டிமேட் கணக்கு திறப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச் சந்தை வர்த்தகம் என்பது மக்களிடையே மிகவும் விரும்பப்படும், முதலீடுகளில் ஒன்றாகும். இதனைப் பற்றி இன்னும் நம்ப முடியாத விஷயங்கள் இருந்தாலும் மக்களின் முக்கிய முதலீட்டு விருப்பமாக இது அமைகிறது. . இது பெரும்பாலான முதலீடுகளை விடச் சிறந்த வருமானத்தை வழங்குகிறது மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெரும் செல்வத்தைக் குவிப்பதற்குப் பல மக்களுக்கு உதவியுள்ளது.

 

ஆனால் பங்கு சந்தை வர்த்தகத்தில் வர்த்தகம் செய்ய அல்லது முதலீடு செய்ய ஒருவருக்கு டிமேட் கணக்குத் தேவைப்படுகிறது. முந்தைய காலங்களில் பங்குகள் சான்றிதழ் வடிவத்தில் இருந்து வந்தன. ஆனால் தற்போது அவை மின்னணு வடிவத்தில் சேமிக்கப்படுகின்றன.

இதனால் பங்குகளைக் கையாளுவதற்கு முன்னர் நீங்கள் ஒரு டிமேட் கணக்கை வைத்திருப்பது தற்போது கட்டாயமாகும். எனினும், ஒரு டிமேட் கணக்கை திறப்பதற்கு முன்பு, அதைச் செய்வதற்கு நீங்கள் பின்வரும் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும். இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு ஒரு கணக்கை தொடங்குவதற்கு முன், டிமேட் கணக்கு என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

டிமேட் கணக்கு என்றால் என்ன?

டிமேட் கணக்கு என்றால் என்ன?

இது என்எஸ்டிஎல் (தேசிய செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்) அல்லது சி.டி.எஸ்.எல் (மத்திய வைப்புத்தொகை சேவைகள் லிமிடெட்) உடன் உங்கள் பங்குகளைச் சேமித்து வைக்கும் ஒரு டெபாசிட்டரி பங்குதாரர் (டி.பி.) உடன் ஒரு மின்னணு கணக்கு.

ஒரு டிமேட் கணக்கு நீங்கள் அவற்றை விற்பனை செய்யும் வரை சந்தையில் இருந்து நீங்கள் வாங்கும் பங்குகளை வைத்திருக்கிறது.

 

 ஒரு டிமேட் கணக்கு திறக்கும் சரிபார்ப்பு பட்டியல்

ஒரு டிமேட் கணக்கு திறக்கும் சரிபார்ப்பு பட்டியல்

நீங்கள் ஒரு டிமேட் கணக்கு திறப்பதற்குச் சில விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

தரகர் சான்றுகளைச் சரிபார்க்கவும்
 

தரகர் சான்றுகளைச் சரிபார்க்கவும்

நீங்கள் உங்கள் டிமேட் கணக்கைத் திறக்கும் முன், நீங்கள் உங்கள் கணக்கு திறக்கும் தரகர் நம்பகமானவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். SEBI (செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா) உடன் தரகர் / டி.பீ. பதிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதைச் சரி பார்க்கவும். தரகர், SEBI பதிவு செய்யப்பட்டவராக இருந்தால், பிற்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோசடி நடவடிக்கையோ அல்லது வழக்கிற்கோ புகார் செய்ய எளிதாகிறது.

வைப்புத்தொகை சேவைகளை விசாரிக்கவும்

வைப்புத்தொகை சேவைகளை விசாரிக்கவும்

உங்கள் தரகர் ஒரு டெபாசிட்டரி பங்குதாரரா (DP) என்பதை விசாரிக்கவும். அவர் வைப்புத்தொகை சேவைகளை வழங்குவது குறித்துத் தெரிந்து கொள்ளவும். இது ஒரு கூடுதல் நன்மை. ஏனென்றால்,

1) இது நடவடிக்கைகளை மென்மையான முறையில் மற்றும் தொந்தரவு இன்றிச் செய்ய உதவுகிறது.
2) டிமேட் தொடர்பான சிக்கலுக்கு உங்கள் தரகரால் உதவ முடியும்.
3) வெளிப்படைத்தன்மை அதிகரித்து, வேலை வேகமாக முடியும்.

 

தரகு மற்றும் பிற கட்டணங்கள் பற்றி விசாரிக்கவும்

தரகு மற்றும் பிற கட்டணங்கள் பற்றி விசாரிக்கவும்

தரகர் தங்கள் சேவைகளுக்கு விதிக்கும் பல்வேறு கட்டணங்களைப் பற்றி டிமேட் கணக்கு திறப்பதற்கு முன் முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள். மாற்றுக் கட்டணம், வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனை கட்டணம் ஆகியவை சில வகைக் கட்டணங்கள் ஆகும். மேலும், வருங்காலங்களில் அவர்கள் விதிக்கும் மறைமுகமான கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

ஒரு நல்ல வணிகத் தளத்தைப் பாருங்கள்

ஒரு நல்ல வணிகத் தளத்தைப் பாருங்கள்

பின்வரும் அம்சங்கள் கொண்ட ஒரு நல்ல வர்த்தகத் தளம் வேண்டும் என்பது முக்கியம்:

1) நிகழ்நேர விலைகள்
2) ஏலம் மூலம் விலை கேட்பது
3) விற்பது மற்றும் வாங்குவதற்கான வரலாறு
4) பகுப்பாய்வு நிதி தரவு
5) தற்போதைய போர்ட்ஃபோலியோ விவரங்கள்
6) பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் மற்றும் அவற்றின் விவரங்கள்

 

ஆதரவு சேவைகள் பற்றி விசாரிக்கவும்

ஆதரவு சேவைகள் பற்றி விசாரிக்கவும்

மேலே உள்ளவற்றுக்கு மேலாக, உங்கள் தரகர் வழங்கியிருக்கும் ஆதரவு சேவைகள் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். நல்ல ஆதரவு சேவைகளை வழங்கும் நம்பகமான தரகர் இருப்பதால் சிரமங்களைத் தீர்ப்பதில் மற்றும் விரைவாகச் செயல்படுவதில் நிறைய உதவுகிறது.

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பற்றி விசாரிக்கவும்

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பற்றி விசாரிக்கவும்

மேலே உள்ள சேவைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு போன்றவை சிறந்த வருமானத்தைச் சம்பாதிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு அறிக்கைகள், பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத் தரவின் வடிவங்களில் நல்ல ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பொருள் வழங்கும் ஒரு தரகர், சிறந்த வர்த்தகங்களையும் முதலீடுகளையும் செய்வதன் மூலம் உங்களுக்குச் சிறந்த இலாபங்களைப் பெறுவதில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்க முடியும்.

மேலே உள்ள சரிபார்ப்புப் பட்டியலில் உள்ள எல்லா அம்சங்களையும் டிக் செய்த பிறகு, ஒரு நம்பகமான தரகர் மூலம் ஒரு டிமேட் கணக்கை திறக்கப் போகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இது உங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்குப் பல வழிகளில் உதவிகரமாக இருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things to Check Before opening A Demat Account

Things to Check Before opening A Demat Account
Story first published: Wednesday, July 11, 2018, 12:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X