குழந்தைகளுக்கான ஆதார் கார்டு.. எப்படி விண்ணப்பிப்பது.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைத்து முக்கியமான நிதி பரிமாற்றங்களில் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பள்ளி கல்லூரி என பல இடங்களிலும் அவசியமான ஒன்றாக உள்ளது.

 

ஆக அப்படிப்பட்ட அவசியமான ஆதார் கார்டினை எப்படி பெறலாம். ஆன்லைனில் பெற வழிகள் இருக்கா? வாருங்கள் பார்க்கலாம்.

மீண்டும் தாறுமாறான ஏற்றம்.. முதல் நாளே பெருத்த ஏமாற்றம் கொடுத்த தங்கம் விலை..!

பால் ஆதார் கார்டு

பால் ஆதார் கார்டு

அருகிலுள்ள ஆதார் மையத்துக்கு உங்கள் குழந்தையுடன் செல்லுங்கள். செல்லும்போது குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும். தற்போது குழந்தைகளுக்கு இரு விதமான ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 5 வயதிற்கு கீழான குழந்தைகள் எனில் அவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாளங்கள் தேவையில்லை. அதில் ஆதார் எண் தொடர்பான விவரங்கள், மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேவைப்படும். இது நீல நிறத்தில் இருக்கும். இதனை பால் ஆதார் கார்டு என்றும் கூறுவார்கள்.

5 வயதிற்கு பிறகு என்ன செய்யனும்?

5 வயதிற்கு பிறகு என்ன செய்யனும்?

எனினும் இந்த பால் ஆதார் கார்டு குழந்தை 5 வயதினை எட்டும்போது செல்லாது. 5 வயதிற்கு பின்னர் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்யப்பட வேண்டும். ஒரு வேளை குழந்தைக்கு 5 வயது வரை ஆதார் எடுக்கப்படவில்லை எனில், புதியதாக பயோமெட்ரிக் முறையில் ஆதார் கார்டுக்கு அப்ளை செய்ய வேண்டும். மேலும் 15 வயதிலும் குழந்தையின் ஆதார் கார்டு அப்டேட் செய்யப்பட வேண்டும்.

ஆதார் மையத்துக்கு செல்லுங்கள்
 

ஆதார் மையத்துக்கு செல்லுங்கள்

5 வயதிற்கு மேற்பட்ட குழந்தை எனில், பிறப்பு சான்று அல்லது போட்டோவுடன் கூடிய ஐடி கார்டினை எடுத்து செல்ல வேண்டும். இதனுடன் பெற்றோரின் ஆதார் விவரங்களும் இணைக்கப்படும். இதனை அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஆன்லைனில் அப்ளை செய்ய முடியுமா?

ஆன்லைனில் அப்ளை செய்ய முடியுமா?

பலருக்கும் இருக்கும் கேள்வி ஆன்லைனில் ஆதார் கார்டுக்கு விண்ணபிக்க முடியுமா? என்பது தான். இதற்காக பயனாளர்கள் https://appointments.uidai.gov.in/bookappointment.aspx பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பிழையில்லாமல் சரியாக கொடுக்கவும். அதன் பிறகு பிக்ஸ் அப்பாயின்ட்மெண்ட் என்ற ஆப்சனை கொடுக்கவும்.

எப்போது ஆதார் மையம் செல்ல வேண்டும்?

எப்போது ஆதார் மையம் செல்ல வேண்டும்?

அதில் ஆதார் பதிவுக்கான தேதியினையும் பதிவிட வேண்டும். அதில் உங்களது அருகாமையில் உள்ள ஆதார் மையத்தினை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு தேவையான ஆவணங்களுடன், Refereence Number- உடன், குறிப்பிட்ட தேதியில், ஆதார் மையத்திற்கு செல்லவும். குழந்தைக்கு 5 வயதிற்கு மேல் எனில் கைரேகை, பயோ மெட்ரிக் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். இதே 5 வயதுக்கு கீழான குழந்தை எனில் வெரிபிகேஷன் முடிந்த பின்னர் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் வரும். அதன் பிறகு உங்கள் குழந்தைக்கு ஆதார் கார்டு அனுப்பப்படும்.

பிழையில்லாமல் விண்ணப்பியுங்கள்

பிழையில்லாமல் விண்ணப்பியுங்கள்

உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, ​​அவரது பெயரை சரியாக உள்ளிடவும். பெயர் மற்றும் குடும்பப்பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி என பலவற்றையும் எழுத்துப்பிழைகள் இல்லாமல், சரியாக கொடுக்க வேண்டும். சிறு தவறு இருந்தாலும் கூட அது பின்னாளில் பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதை சரிசெய்ய பல நாட்கள் ஆகலாம்.

தவறுகள் வரலாம்

தவறுகள் வரலாம்

பெரும்பாலும் குழந்தைகளின் பெயர்களிலும், பிறந்த தேதியிலும் தவறுகள் ஏற்படலாம். ஆக அதனை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. குழந்தையின் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது ​​முகவரியை சரியாக உள்ளிடவும். வழக்கமாக, தந்தையின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட முகவரி கொடுக்கப்பட்டு, அது தொடர்பாக தந்தையின் ஆவணங்கள் கோரப்படுவது வழக்கம். எனினும், கணினியில் உள்ளிடப்பட்ட தகவல்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

பெற்றோரின் ஆதாருடன் இணைப்பு

பெற்றோரின் ஆதாருடன் இணைப்பு

குழந்தையின் ஆதார் அட்டை பெற்றோரின் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம், பெற்றோரின் ஆதார் அட்டையில் இருந்து குழந்தையை எளிதாக அடையாளம் காண முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadhar card for kids: How to apply for blue Aadhaar or Baal Aadhar card?

how to apply new aadhar card for child online offline.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X