எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. புதிதாக யுபிஐ சேவை அறிமுகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ எண்ணிலடங்கா சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகின்றது.

 

அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில அம்சங்களை உருவாக்கியுள்ளது.

ஓரே வருடத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் 'லாபம்'.. ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ வங்கி ஆதிக்கம்..!

இதனால் வாடிக்கையாளர்கள் இன்னும் எளிதாக வங்கி சேவையினை பெற முடியும். அந்த வகையில் தற்போது எஸ்பிஐ தனது வங்கி சேவைகளில், இனி யுபிஐ சேவையினை பெற முடியும் என அறிவித்துள்ளது.

யுபிஐ ஆக்டிவேஷன்

யுபிஐ ஆக்டிவேஷன்

இதனை அதன் ஆன்லைன் வங்கி சேவையின் மூலமாகவோ அல்லது யோனோ எஸ்பிஐ மூலமாகவும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆக வாடிக்கையாளர்கள் இந்த சேவையினை பெற்று மகிழுங்கள் என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

எப்படி ஆக்டிவேட் செய்வது?

எப்படி ஆக்டிவேட் செய்வது?

எஸ்பிஐயின் இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தங்களது யுபிஐ புரஃபைல் பகுதியினை அப்டேட் செய்ய வேண்டும்.

அதன் பிறகு யுபிஐ சேவைக்கான Enable or Disable என்ற ஆப்சன் இருக்கும். ஆக அதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களது மொபைல் நம்பரை கொடுத்து அப்டேட் செய்யவும்.

யுபிஐ ஆப்
 

யுபிஐ ஆப்

எஸ்பிஐ பே என்பது வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன் வழியாக, பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய மிக எளிய ஆப்சனாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதில் விர்சுவல் பேமெண்ட் முகவரியை தவிர, வேறு விவரங்கள் தேவையில்லை.

மொபைல் போன் வழியாக பணம் அனுப்பலாம்

மொபைல் போன் வழியாக பணம் அனுப்பலாம்

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் எஸ்பிஐயின் இந்த சேவையானது, மிக எளிதாக பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. இந்த யுபிஐ சேவையானது ஒருவரின் மொபைல் போன் வழியாக, ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு உடனடியான பணத்தினை அனுப்ப பயன்படுகிறது.

24 மணி நேரமும் சேவை

24 மணி நேரமும் சேவை

இது மொபைல்போன் வழியாக மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். இதன் மூலம் 24 மணி நேரமும் நாம் சேவையினை பெற முடியும். இதனை தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) வழி நடத்துகிறது. இது இந்திய வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் ஆதரிக்கப்படும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news! Here how SBI customers can enable upi for their account, check details here

SBI latest updates.. Good news! Here how SBI customers can enable upi for their account, check details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X