8 லட்சம் சம்பளம் வாங்கினாலும் ஜீரோ வருமான வரி.. எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Form 16 வந்துச்சு. IT Return File பண்ணியா? இப்படியெல்லாம் சில வார்த்தைகள் உங்க காதுல விழலாம் இந்த ஆகஸ்ட் மாசத்துல. இது என்னன்னு தெரியாம சில பேர் இருக்காங்க, குறிப்பா புதுசா வேலைக்குப் போறவங்களுக்கும், வருடம் 8 லட்சம் ரூபாயக்கு கீழ் சம்பளம் வாங்குபவர்கள் கட்டாயம் இதை படிக்க வேண்டும்.

 

Form 16 அப்படினா என்ன?

Form 16 அப்படினா என்ன?

உங்க ஆண்டு வருமானம் (நிதியாண்டு) 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் மாசா மாசம் tax பிடிப்பாங்க. இதுக்கு TDS ( Tax Deducted at source)ன்னு பேரு. இப்படிப் பிடிச்ச பணத்தை உங்க பான் எண் வழியா வருமான வரித்துறைக்கு நிறுவனங்கள் செலுத்திவிடும். ஏப்ரல் முதல் மார்ச் வரையில் தான் பைனான்சியல் இயர், அதாவது நிதியாண்டு.

கிணறு வெட்டன ரசிது

கிணறு வெட்டன ரசிது

இந்தப் பைனான்சியல் இயர் காலத்துல புடிச்ச பணத்திற்கு ஒரு கிணறு வெட்டன ரசிது மாதிரி ஆபீஸ்ல ஜூலை/ஆகஸ்ட் மாசம் ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்க. அது தான்யா Form 16.

குறிப்பு : இந்த FYல உங்க வருமானம் 2.5 கீழ இருந்தா Form 16 உங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க.

இந்த Form 16 மூலம் என்ன பயன்?
 

இந்த Form 16 மூலம் என்ன பயன்?

சில நேரத்தில, உங்கட்ட இருந்து அதிகமா டாக்ஸ் புடிச்சு இருந்தா, அந்தப் பணத்தைத் திரும்ப வாங்கணுமே, அதுக்கு யூஸ் ஆகும். அப்புறம் உங்க ஆபீஸ்ல புடிச்ச பணத்தை வருமான வரித்துறை உங்க பாண் எண் கீழ் வரவு வச்சி இருக்காங்க, இத தவிர வேற வருமானம் எனக்கு இல்லைன்னு வருமான வரித்துறைக்குத் தெரியப்படுத்த இந்தப் பார்ம் 16 யூஸ் ஆகும்.

ரெய்டு வருவாங்களா..?

ரெய்டு வருவாங்களா..?

அப்படிச் சொல்லாமா போனா, வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் வர மாட்டாங்க.. ஆனா, ஒரு தடவை நம்மகிட்ட இருந்து தப்பா TDS புடிச்சா கூட ஐடி ரிட்டன் செய்யும் போது தான் வாங்க முடியும்.

 எந்த அடிப்படையில் டாக்ஸ் புடிக்கிறாங்க?

எந்த அடிப்படையில் டாக்ஸ் புடிக்கிறாங்க?

இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.. வாசு நம்ம திருச்சி பையன் படிச்சு முடிச்சு வீட்ல அப்பாகிட்ட திட்டு வாங்க முடியாம சென்னை-ல ஒரு கம்பெனில புதுசா IT ( Income Tax இல்ல Information Technology)ல வேலையில் ஜாயின் பண்ணிருக்கான்.

8 லட்சம் சம்பளம்

8 லட்சம் சம்பளம்

ஆண்டு வருமானம்- 8 லட்சம் (உடனே டென்சன் ஆகாதீங்க.. ஒரு பேச்சுக்கு வச்சிப்போம்). 5 லட்சம் க்கு மேல போச்சுன்னா 20% டாக்ஸ் ஆச்சே, அப்போ, வாசு 1.6 லட்சம் வருமான வரி கட்டனுமா? மாசம் 13,333 பெரிய தொகை ஆச்சே!

வரிக்கு உட்பட்ட வருமானம்

வரிக்கு உட்பட்ட வருமானம்

இங்க தான் முக்கியமான ஒரு வார்த்தைய நம்ம திருச்சி வாசு தெரிஞ்சுக்கணும். 'Taxable income'எடுத்ததும் 8 லட்சம் க்கு 20% போடாம, இந்த 8 லட்சத்துல, வாசு ஓட Taxable income என்னன்னு பாத்து அதுல தான் இந்த டாக்ஸ் ஸ்லாப் கணக்கிட்டு போடணும். எப்படி வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable income) கால்குலேட் பண்ணனும்னு வாசுக்கு தெரியனும்.

பேஸ்லிப் ரொம்ப முக்கியம்

பேஸ்லிப் ரொம்ப முக்கியம்

அதுக்கு அவன் கம்பெனியில கொடுக்குற பேஸ்லிப் பாக்கணும். அதுல சேலரி ஸ்டக்ச்சர் இருக்கும். ரொம்பப் பேர் பேஸ்லிப்-ல இருக்குற மாதிரி தான் வாசு ஸ்லிப்-லையும் . Basic Pay, HRA, Special Allowance இதெல்லாம் வருமான (Earnings) பக்கத்துலையும், TDS, Provident Fund, Professional Tax இதெல்லாம் Deductions பக்கத்துலையும் இருந்துச்சு.

வருமான பக்கம்

வருமான பக்கம்

வருமான பக்கத்த மட்டும் இப்போ பாக்கலாம். உதாரணமாகப் பேசிக் பே-ல இருக்குற தொகை (22,000 ரூபாய்) மொத்தமும் வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable income) பணம் தான். HRA-க்கு, மத்திய அரசு கொஞ்சம் வரித் தளர்வு தராங்க. பிற கொடுப்பனவு (allowances) முழுசா வரிக்கு உட்பட்ட வருமானம் தான். HRA வரி விலக்கு எப்படிக் கொடுக்கிறாங்க-ன்னு பார்ப்போம்.

HRA சலுகை

HRA சலுகை

நிலையான HRA அல்லது வாடகை செலுத்தியது - 10% சம்பளம் அல்லது 50% அடிப்படை சம்பளம் (பெரு நகரங்கள்) / 40% அடிப்படை சம்பளம் (பெரு நகரங்கள் அ நிலையான HRA அல்லது வாடகை செலுத்தியது - 10% சம்பளம் அல்லது 50% அடிப்படை சம்பளம் (பெரு நகரங்கள்) / 40% அடிப்படை சம்பளம் (பெரு நகரங்கள் அல்லாதவை). இந்த மூனுல எது கம்மியா வருதோ அது தான் வாசு வோட HRA வரி விலக்கு அளவீடு. இப்படிப் பார்க்கும் போது மாசம் 11,000 ரூபாய்ன்னு வச்சிப்போம். பத்தாது தான் வேற வழி இல்லை. ல்லாதவை). இந்த முனுல எது கம்மியா வருதோ அது தான் வாசு வோட HRA வரி விலக்கு அளவீடு. இப்படிப் பார்க்கும் போது மாசம் 11,000 ரூபாய்ன்னு வச்சிபோம். பத்தாது தான் வேற வழி இல்லை.

முதலீடு ரொபம் முக்கியம் வாசு

முதலீடு ரொபம் முக்கியம் வாசு

வாசு வேற எந்த முதலீடும் பண்ணல.. கிராஸ் சம்பளம் 8 லட்சம், HRA (11*12) - 1.32 லட்சம், இப்போ அவன் டாக்ஸ் எவ்ளோனனு பாக்கலாம். 8 லட்சம் - 1.32 லட்சம் = 6.68 லட்சம். இது போக அரசு Std. Deduction-ன்னு சொல்லி 50K கொடுப்பாங்க. Professional Tax max 2500 கொடுப்பாங்க. இந்த ரெண்டும் 6.68 லட்சத்துல கழிக்கணும் 6.68 லட்சம் - 52,500 = 615500.

6.15 லட்சம் ரூபாய் Taxable income

6.15 லட்சம் ரூபாய் Taxable income

இந்த 6.15 லட்சம் தான் வாசுவோட வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable income). நம்ம கரெண்ட் பில் ஸ்லாப் மாதிரி தான் இந்த டாக்ஸ் ஸ்லாப்.

இது தான் செலுத்த வேண்டிய வரி

இது தான் செலுத்த வேண்டிய வரி

2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை - 5% வரி = 12500 (அதிகப்படியாக) .

20% Taxable income - 5 லட்சம் = 23,100

மொத்தம் (12500+ 23100) = 35600

இதோட முடியல இந்தக் கதை, சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் - 1031 ரூபாய்.

35600 + 1031 = 36631 இது வருசம். மாசம் 3052 ரூபா சம்பளத்துல புடிப்பாங்க. இத எப்படி 0 ஆக்கணும்னு வாசுவுக்கு சந்தேகம் வர, நெட்டுல தேட ஆரம்பிச்சுட்டான்.

ஜீரோ வருமான வரி

ஜீரோ வருமான வரி

எந்த முதலீடும் இல்லைனா இப்படித் தான் புடிப்பாங்க, வரியை ஜீரோ எப்படிப் பண்ணனும்னு வாசு போன்ற அனைவருக்கும் சொல்லி கொடுப்போம். லைஃப் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் ரொம்ப முக்கியம், இது ரெண்டும் நமக்குக் கை கொடுக்கும். டாக்ஸ்-க்கும் வாழ்க்கைக்கும்.

 டேர்ம் இன்சூரன்ஸ்

டேர்ம் இன்சூரன்ஸ்

ஒரு Term insurance போட சொன்னன். 32,500 வருடாந்திர ப்ரீமியம் 1 கோடி ரூபாய் கவரேஜ் உள்ளதை தேர்வு செய்தான் வாசு. கல்யாணம், கொழந்தன்னு ஆகும். எதிர்காலத் தேவைக்குப் பிபிஎப்-ல வருடம் 50,000 போடலாம். அவன் 85,000 போட்டுட்டான் (வங்கி வைப்பு நிதியை விடவும் இது இப்போ பெட்டர்.)

மெடிக்கல் இன்சூரன்ஸ்

மெடிக்கல் இன்சூரன்ஸ்

அப்பா,அம்மாக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கலாம். ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு 60 ஆச்சுன்னா 35,000 ரூபாய் வரை, இல்ல 60க்கு கீழ்ன்னா 25,000 ரூபாய் வரையிலான தொகைக்கு 80டி கீழ் வரிச் சலுகை உண்டு. அவனுக்கு இன்சூரன்ஸ், ஆபீஸ்ல கொடுக்குற பாலிசி போதும்னு சொல்லிட்டான். அப்பா அம்மா-வுக்கு 28,000 ரூபாய்ல பாலிசி எடுத்தான்

80C வரிப் பிரிவு

80C வரிப் பிரிவு

லைப் இன்சூரன்ஸ், பிபிஎப், விபிஎப், ஈபிஎப், ஈஎல்எஸ்எஸ் இது எல்லாம் 80C வரிப் பிரிவு கீழ வரும். அதிகப்படியாக இதுல 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச் சலுகை பெறலாம்.

வாசுவுக்கு 80சி பிரிவுக்குக் கீழ 85,000 +32,500 =1.17 லட்சம் தான் ஆச்சு. மெடிக்கல் இன்சூரன்ஸ் 80Dல வரும். பெற்றோர்களுக்கு அதிகப்படியான லிமிட் 25,000 மட்டும் தான் காட்ட முடியும்.

வரி கணக்கீடு

வரி கணக்கீடு

இப்போ போடாலம் கால்குலேஷன்

கிராஸ் சம்பலம்- 8 லட்சம்

HRA- 1.32 லட்சம்

Std. Deduct - 50K

Profess Tax - 2.5K

மொத்தம் : 8 லட்சம்-1.32 லட்சம்-50k-2.5K = 6,15,500 ரூபாய்

80C - 85,000 +32,500 =1.17 லட்சம்

80D - 25,000 ரூபாய்

6,15,500 - 1,17,500 - 25000 = 5 லட்சம் ரூபாய்

5 லட்சத்திற்கு 5% டாக்ஸ்

5 லட்சத்திற்கு 5% டாக்ஸ்

இப்போ இந்த 5 லட்சத்திற்கு 5% டாக்ஸ் கட்டணுமான்னு பாவமா கேட்டான் வாசு. அங்க தான், Rebate னனு ஒன்னு இருக்கு. எப்படி 100 யூனிட் வரை கரெண்ட் பில் இல்லையோ, அதே மாதிரி 5 லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்குனா, அந்த 5% (12,500)கட்ட வேண்டாம். வரி இல்லை, அதுனால செஸ் வரியும் கட்ட வேண்டாம். இப்போ 0 டாக்ஸ். வாசு செம்ம ஹேப்பி

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to reduce your income tax: Easy guide for new employees

How to reduce your income tax: Easy guide for new employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X