ரிசர்வ் வங்கி மக்களுக்கு கொடுக்கும் சூப்பர் வசதி.. வங்கி & நிதி நிறுவனங்களுக்கு செக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நிதித்துறை குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பும் புகார்களை முறையாகவும், விரைவாகவும் தீர்க்கும் வண்ணம் புதிய குறைதீர்க்கும் கட்டமைப்பைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி உருவாக்கியது. பிரதமர் கைகளால் துவக்கிவைக்கப்பட்ட இந்த Integrated Ombudsman Scheme மூலம் வாடிக்கையாளர் வங்கிகள், பேமெண்ட் சர்வீஸ் ஆப்ரேட்டர் மற்றும் NBFC அமைப்பு குறித்துப் புகார்களை ரிசர்வ் வங்கியிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.

 

2640% வரையில் உயர்வு.. 24 மணிநேரத்தில் கலக்கிய 10 கிரிப்டோகரன்சிகள்..!

சரி ஒரு சாமானிய மக்கள் Integrated Ombudsman Scheme மூலம் எப்படி ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிப்பதற்கான வழிமுறையைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி உருவாக்கிய Integrated Ombudsman Scheme மிக முக்கியமான நோக்கம் 'One Nation-One Ombudsman தான், நிதி துறையைச் சார்ந்த அனைத்து புகார்களையும் ஓரே இடத்தில் பதிவு செய்து அதற்கான தீர்வை விரைவாகவும், முறையாகவும் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் தங்களின் புகாரை டிராக் செய்வது மட்டும் அல்லாமல் புகாருக்கான பதிலையும் இத்தளத்தில் பெற முடியும்.

எளிய வழிமுறை

எளிய வழிமுறை

இதேபோல் ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதால் கடுமையான வழிமுறைகள் இருக்கக் கூடாது என முன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால் எளிதாகப் புகார் அளிக்கும் வசதியை ரிசர்வ் வங்கி 'One Nation-One Ombudsman திட்டத்தின் மூலம் கொண்டுள்ளது.

4 வழியில் புகார் அளிக்கலாம்
 

4 வழியில் புகார் அளிக்கலாம்

Integrated Ombudsman Scheme மூலம் பல வழிகளில் புகார் அளிக்க முடியும், உதாரணமாக https://cms.rbi.org.in தளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம் அல்லது CRPC@rbi.org.in என்ற மின்னஞ்சலுக்கு ஈமெயில் மூலம் புகாரை பதிவு செய்யலாம், இல்லையெனில் 14448 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்குப் புகார் அளிக்கலாம். படிவம் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் சண்டிகரில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் Centralised Receipt and Processing Centre கடிதம் மூலம் புகார் செய்யலாம்.

ஆன்லைன் மூலம் புகார் செய்வது எப்படி

ஆன்லைன் மூலம் புகார் செய்வது எப்படி

சரி ஆன்லைன் மூலம் புகார் செய்வது எப்படி என்பதை முழுமையாகப் பார்ப்போம்.

1. https://cms.rbi.org.in என்ற தளத்திற்குச் சென்று 'File A Complaint' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் அதன் பின்பு கொடுக்கப்பட்டு உள்ள Captcha-வை சரியாக டைப் செய்து உள் நுழைய வேண்டும்.

2. பெயர் மற்றும் மொபைல் எண்-ஐ கொடுத்து நுழைந்த பின்பு எந்த அமைப்பு ( வங்கிகள், பேமெண்ட் சர்வீஸ் ஆப்ரேட்டர் மற்றும் NBFC ) குறித்து நீங்கள் புகார் அளிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

3. அமைப்பை தேர்வு செய்த பின்பு, தத்தம் அமைப்பிடம் கொடுத்த புகாரின் நகல் அல்லது படிவத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. மேலும் கார்டு நம்பர், கடன் அல்லது வைப்பு நிதி கணக்கு விபரங்கள் ஆகியவற்றைப் புகார் அளிக்கச் சமர்ப்பிக்க வேண்டும்.

5. இதைத் தொடர்ந்து புகாரின் வகையைச் தேர்வு செய்ய வேண்டும், அதைத் தொடர்ந்து துணை பிரிவைச் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக லோன் - ஹோம் லோன்

6. புகாரின் முழுமையான விபரத்தைப் பதிவு செய்து, பிரச்சனைக்கூறிய தொகை மற்றும் அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பதிவிட வேண்டும்.

7. உங்கள் புகாரை மறு ஆய்வு செய்து சமர்ப்பித்தால் போதும். வேலை முடிந்தது, வேண்டுமெனில் புகார் படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI New Ombudsman Scheme: Step by Step Guide to File Complaint Online

RBI New Ombudsman Scheme: Step by Step Guide to File Complaint Online
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X