திடீர் பண தேவையா..? பிஎப் பணத்தை 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மருந்துவச் சிகிச்சைக்காகத் திடீர் பணத் தேவை இருந்தால் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்த்து உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தைப் பயன்படுத்த முடியும்.

 

பிஎப் தளத்தில் ஆன்லைன் சேவைகள் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வரும் காரணத்தால், உங்கள் பிஎப் பணத்தைச் சில நிமிடத்தில் ஆன்லைன் வாயிலாகவே வித்டிரா செய்யலாம்.

45 வயதாகிறது.. இதுவரை எதுவும் சேமிக்கவில்லை.. மாதம் ரூ.3000 முதலீடு.. எதில் செய்யலாம்..!

இதேபோல் பிஎப் பணம் என்பது நாம் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது மிக முக்கியமான ஒன்று என்பதால் வித்டிரா செய்யும் பணத்தைப் புதிய நிதியாண்டு துவக்கத்தில் VPF வாயிலாக மீண்டும் பிஎப் கணக்கில் செலுத்த வழி உண்டு என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

 பிஎப் பணம்

பிஎப் பணம்

பொதுவாகப் பிஎப் பணத்தை மக்கள் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பணிகள் செய்யும்போதும் பயன்படுத்துவார்கள், உதாரணமாக மருத்துவச் சிகிச்சை, திருமணம், கல்வி, வீட்டு கட்டுதல் அல்லது வாங்கும் போது வித்டிரா செய்வார்கள்.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

தற்போது கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள இந்தத் திடீர் மருத்துவச் செலவிற்குப் பிஎப் தொகையைப் பயன்படுத்துவது மூலம் கடன் சுமையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

 பிஎப் பணத்தை வித்டிரா
 

பிஎப் பணத்தை வித்டிரா

EPFO தளத்தில் இருந்து பிஎப் பணத்தை வித்டிரா செய்வதற்கு முதலில் 3 முக்கியமான விஷயங்கள் தேவை

- செயல்பாட்டில் இருக்கும் உங்கள் UAN எண்

- UAN எண் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்

- வித்டிரா செய்யப்படும் பணத்தைப் பெறும் வங்கி கணக்கு ஆதார் எண் உடன் கட்டாயம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இது 3ம் சரியாக இருந்தால் அடுத்த 5 முதல் 10 நிமிடத்தில் பிஎப் பணத்தை உங்களால் வித்டிரா செய்ய முடியும்

 EPFO இணையதளம்

EPFO இணையதளம்

முதலீட்டில் ஊழியர்களுக்கான EPFO தளத்திற்குள் செல்லுங்கள் https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php இந்த இணையப் பக்கத்தில் சர்வீசஸ் என இடதுபுறம் கீழே இருக்கும். அதில் 2வது வரியில் இருக்கும் ஆன்லைன் சர்வீசஸ் என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

 லாக்இன் செய்யுங்கள்

லாக்இன் செய்யுங்கள்

ஆன்லைன் சர்விசஸ் இணைப்பை கிளிக் செய்த பின்பு திறந்துள்ள பக்கத்தில் உங்கள் UAN எண், பாஸ்வேர்டு, கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து லாக்இன் செய்யுங்கள். பாஸ்வேர்டு மறந்துவிட்டால் Forget Password கொடுத்து புதிய பாஸ்வேர்டு-ஐ உருவாக்கி மீண்டும் லாக்இன் செய்யுங்கள்.

 ஆன்லைன் சர்வீசஸ் -> கிளைம்

ஆன்லைன் சர்வீசஸ் -> கிளைம்

லாக்இன் செய்த பின்பு மெனு பாரில் இருக்கும் ஆன்லைன் சர்வீசஸ் பிரிவில் இருக்கும் கிளைம் பகுதியை கிளிக் செய்யுங்கள்.

கிளைம் பட்டனை கிளிக் செய்த உடன் உங்கள் ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் எண்-ஐ பதிவிடுங்கள்.

 வங்கி கணக்கு இணைப்பு

வங்கி கணக்கு இணைப்பு

வங்கி கணக்கு சரிபார்ப்புக்குப் பின்பு, EPFO அமைப்பின் விதிமுறைகள் மற்றும் கட்டளைகளை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் பின்பு ஆன்லைன் கிளைம்-க்கு (Proceed for Online Claim) என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.ட

 பிஎப் அட்வான்ஸ் பார்ம்-31

பிஎப் அட்வான்ஸ் பார்ம்-31

அடுத்தப் பக்கத்தில் பிஎப் பணத்தை வித்டிரா செய்வதற்கான படிவம் இருக்கும். இதில் பிஎப் அட்வான்ஸ் தொகை பெறுவதற்காகப் பார்ம்-31 படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்பு உங்கள் பிஎப் கணக்கைத் தேர்வு செய்ய வேண்டும்.

 வித்டிரா செய்வதற்கான காரணம்

வித்டிரா செய்வதற்கான காரணம்

இதைத் தொடர்ந்து பிஎப் பணத்தை வித்டிரா செய்வதற்கான காரணத்தை முதலில் குறிப்பிட வேண்டும், மேலும் இதற்கான காரணங்களும் டிராப் டவுன் மெனுவில் இருக்கும். இதில் கொரோனா சிகிச்சை செலவுகள் உட்படப் பல காரணங்கள் இருக்கும், உங்கள் தேவையை அறிந்து காரணத்தைக் குறிப்பிடுங்கள்.

 இதர முக்கிய விபரங்கள்

இதர முக்கிய விபரங்கள்

இதற்கு அடுத்த தேவையான பணத்தின் அளவு, உங்களின் முகவரி, இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் காசோலை அல்லது பாஸ்புக் ஸ்கேன் காப்பி ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 ஆதார் OTP

ஆதார் OTP

மேலே கூறிய அனைத்து தரவுகளையும் பதிவு செய்த பின்பு விதிமுறைகளை ஒப்புதல் பெற ஒரு டிக் பாக்ஸ் இருக்கும், அதை டிக் செய்த பின்பு ஆதார் OTP பெறுவதற்கான பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த OTP-ஐ பதிவிட்டுக் கிளைம் பார்ம்-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

 சில நாட்களில் கையில் பணம்

சில நாட்களில் கையில் பணம்

அடுத்த சில நாட்களில் பிப் வித்டிரா கோரிக்கை ஒப்புதல் பெற்றுப் பணம் உங்கள் வங்கி கணக்கில் பெற முடியும். உங்களிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் 10 நிமிடத்தில் உங்கள் பிஎப் பணத்தைப் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to withdraw PF money online Using UAN in Covid Times: Step-by-step guide

PF withdrawal.. How to withdraw PF money online Using UAN in Covid Times: Step-by-step guide
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X