நிமிடங்களில் பான் கார்டு.. எப்படி பெறுவது.. இதோ முழு விவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பான் கார்டில் உள்ள நிரந்தரக் கணக்கு எண் வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல், பிஎஃப் வித்டிராயல் போன்ற பல இடங்களில் பல பரிவர்த்தனைகளில் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.

 

10 இலக்கில் உள்ள எண் இந்த பான் கார்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

20 நாட்கள் தான் இருக்கு.. அதற்குள்ள இதை செய்திடுங்கள்.. எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்..!

இப்படிப் பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைந்துவிட்டால், அடுத்து என்ன செய்வது? அவசர தேவையாக உள்ளதே? உடனடியாக பான் கார்டினை பெற வேறு ஏதேனும் வாய்ப்புண்டா? வாருங்கள் பார்க்கலாம்.

இணையத்தில் எப்படி டவுன்லோடு?

இணையத்தில் எப்படி டவுன்லோடு?

இதற்காக வாடிக்கையாளர்கள் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும். அதில் கீழாக உள்ள our services என்ற ஆப்சனில் instant E-PAN என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

நீங்கள் இதற்கு முன்பாக e-pan டவுன்லோடு செய்யவில்லை எனில், get new e-pan என்பதை கிளிக் செய்யவும்.

நீங்கள் இதற்கு முன்பாக e-pan டவுன்லோடு செய்யவில்லை எனில், get new e-pan என்பதை கிளிக் செய்வும்.

டவுன்லோடு எப்படி?

டவுன்லோடு எப்படி?

மேலும் e-pan டவுன்லோடு செய்யும் முன்னர், check status என்பதன் கீழ் உள்ள download pan என்பதை கிளிக் கொடுத்து continue என்பதை கொடுக்கவும்.

இதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணினை கேட்கும். அதனை கொடுத்து விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னர் கிளிக் செய்யவும்.

மெயிலுக்கு வரும் பான்
 

மெயிலுக்கு வரும் பான்

அதன்பிறகு உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். ஒடிபியை கொடுத்து கிளிக் செய்வதற்கு முன்னர், உங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? குறிப்பாக இ-மெயில் ஐடி சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது e-pan என்பது உங்களது மெயில் ஐடிக்கு வரும்.

வேறு எப்படி டவுன்லோடு செய்யலாம்?

வேறு எப்படி டவுன்லோடு செய்யலாம்?

உங்கள் மெயில் ஐடிக்கு வந்த பான் கார்டினை ரீபிரிண்ட் செய்து கொள்ளலாம்.

உங்களது பான் கார்டினை tin - NSDL or UTIITSL இணைய தளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஆன்லைனிலேயே 5 - 10 நிமிடங்களில் உங்களது பான் கார்டினை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் - பான் இணைப்பு

ஆதார் - பான் இணைப்பு

உங்களது ஆதார் - பான் நம்பரை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், பயனாளர்கள் அதனை விரைவில் இணைத்துக் கொள்ளுங்கள். ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயல்படாதவை என்று அறிவிக்கப்படும், இதற்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How can i get instant pan without any documents and free of cost through Aadhaar

pan card latest updates.. Lost pan card: how can i get instant e-pan in 5 minutes?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X