உங்கள் எல்ஐசி பாலிசி கொரோனா கவர் செய்கிறதா..?! தெரிந்துகொள்வது எப்படி..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாகத் திகழும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் பல கோடி மக்கள் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்திருக்கும் நிலையில், தப்போது அனைவரிடமும் இருக்கும் மிக முக்கியமான கேள்வி எல்ஐசி பாலிசி கொரோனா மூலம் ஏற்படும் இறப்புகளுக்கும் அடங்குமா என்று தான்.

 

30 நிமிடத்தில் 5 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ், நிப்டி சரிவு..!

பலருக்கும் பல விதமான சந்தேகம் இருக்கும் காரணத்தால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிறைந்து இருக்கும் இந்தக் காலகட்டத்தில் எல்ஜிசி பாலிசி கொரோனா பாதிப்புகளை ஏற்குமா என்ற கேள்விக்குச் சரியான விளக்கத்தைப் பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

 முக்கியக் கேள்விகள்

முக்கியக் கேள்விகள்

LICயின் இந்த பச்சட் பிளஸ் திட்டத்தில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது. முதிர்வு ஆண்டு வரை பிரீமியம் செலுத்த தேவையில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் குறிப்பிட்ட காலம் என்று கூட கூற வேண்டியதில்லை. குறுகிய காலம் பிரீமியம் செலுத்தினாலே போதுமானது. கட்டண பிரீமியங்கள் 80சி பிரிவு கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகைக்கு 10 (10டி) கீழ் வருமான வரி விலக்கு உண்டு.

இவை அனைத்திற்கும் பதில் ஆம், முடியும் என்பது தான்.

 கொரோனா மூலம் மரணம்

கொரோனா மூலம் மரணம்

ஐபிஓ வெளியிட தயாராகி வரும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கொரோனா மூலம் ஏற்படும் இறப்பை பிற வியாதிகள் மூலம் ஏற்பட்டும் இறப்பைப் போல ஏற்றுக்கொள்கிறது. இதனால் எந்தப் பாலிசியாக இருந்தாலும் எல்ஐசியில் கொரோனா மூலம் ஏற்படும் இறப்புகளுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தின் படி முழுமையான கிளைம் கிடைக்கும்.

 நாமினிக்கு இன்சூரன்ஸ் தொகை
 

நாமினிக்கு இன்சூரன்ஸ் தொகை

இதேபோல் பாசிலிதாரர் கொரோனா மூலம் இறக்கும் பட்சத்தில் அவர் தேர்வு செய்துள்ள நாமினிக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாக அளிக்கப்படும் எனவும் விளக்கும் அளித்துள்ளது எல்ஐசி நிறுவனம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பிற வியாதிகள் மூலம் இறந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதேபோல் தான் கொரோனாவையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எவ்விதமான மாற்றமும் இல்லை.

 எல்ஐசி நிறுவனம்

எல்ஐசி நிறுவனம்

2020ஆம் ஆண்டில் கொரோனா மூலம் ஏற்பட்ட மரணங்களுக்கும் எல்ஐசி நிறுவனம் முழுமையாகக் கிளைம் தொகையைச் செட்டில் செய்துள்ளது. பல கோடி இந்திய குடும்பங்களைக் காப்பாற்றும் எல்ஐசி கொரோனா தொற்று போன்று மோசமான சூழ்நிலையிலும் கைகொடுத்து உதவுகிறது எல்ஐசி.

 பாலிசி தொகை

பாலிசி தொகை

சரி கிளைம் தொகையை எப்படிப் பெறுவது..? உதாரணமாகக் கொரோனா தொற்று மூலம் எல்ஐசி பாலிசிதாரர் மரணம் அடைந்தால் பாசிலியின் நாமினி அருகில் இருக்கும் எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று death claim Intimation, பாலிசிதாரர்ரின் இறப்புச் சான்றிதழ், பாலிசியின் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does your LIC policy cover COVID-19 claim? Check here

Does your LIC policy cover COVID-19 claim? Check here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X