இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவைகளும், அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்தில் டிஜிட்டல் சேவையைப் புகுத்து வருகிறது.
அந்த வகையில் நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு cardless EMI என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சேவை மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, விண்ணப்பம், கையெழுத்து என எதுவும் இல்லாமல் வெறும் பான் கார்டு, மொபைல் நம்பர், OTP மட்டுமே வைத்து 100% டிஜிட்டல் முறையில் ஈஎம்ஐ சேவை பெறலாம்.
ஐசிஐசிஐ வங்கியின் புதிய 'Cardless EMI' சேவை.. வாவ், இது நல்லா இருக்கே..!

தகுதியை செக் செய்வது எப்படி..?
ஐசிஐசிஐ வங்கி இப்புதிய சேவைக்குச் சில முக்கிய அளவுகோல் கீழ் தகுதிபெற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சேவையை வழங்கியுள்ளது.
எனவே இச்சேவைக்கு நீங்கள் தகுதி உள்ளவரா என்பதைச் செக் செய்ய ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து ‘CF' என்று டைப் செய்து ‘5676766' என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.
இல்லையெனில் ஐசிஐசிஐ வங்கியின் iMobile appல் உங்கள் தகுதியை செக் செய்யலாம்.

எப்படி இயங்குகிறது?
‘Cardless EMI' சேவைக்குத் தகுதி பெற்ற வாடிக்கையாளர்கள் ரீடைல் கடைகளில் தங்களுக்குப் பிடித்த பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு, பொருட்களுக்கான தொகையை, பான் கார்டு (டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தேவையில்லை), மொபைல் நம்பர் மற்றும் OTP ஆகியவற்றை மட்டுமே வைத்து எளிதாக NO-Cost EMI ஆக மாற்றிக்கொள்ள முடியும்.
இது அனைத்தும் கடைகளில் இருக்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஸ்வைப் மெஷின் வாயிலாகவே சில நிமிடத்தில் செய்ய முடியும்.

ஈஸி ஈஎம்ஐ
இந்த ‘Cardless EMI' சேவையை எவ்விதமான இடர்பாடுமின்றி ரீடைல் கடைகளில் இருக்கும் POS இயந்திரத்தின் வாயிலாகவே செய்ய முடியும் என்பதால் எவ்விதமான ஐயமும் இல்லை. இதனால் கடைகளில் ஈஎம்ஐ சேவை பெற எவ்விதமான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவோ, மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் சேவையைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தேவையில்லை என்பதால் அதிகளவிலான வாடிக்கையாளர் இச்சேவையைப் பயன்படுத்தத் துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cardless EMI நன்மைகள்
இந்தப் புதிய கார்டுலெஸ் ஈஎம்ஐ சேவை மூலம் பல நன்மைகள் உள்ளது.
1. கார்டுகள் இல்லாமல் NO-Cost EMI பெற முடியும்.
2. ஜீரோ processing கட்டணம்
3. 100% டிஜிட்டல், பாதுகாப்பு, எவ்விதமான விண்ணப்பமும் இல்லை.
4. வாடிக்கையாளர்கள் இச்சேவையின் கீழ் 10000 ரூபாய் முதல் 10 லட்சம் வரையிலான வரப்புக்குப் பொருட்களை வாங்க முடியும்.
5. மேலும் வாடிக்கையாளர்கள் 3 முதல் 15 மாதம் ஈஎம்ஐ காலத்தைப் பெற முடியும்.

இது ரொம்ப ஈஸி
உதாரணமாக ஒரு கடையில் ஆப்பிள் ஐபோன் 12 pro ஸ்மார்ட்போனை வாங்குவதாக வைத்துக்கொள்ளுவோம்.
1. முதலில் பிடித்த நிறத்தில் ஐபோன் 12 pro ஸ்மார்ட்போன் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
2. பில்லிங் போடும் இடத்தில் கடைக்காரர்களிடம் ‘Cardless EMI' முறையைத் தேர்வு செய்வதாகத் தெரிவிக்கவும்.
3. POS இயந்திரத்தில் மொபைல் எண்-ஐ பதிவிடவும் > பான் எண் பதிவிடவும் > மொபைலுக்கு OTP வரும் > பெற்ற OTPஐ POS இயந்திரத்தில் பதிவிடவும்.
4. அம்புட்டுதான்ஸ்.. வேலை முடிவடைந்தது.