அவசர தேவைக்கு பணம்.. பிஎஃபை என்ன காரணங்களுக்காக எடுக்கலாம்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொழிலாளர்கள் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள், தொழிலாளர் வைப்பு நிதியை வழங்குகின்றன. பொதுவாக மாதந்தோறும் இந்த தொகையானது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

 

இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இது ஊழியர்களின் சம்பளத்தில் 2500 ரூபாய் பிடித்தம் செய்தால், அதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்துகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் ஓய்வுகாலத்திற்காக சேமிக்கப்பட்ட தொகையானது அவர்களுக்கு கிடைக்கும்.

இந்த பணத்தினை ஊழியர்கள் அவர்களின் வயதான காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஊழியர்களின் அவசர மற்றும் சில முக்கிய தேவைகளுக்கு இந்த தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உண்டு.

16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

அவசர தேவைக்கு ஓய்வூதியம்

அவசர தேவைக்கு ஓய்வூதியம்

மாத சம்பளம் வாங்குபவர்களில் பலரும் ஓய்வூதியத்தை தான் அத்தியாவசிய தேவைக்கே பயப்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்கும் பணத்தினை இடையில் எதற்காக எடுக்கலாம். அதற்கு என்னென்ன விதிமுறைகள் வாருங்கள் பார்க்கலாம். மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு என்பது கட்டாயம் இருக்கும். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் EPF பணத்தினை ஆன்லைனில் எளிதாக விண்ணபித்து பெற முடியும்.

வேலையிழந்தால் பிஎஃப் பணம் எடுக்க அனுமதி

வேலையிழந்தால் பிஎஃப் பணம் எடுக்க அனுமதி

இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், ஒரு மாத வேலையின்மைக்கு பிறகு இபிஎஃப் நிலுவை தொகையில் 75% வரையில் திரும்ப பெறலாம். இதே வேலையின்மை தொடர்ந்தால், மீதமுள்ள 25% தொகையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

என்ன காரணங்கள்?
 

என்ன காரணங்கள்?

மேலும் சம்பளதாரரின் திருமணம் அல்லது மகன்/ மகள் திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு. இதற்காக நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

திருமண செலவுக்காக எடுக்கலாம்

திருமண செலவுக்காக எடுக்கலாம்

இது ஊழியரின் திருமணம் அல்லது ஊழியரின் குழந்தைகளுக்கான திருமணத்திற்கு கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கும் ஊழியர் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவ செலவு

மருத்துவ செலவு

இதே ஊழியரின் மருத்துவ செலவு அல்லது ஊழியரின் கணவன்/மனைவிக்கான செலவு, அல்லது குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளுக்கும் பணம் பெற முடியும். இதே பேரழிவு காலத்திலும் ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இருப்பில் 50% வரை பெற்றுக் கொள்ள முடியும்.

கல்வி செலவுக்காக

கல்வி செலவுக்காக

இதே கல்வி செலவுக்காக எனில், ஒரு ஊழியர் அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம். எனினும் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்த ஊழியர்கள் மட்டுமே இந்த தொகையை எடுக்க முடியும். இது ஊழியரின் குழந்தைகள் 10ம் வகுப்புக்கு மேலாக செல்லும் போது எடுத்துக் கொள்ளலாம்.

வீடு வாங்க எடுக்கலாம்

வீடு வாங்க எடுக்கலாம்

வீட்டை வாங்க அல்லது புதுப்பிப்பதற்கான கடன் பெற சொத்து தொழிலாளர் அல்லது அவரின் மனைவி பெயரில் இருக்க வேண்டும் அல்லது இருவர் பெயரிலும் இருக்கலாம். வீட்டின் கட்டுமானம் கடன் பெற்ற ஐந்து வருட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், 12 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். புதுப்பித்தல் பணியும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

கடனை கட்ட வாங்கிக் கொள்ளலாம்

கடனை கட்ட வாங்கிக் கொள்ளலாம்

வீட்டுக் கடனை சற்று விரைவில் செலுத்த விரும்புவோர் பிஎஃப்க்கு எதிரான கடனை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதன் மூலமோ கட்டி முடிக்கலாம். எனினும் ஒரு முறை மட்டுமே இந்த வசதியை பெற முடியும். வீட்டு கடன் இஎம்ஐக்களை திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு நபர் 36 மாத அடிப்படை ஊதியங்கள் மற்றும் டிஏ அல்லது ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்கை வட்டி அல்லது மொத்த நிலுவை தொகையை அசல் மற்றும் வட்டியுடன் திரும்பப் பெற தகுதியுடையவர். எனினும் இதற்காக ஊழியர் 10 ஆண்டு காலம் பணியில் இருக்க வேண்டும்.

வீட்டை புதுபிக்க

வீட்டை புதுபிக்க

ஒருவர் தனது வீட்டை புதுப்பிக்க, அந்த வீடு விண்ணப்பதாரர் அல்லது அவரின் மனைவி அல்லது இருவரின் பெயரில் இருக்க வேண்டும். இதற்காக அவர் 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். இதே வீடு பழுது பார்க்க கடன் வாங்க 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். வீடு கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pf epf பிஎஃப்
English summary

Partial withdrawal is allowed for EPFO subscribers under certain reasons

PF withdrawal.. Partial withdrawal is allowed for EPFO subscribers under certain reasons
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X