத்தால், நினைவகத்திலிருந்து தப்ப வாய்ப்புள்ளது. ஆகையால் வங்கி விவரங்கள், நிதி விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் கடவுச்சொற்களை இதுபோன்ற முறையில் சேமிக்காதீர்கள்.

 கிரீடிட் கார்டு பராமரிப்பு

கிரீடிட் கார்டு பராமரிப்பு

பழைய கிரீடிட் கார்டுகளை வங்கியில் சொல்லி ரத்துச் செய்யுங்கள். புதிய கார்டைப் பெற்றவுடன் பழைய கார்டை அழித்து விடுங்கள்.

வைபை, ஹாட்ஸ்பாட் அச்சுறுத்தல்

வைபை, ஹாட்ஸ்பாட் அச்சுறுத்தல்

நம்பகமான வைபை யைக்கூட ஹேக்கர்கள் பயன்படுத்தலாம். ஆகையால் பொது வைபை மற்றும் ஹாட் ஸ்பாட்களைப் பயன்படுத்தும்போது, வங்கிச் செயல்பாடு இருக்க வேண்டாம்.

நம்பகமான பதிவிறக்கச் செயலி

நம்பகமான பதிவிறக்கச் செயலி

ஒரு நம்பகமான செயலியில் இருந்து பேங்கிங் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களின் ரகசிய தகவல்கள் அனைத்தையும் அதில் குறிப்பிட வேண்டியிருக்கும்

படித்தவுடன் நீக்கு

படித்தவுடன் நீக்கு

வங்கி தொடர்பாக வந்த ரகசிய தகவல்கள் மற்றும் நிதி விவரங்களைப் படித்தவுடன் நீக்கிவிட வேண்டும்

 சமூகப் பாதுகாப்பு எண்

சமூகப் பாதுகாப்பு எண்

அவசியமான சூழ்நிலை ஏற்படாதவரை சோசியல் செக்யூரிட்டி எண்ணைத் தயவு செய்து கொடுத்து விட வேண்டாம்.

 கடவுச்சொல் பாதுகாப்பு

கடவுச்சொல் பாதுகாப்பு

செல்போன், டேப்லெட்டுகளில் பிறர் எளிதில் அணுகித் தெரிந்து கொள்ள முடியாதவாறு பாஸ்கோடு நம்பரை வைத்திருங்கள். வங்கி விவரங்களைச் செல்போனில் சேமித்து வைத்துச் சிக்கிவிடாதீர்கள்

 எளிதில் நம்ப வேண்டாம்

எளிதில் நம்ப வேண்டாம்

வங்கி விவரங்கள், கிரீடிட் கார்டு தகவல்களை எந்த விற்பனையாளரிடமும் தொலைப்பேசி மூலமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

 இணைப்புகளைத் திறப்பதில் எச்சரிக்கை

இணைப்புகளைத் திறப்பதில் எச்சரிக்கை

உங்களை உடடினடியாகப் பணக்காரர்களாக்குவதாக உறுதிமொழியோடு வரும் லிங்க்ஸ் மற்றும் இணைப்புகளைத் திறக்க வேண்டாம். இதேபோல் ஆபாச படங்கள் வரும் லிங்குகளையும் திறக்காதீர்கள். ஏனென்றால் இது உங்கள் கம்ப்பூட்டரில் உள்ள மால்வேர் மென்பொருளைப் பாதிக்கக்கூடும்

மாதாந்திர ஸ்டேட்மெண்டை சரிபார்க்கவும்

மாதாந்திர ஸ்டேட்மெண்டை சரிபார்க்கவும்

சந்தேகத்துக்கு இடமான வங்கி மற்றும் கார்டின் ஸ்டேட்மெண்டுகளை ஆராயவும். முறைகேடு ஏதாவது நடந்திருந்தால் வங்கிக்குத் தகவல் அளிக்கவும்

தேவையற்ற தகவல்கள் தவிர்ப்பு

தேவையற்ற தகவல்கள் தவிர்ப்பு

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து விடுங்கள். தாயின் பெயர், தொலைப்பேசி எண், விரும்பும் வீட்டு விலங்குகளின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. ஹேக்கர்கள் உங்கள் வங்கி கணக்கை தெரிந்து கொள்ள இது உதவும்.

QR குறியீடு மோசடி

QR குறியீடு மோசடி

QR குறியீடுகள் சந்தேகத்துக்கு உரிய இணைப்பாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனை ஒரு பிராப்பிக்ஸாக வெப்சைட்டில் அனுப்ப பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Simple Tips To Protect You From Fraud

Simple Tips To Protect You From Fraud
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X