ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா.. எப்படி கண்டறிவது.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இன்று மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். இது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும்.

 

இன்றைய காலக்கட்டத்தில் இது அனைத்து அரசு திட்டங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிகள், வருமான வரி தாக்கல், மானிய சலுகைகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களிலும், பல முக்கிய அம்சங்களிலும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட முக்கியமான ஆவணம் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா? அதனை எப்படி தெரிந்து கொள்வது? வாருங்கள் பார்க்கலாம்.

தவறாக பயன்படுத்தலாம்

தவறாக பயன்படுத்தலாம்

சமீபத்தில் உத்திரபிரதேசம், பகல்பூரை சேர்ந்த ரிக்ஷா ஒட்டுனர் பிரதாப் சிங்கின் ஆதார், பான் எண்னை தவறாக பயன்படுத்தி, ஜிஎஸ்டியும் உருவாக்கப்படடுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாது, அந்த ஆட்டோ ஒட்டுனருக்கு 3 கோடி ரூபாய் வருமான வரித்துறையினர் வருமான வரி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இப்படி பல இடங்களிலும் பல மோசடிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பாதுகாப்பாக இருப்பது மிக அவசியமாகும்.

Aadhaar Authentication History தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar Authentication History தெரிந்து கொள்ளுங்கள்

அரசின் UIDAI இணையத்தின் பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் ஆதார் சேவை என்பதை கிளிக் செய்தால் அதில் பல ஆப்சன்கள் வரும். அதில் Aadhaar Authentication History என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில் நீங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தி இருக்கீர்கள் என விவரங்கள் இருக்கும். அதனை பார்த்து உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

எப்படி தெரிந்து கொள்வது?
 

எப்படி தெரிந்து கொள்வது?

https://resident.uidai.gov.in/aadhaar-auth-history என்ற பக்கத்தில் செல்லும்போது, அங்கு உங்களது 12 இலக்க ஆதார் நம்பரை கொடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு கீழாக கேப்சா கோடினை கொடுங்கள். அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.

இதனை செய்யுங்க

இதனை செய்யுங்க

அது மறுபுறத்தில் தொடங்கும். Authentication type என இருக்கும். அதில் ஓடிபி என கொடுத்து கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரையில் நீங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கொடுத்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த ஒடிபியினை பதிவு செய்து கொள்ளுங்கள்.

அடிக்கடி பார்த்துக் கொள்ளுங்கள்

அடிக்கடி பார்த்துக் கொள்ளுங்கள்

அதனை பதிவு செய்த பிறகு அடுத்த பக்கத்தில், நீங்கள் உங்கள் ஆதாரினை எங்கு எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்ற பரிவர்த்தனை விவரங்கள் இருக்கும். அதனை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இதனை ஆறு மாதங்களுக்கு மட்டுமே பார்க்கமுடியும் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பார்த்துக் கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is your aadhaar number being misused? How to find it?

Aadhaar card latest updates.. Is your aadhaar number being misused? How to find it?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X