மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஜூலை 20 விவாதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கான ஹைதராபாத் உடன் பிரிந்து சென்ற நிலையில், ஆந்திர பிரதேசம் வளர்ச்சி வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு, இவை அனைத்திற்கும் ஏதுவான சூழ்நிலையை அமைத்துத் தரும் வரையில் சிறப்பு மாநில அந்தஸ்தை பிஜேபி கட்சியிடம் கோரியது.

 

2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதோடு ஆந்திர மாநிலத்தில் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்ட மோடி தலைமையிலான அரசு ஆந்திர மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டணி அமைத்தது.

வாக்குறுதி

வாக்குறுதி

தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பிஜேபி அரசு, வெற்றிபெற்று 4 வருடங்கள் ஆகியும் பல முறை ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயடு கோரிக்கை வைத்தும் ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்துவிட்டது.

மரியாதை தராத மத்திய அரசு

மரியாதை தராத மத்திய அரசு

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயடு வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு எனச் சொல்லுங்கள் என்ற வகையில் கேட்டக போக மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்காதது மட்டும் அல்லாமல், சரியான மரியாதை இல்லாமல் பேசியது.

கூட்டணி துண்டிப்பு
 

கூட்டணி துண்டிப்பு

இதில் கோபம் அடைந்த சந்திரபாபு நாயடு, பிஜேபி உடனான கூட்டணிக்குத் துண்டித்துக்கொண்டது மட்டும் அல்லாமல் தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வைத்தார். இந்தப் பிரச்சனை முற்றிவிட ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சி உடன் இணைந்து மத்தியில் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

சுமித்ரா மகாஜன்

சுமித்ரா மகாஜன்

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், ஆந்திர மாநிலம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றைக் கூட்டத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இந்தத் தீர்மானம் மீது வருகிற ஜூலை 20 ஆலோசனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே காங், தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து நடைபெறும் கூட்டத்திலும் பல அதிரடி நிறைந்த திருப்பங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

 

பங்கு சந்தை

பங்கு சந்தை

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகஜன் அனுமதி அளித்து உடன் புதன் கிழமை மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 146.52 புள்ளிகள் என 0.40 சதவீதம் சரிந்து 36,373.44 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 27.60 புள்ளிகள் என 0.25 சதவீதம் சரிந்து 10,980.45 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வியாழக்கிழமை பங்கு சந்தை நிலை என்ன ஆகும் என்பது கேவிக்குறியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sumitra Mahajan admits No Confidence Motion moved by opposition parties On Modi GOVT

Sumitra Mahajan admits No Confidence Motion moved by opposition parties On Modi GOVT
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X