பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்காகக் கடைசித் தேதியை வருமான வரித் துறை தொடர்ந்து ஒத்திவைத்த நிலையில் தற்போது டிசம்பர் 31, 2020ஐ கடைசி நாளாக அறிவித்துள்ளது.

 

இதன் மூலம் ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையிலான காலகட்டத்தில் பெற்ற வருமானத்திற்கு வரி செலுத்தாதவர்கள் டிசம்பர் 31, 2020க்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில் 10000 ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய மிகவும் எளிதான வழி பார்ம் 16. ஆனால் பார்ம் 16 இல்லாமல் எப்படி வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..!

 பார்ம் 16

பார்ம் 16

மாத சம்பளக்காரர்களுக்கு நிறுவனங்கள் கொடுக்கும் அறிக்கை தான் இந்தப் பார்ம் 16. இந்தப் பார்ம் 16ல் நிறுவனங்கள் ஊழியர்கள் கணக்கில் எவ்வளவு வரி வசூலித்துள்ளது, வருமான வரித்துறைக்கு எவ்வளவு சமர்ப்பித்துள்ளது என்பது போன்ற தரவுகள் இருக்கும்.

இது இல்லாத பட்சத்தில் வருமான வரி அறிக்கையை எப்படித் தாக்கல் செய்வது எப்படி..? பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள் என்ன..?

 பே சிலிப்

பே சிலிப்

மாத சம்பளக்காரர்களுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் பெரிய அளவிலான சம்பளத்தின் வாயிலாகத் தான் இருக்கும். எனவே உங்கள் நிறுவனத்தில் இருந்து ஒரு வருடத்திற்கான பே சிலிப்களை முதலில் திரட்டுங்கள்.

இந்தப் பே சிலிப் மூலம் ஒரு வருடத்திற்கான வருமானம் மற்றும் பிஎப் தொகையைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இந்தத் தொகையில் இருந்து உங்களது முதலீடு மற்றும் இதர வருமான வரிச் சலுகை தொகையைக் கழித்திடுங்கள்.

 டிடிஎல் கணக்கீடு
 

டிடிஎல் கணக்கீடு

வருமான வரி வலைத்தளத்தில் உங்கள் கணக்கிற்குள் நுழைந்த உடன் பார்ம் 26AS பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த அறிக்கையில் உங்களது நிறுவனம் எவ்வளவு தொகையை வருமான வரியாக அரசுக்குச் செலுத்தியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

 வருமான வரி விலக்கு

வருமான வரி விலக்கு

போக்குவரத்துக் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு, மருத்துவக் கொடுப்பனவு, standard exemption பிரிவில் 50,000 ரூபாய், வாடகை வீட்டில் குடியிருந்தால் வீட்டு வாடகை தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ளுங்கள்.

முதலீடுகள்

முதலீடுகள்

ஆயுள் காப்பீடு (80சி), பிபிஎப் (80சி), ஹோம் லோன் (பிரிவு 24), ஹெல்த் இன்சூரன்ஸ் (தனிநபர், பெற்றோர்கள், மனைவி, குழந்தை) (80டி), கல்வி கடன் (80ஈ) போன்றவற்றுக்குச் செலவு செய்த தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.

 வரிக்கு உண்டான வருமானம்

வரிக்கு உண்டான வருமானம்

மேலே கூறப்பட்ட அனைத்தையும் கணக்கிட்டு மீதமுள்ள வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். மேலும் கணக்கிடப்பட்டுள்ள வரிப் பார்ம் 26ASல் இருக்கும் அளவை விடவும் அதிகமாக இருந்தால் கூடுதலான வரி செலுத்த வேண்டி வரும். பார்ம் 26ASல் இருக்கும் அளவை விடவும் குறைவாக இருந்தால் வருமான வரித் தளத்தில் ரீபண்ட்-க்காக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to file income tax returns without form 16

How to file income tax returns without form 16
Story first published: Saturday, November 28, 2020, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X