புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.. முழு விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலகட்டத்தில் ரேஷன் அட்டை எங்கே விண்ணப்பிப்பது? தொலைந்து போனால் எப்படிப் பெறுவது? என்ற பெரிய குழப்பமே இருந்து வந்தது. இதற்காக இடைத்தரகர்களுக்கு ஆயிரக்கணக்கில் கொடுத்து செலவு செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

 

இது அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் பெற மட்டும் அல்லாது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் விண்ணப்பிக்க முக்கிய ஆவணமாக இருந்து வருகின்றது.

தனிக் குடும்பமாக வசிக்கும் தமிழக மக்கள் எவருமே குடும்ப அட்டைக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணபதாரர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக் கூடாது.

புதிய அட்டைக்கான விண்ணப்பம்

புதிய அட்டைக்கான விண்ணப்பம்

அதெல்லாம் சரி எப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது, வாருங்கள் பார்க்கலாம். முதலாவதாக இதற்காக https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தினை லாகின் செய்யவும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும். அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.

போட்டோ அப்லோடு

போட்டோ அப்லோடு

அதன் பிறகு மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்கவும். அதோடு அப்ளிகேஷனில் குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.

என்ன வகையான அட்டை?
 

என்ன வகையான அட்டை?

இதன் பிறகு அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம். இது 1 எம்பி அளவில் இருக்க வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலி போன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றையும் கொடுக்கலாம்.

எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள்?

எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள்?

எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களில், எண்ணெய் நிறுவனம் எது என கொடுக்கவும். உங்களிடம் ஒரு இணைப்பு மட்டும் உள்ளது எனில் ஒன்றில் மட்டும் கொடுத்தால் போதும். இரண்டு இருந்தால் இரண்டிலும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும் (HP, Bharat). ஒவ்வொன்றிலும் எத்தனை சிலிண்டர்கள் என கொடுக்கவும்.

எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கை

எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கை

அடுத்ததாக உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்கவும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும். அதில் இல்லாதவற்றை செலக்ட் செய்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும். கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

குழந்தைகள் பெயர் பதிவேற்றம்

குழந்தைகள் பெயர் பதிவேற்றம்

இதனையடுத்து யாரை சேர்க்க வேண்டும். அவருடைய பெயர் என்ன? குடும்ப தலைவருக்கு என்ன உறவு? அதாவது மகன் மகள், மனைவி என்பதை கொடுக்க வேண்டும். அவருடைய விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனையும் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் திருத்தம் எனில் அதனை கிளிக் செய்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.

எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள்

எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள்

அதன் பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர் கொடுக்க வேண்டும். அதாவது கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து கொண்டு, உறுதிப்படுத்தல் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

விவரங்கள் சரியா?

விவரங்கள் சரியா?

அதன் பிறகு உங்கள் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, பதிவு செய் என்பதை கொடுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது ரெட் கலரில் காண்பிக்கும். ஆக அதனை சரியாக கொடுத்து பதிவு செய்யுங்கள். அதன்பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

குறிப்பு எண் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்?

குறிப்பு எண் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்?

அதன் பிறகு உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என வரும். அதில் குறிப்பு எண்ணும் வரும். அதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை வைத்து தான் உங்களது கார்டின் நிலையை அவ்வப்போது பார்க்க முடியும். இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில்(TSO) கொடுக்க வேண்டும். ஏனெனில் விரைவில் உங்களது அப்ளிகேஷன் விரைவில் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலை என்ன?

விண்ணப்பத்தின் நிலை என்ன?

இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இதற்கு 1 - 2 மாதங்கள் ஆகலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to apply new ration card online: check details

Ration card updates.. How to apply new ration card online: check details
Story first published: Tuesday, April 13, 2021, 20:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X