எளிதில் ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஆவணங்களில் ஒன்றாகும்.

 

வங்கி கணக்கு தொடங்குவதற்கும், வங்கி பரிவர்த்தனைக்கும், வருமான வரி தாக்கல், அடையாள சான்று, வீடு நிலம் வாங்குதல், இப்படி முக்கிய பரிவர்த்தனைகளின் போது இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இப்படி ஒரு முக்கியமான ஆவணத்தினை எப்படி ஆன்லைனில் ஈஸியாக விண்ணப்பிப்பது வாருங்கள் பார்க்கலாம்.

ஆன்லைனில் விண்ணபிக்கலாம்

ஆன்லைனில் விண்ணபிக்கலாம்

முன்பெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று, பல மணி நேரம் காத்திருந்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இன்று அப்படியில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எளிதில் விண்ணப்பிக்கலாம். அதெல்லாம் சரி, பான் கார்டினை விண்ணப்பிக்க உங்களிடம் என்னென்ன ஆவணங்கள் தேவை.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

ஆதார் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

பாஸ்போர்ட்

வாகன ஓட்டுனர் உரிமம்

போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்

தண்ணீர் செலுத்திய பில், மின்சார கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, கேஸ் பில், கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட், வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்.

இவற்றோடு பிறந்த தேதி சான்றுக்காக பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ் தேவை.

ஒரு வேளை மேற்கூறிய சான்றுகள் இல்லாவிட்டால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைபடத்துடன் கூடிய அடையாள சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.

NSDLல் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
 

NSDLல் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைனில் பான் கார்டுக்காக விண்ணப்பிக்க https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

அதில் முதல் காலத்தில் அப்பிளிகேஷன் டைப் என இருக்கும். அதில் புதியதாக பான் அப்ளை அல்லது கரெக்சன் என கொடுக்க வேண்டும். இதில் இந்திய குடிமகனா 49A அல்லது foreign citizen form 49AA என்பதை கிளிக் செய்யவும்.

இதனையடுத்து என்ன Category என்பதை கொடுக்கவும். அதாவது தனி நபரா அல்லது நிறுவனமா, டிரஸ்டா என்பதை கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு டைட்டில் கொடுத்து உங்களது உங்களது last name/sur name என்பதில் உங்களது பெயரை பதிவிடவும்.

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்?

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்?

அதனையடுத்து உங்களது பிறந்த தேதி, இமெயில் ஐடி, மொபைல் எண் என சரியாக கொடுக்கவும். அதன் பிறகு கேப்ட்சா கோடு இருக்கும். அதனை சரியாக பதிவிட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு கீழாக ஒரு சிறிய பாக்ஸ் இருக்கும். நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதா என பார்த்து சப்மிட் கொடுக்கவும்.

சப்மிட் கொடுத்த பிறகு உங்களுக்கு இன்னொரு ஸ்கீரின் தோன்றும். அதில் உங்களது டோக்கன் நம்பர் இருக்கும். அதன் பிடிஎஃப் ஆக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கேஒய்சி ஆப்சன்கள்

கேஒய்சி ஆப்சன்கள்

அதன் பிறகு கீழாக உள்ள continue with pan application form என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அது மற்றொரு பக்கத்திற்கு செல்லும். அதில் மூன்று ஆப்சன்கள் இருக்கும். ஒன்று டிஜிட்டல் கேஒய்சி, E-sign இருக்கும். இரண்டாவது ஆப்சன். Submit scanned images through e sign என இருக்கும். மூன்றாவது ஆப்சன் forward application documents physically

எந்த ஆப்சனில் விண்ணபிக்கலாம்?

எந்த ஆப்சனில் விண்ணபிக்கலாம்?

இதில் இன்று நாம் இன்று பார்க்கவிருப்பது இரண்டாது ஆப்சன். ஆக அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு கீழாக பிசிகல் பான் தேவையா என்ற ஆப்சன் இருக்கும். அதில் தேவை என கொடுத்துக் கொள்ளவும்.

அதன்பிறகு ஆதாரில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்ணினை கேட்கும். அதனை கொடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஆதாரில் உள்ளது போலவே பெயரை கொடுக்கவும். அதன் பிறகு gender கொடுத்து, உங்களுக்கு வேறு ஏதேனும் பெயர் இருந்தால் அதனை கொடுக்கவும்.

அதன் பிறகு அப்பாவுடைய பெயர் கேட்கும். அதனை கொடுத்த பிறகு source of income என கேட்கும். அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு உங்களது வீட்டு முகவரியை சரியாக முழுமையாக சரியாக கொடுக்கவும். அதன் பிறகு மொபைல் நம்பர், மெயில் ஐடி கொடுக்கவும். அதன் பிறகு representative asessee என்று கேட்கும். அதில் No என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Next என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

AO விவரங்கள்

AO விவரங்கள்

இது அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதில் AO detail கேட்கும். அதில் கீழாக உள்ள பாக்சில் இருந்து உங்களுக்கு தேவையான விவரங்களை எடுத்து பூர்த்தி செய்து கொள்ளலாம். அதன் பிறகு next என்ற ஆப்சனை கொடுக்கவும். இது அடுத்த பக்கத்திற்கு செல்லும்.

ஆவணங்கள் விவரங்கள்

ஆவணங்கள் விவரங்கள்

அடுத்த பக்கத்தில் டாக்குமென்ஸ் விவரங்கள் கொடுக்கவும். Proof of address என்ற ஆப்சனுக்கு எதை கொடுக்க போகிறீர்களோ அதனை கிளிக் செய்யவும். உதாரணத்திற்கு ஆதார் கார்டினை கொடுக்க போகிறீர்கள் எனில் ஆதார் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து பிறந்த தேதிக்கு என்ன ஆவணம் கொடுக்க போகிறீர்கள் என்பதை கேட்கும். அதிலும் ஆதார் அல்லது வேறு என்ன ஆவணம் கொடுக்க போகிறீர்களோ அதனை கொடுக்கவும்.

அதற்கு கீழாக declarion- ல் himself/herself என கேட்கும். நீங்கள் எங்கிருந்து பான் அப்ளை செய்கிறீர்கள் என்பதை கேட்கும். அதனை கொடுத்து தேதியை கொடுத்து கொள்ளவும்.

பதிவேற்றம் செய்ய வேண்டும்

பதிவேற்றம் செய்ய வேண்டும்

அதன் பிறகு உங்களது போட்டோ அப்லோடு செய்ய கேட்கும். அதில் உங்களது போட்டோவினை jpeg பார்மேட்டில் 200dpi பார்மேட்டில் கொடுக்கவும். பைல் சைஸ் 50 kb அளவு இருக்க வேண்டும். அதேபோல கையெழுத்தும் மேற்கண்ட அளவுகளில் ஸ்கேன் செய்து கொடுக்கவும். அதன் பிறகு சப்போர்ட்டிங் ஆவணத்தில் என்ன ஆவணம் கொடுக்க போகிறீர்களோ அதனை பிடிஎஃப் பார்மேட்டில் 300 kb அளவில் கொடுக்க வேண்டும். இதனை கொடுத்த பிறகு சப்மிட் கொடுக்கவும்.

இதன் பிறகு உங்களது அப்ளிகேஷன் வெற்றிகரமாக கொடுக்கப்பட்டதாகவும், கன்பார்ம் செய்யவும் கேட்கும். அதற்காக உங்களது முதல் எட்டு இலக்க ஆதார் நம்பரை கேட்கும். அதனை கொடுத்து நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியான என்பதை பார்த்துவிட்டு proceed என்பதை கொடுக்கவும்.

பேமெண்ட் ஆப்சன்

பேமெண்ட் ஆப்சன்

அதன் பிறகு பேமெண்ட் ஆப்சன் கேட்கும். அதில் ஆன்லைனில் பேமென்ட் கொடுக்கலாம். ஆக எதனை கொடுக்க விருப்பமோ அதனை கொடுத்துக் கொள்ளலாம். உங்களது பேமெண்ட் successful என்றால், continue என்பதை கிளிக் செய்யவும்.

கடைசியாக aadhar authendication

கடைசியாக aadhar authendication

அதன்பிறகு aadhar authendication செய்ய வேண்டும். அத்ல் authendication என்ற ஆப்சனை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதனை கொடுத்து சப்மிட் கொடுத்தால் acknowledgement நம்பர் வரும். அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக கொடுத்திருந்தால், உங்களுக்கு பான் கார்டு உங்களது முகவரிக்கு கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to apply for pan card online? Check details

pan card online.. How to apply for pan card online? Check details
Story first published: Monday, April 12, 2021, 20:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X