ஆதார் கார்டில் மோசமாக உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா..? இதை செய்யுங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றளவில் அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் கார்டு அடிப்படை அடையாள அட்டையாக விளங்குகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெரும்பாலான ஆதார் கார்டில் புகைப்படம் சரியாகவும், தெளிவாகவும் இருப்பது இல்லை. இதனால் விமான நிலையம் முதல் வங்கி வரையில் அதிகாரிகள் ஒரு முறைக்கு இரு முறை தத்தம் ஆதார் கார்டுக்கு உரிமையாளர்களை உறுதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

 

ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ.3 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்..உ.பியில் பரபரப்பு..!

இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ஆதார் கார்டில் சரியான புகைப்படத்தை மாற்றினாலே போதுமானது. இப்படிப் புகைப்படம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..? எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

UIDAI அமைப்பு

UIDAI அமைப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் UIDAI அமைப்பு வழங்கும் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எந்தொரு அரசு சேவையும், நிதியியல் தொடர்பான பணிகளையும் செய்ய முடியாத அளவிற்கு மிகவும் முக்கியமான ஆவணமாக உருவெடுத்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆதார் கார்டு இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

ஆதார் கார்டில் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் மொபைல் எண் உடன் இணைப்பு ஆகியவை இருக்கும். தற்போது அனைத்துச் சேவைகளுக்கு ஆதார் கார்டு இணைப்பு அடிப்படை விதியாக வைக்கப்பட்ட நிலையில் மக்கள் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகளவில் ஆதார் கார்டு விபரங்களைச் சரி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

ஆதார் கார்டு புகைப்படம்
 

ஆதார் கார்டு புகைப்படம்

இதன் படி மத்திய அரசு ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றவும் அனுமதி அளித்துள்ளது. பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி ஆகிய தகவல்கள் எப்படி ஆதார் என்ரோல்மென்ட் சென்டரில் மாற்றுவோமோ அதே போலதான் ஆதார் கார்டு புகைப்படத்தையும் மாற்ற வேண்டும்.

வழிமுறை

வழிமுறை

இந்நிலையில் நீங்கள் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்ற வழிமுறையைத் தெரிந்துகொண்டு எளிதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

1. ஆதார் என்ரோல்மென்ட் சென்டர்-க்குச் செல்லும் முன் UIDAI தளத்தில் இருக்கும் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.

2. ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தில் தேவையான தகவல்களைப் பூர்த்திச் செய்துகொள்ளுங்கள்

3. ஆதார் என்ரோல்மென்ட் சென்டரில் இருக்கும் அதிகாரியிடம் கொடுத்தால் உங்களின் பயோமெட்ரிக் தரவுகளைச் சரி பார்த்து உறுதி செய்வார்.

4. இதன் பின் ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் அதிகாரி உங்களின் புகைப்படத்தை எடுத்து ஆதார் கார்டு தரவுகளில் புதுப்பிப்பு செய்வார்.

5. இதற்குச் சேவை கட்டணமாக 25 ரூபாய் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

6. இதைத் தொடர்ந்து ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் அதிகாரி தரவுகளைப் புதுப்பிப்பு செய்ததற்கான ரெக்குவஸ்ட் நம்பரை கொடுப்பார்.

7. உங்கள் தரவுகள் புதுப்பிக்கப்பட்டதா என்பதை URN எண் வைத்துச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to change photograph in Aadhaar card? Easy guide Step by Step process

How to change photograph in Aadhaar card? Easy guide Step by Step process
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X