பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா.. இதனை பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான எண் கொண்ட ஒரு ஆவணமாகும்.

 

இந்த பான் கார்டு வரி செலுத்துதல், டிடிஎஸ், டிசிஎஸ் வரவு, வருமானம் என பல பரிவர்த்தனைகளையும் கவனிக்க உதவுகிறது.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீது வரி குறைக்காதது ஏன்..?

ஆக இப்படி பல பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பான் கார்டில், எந்த தவறும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே தவறுகள் இருந்தாலும், அதனை உடனடியாக அடையாளம் கண்டு திருத்தம் செய்ய வேண்டும்.

பான் கார்டில் திருத்தம்

பான் கார்டில் திருத்தம்

ஒரு வேளை உங்களது பான் கார்டு தொலைந்துவிட்டால், அல்லது ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமெனில் அதற்காக பான் கார்டு வைத்திருப்போர் கோரிக்கை அனுப்ப வேண்டும். இதற்கான படிவத்தினை முழுமையாக நிரப்பி, அனைத்து விவரங்களையும் முழுமையாக சரியாக கொடுக்க வேண்டும்.

எவ்வாறு திருத்தம் செய்வது?

எவ்வாறு திருத்தம் செய்வது?

பான் கார்டு விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் NSDL, UTIITSL இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணைய பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் அப்ளிகேஷன் வகையின் கீழ், ஏற்கனவே உள்ள பான் தரவு / பான் கார்டின் மறுபதிப்பில் மாற்றங்கள் அல்லது திருத்தம், ரீ ப்ரிண்ட் பான் கார்டு (ஏற்கனவே உள்ள பான் தரவில் எந்த மாற்றமும் இல்லை) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பதிவிட வேண்டிய விவரங்கள்
 

பதிவிட வேண்டிய விவரங்கள்

இதையடுத்து வகையின் கீழ், தனிநபர் என்பதைதேர்ந்தெடுக்கவும்.

இதன் பின்னர் கடைசி பெயர் / குடும்பப்பெயர், முதல் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, நீங்கள் இந்தியாவின் குடிமகனா, உங்கள் பான் எண் என்ன உள்ளிட்ட பல விவரங்களை பதிவிட வேண்டும்.

வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது?

வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது?

எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு இறுதியாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு செய்தியைப் பெறுவீர்கள், அதாவது என்.எஸ்.டி.எல் இ-கோவின் ஆன்லைன் பான் விண்ணப்ப சேவையைப் பயன்படுத்தியதற்கு நன்றி. உங்கள் கோரிக்கை டோக்கன் எண் xxxxxxx உடன் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது பான் பயன்பாட்டில் வழங்கப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ஐடியிலும் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள பான் விண்ணப்ப படிவத்தை நிரப்ப கீழே உள்ள பட்டனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

இதில் மாற்றம் செய்ய வேண்டுமா?

இதில் மாற்றம் செய்ய வேண்டுமா?

இப்போது, நீங்கள் பான் விண்ணப்ப படிவத்தில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இது நேரடியான ஆன்லைன் பான் பயன்பாட்டு பக்கத்திற்கு செல்லும்.

இப்போது பான் அப்ளிகேஷனில் உங்கள் புகைப்படம், கையொப்பத்தைப் புதுப்பிக்க விரும்பினால், அந்த பக்கத்தில் உள்ள புகைப்பட பொருத்தமின்மை மற்றும் கையொப்ப பொருத்தமின்மை என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டும்

அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு கட்டணம் செலுத்தப்பட்டதும், ஒப்புதல் சீட்டு உருவாக்கப்படும். நீங்கள் அதன் காப்பியை பிரிண்ட் செய்து, அதனை தேவையான ஆவணங்களுடன் என்.எஸ்.டி.எல் இ-கோவ் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pan card holders want to any correction, update or changes? Check details here

Pan card latest updates.. Pan card holders want any correction, update or changes? Check details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X