செலுத்த வேண்டிய வரிக்கு மேல் வரியா..? அதென்ன சர்சார்ஜ்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் திருவிழா தொடங்கியாச்சு. அல்வாவும் கிண்டியாச்சு. பல தரப்பில் இருந்தும், மக்கள் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் கொள்கைகள் தேவை எனவும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

 

மத்திய நிதி அமைச்சகமே கலை கட்டி இருக்கிறது. இந்த நேரத்தில் பட்ஜெட் தொடர்பாகவும், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் கொள்கைகள் மற்றும் வரி சார்ந்த சில கலைச் சொற்களைப் பார்ப்போமா..?

வாருங்கள் இரண்டு வகையான கொள்கைகளில் இருந்து தொடங்குவோம்.

பட்ஜெட் 2020: மோடி அரசின் முன்பு நிற்கும் 3 முக்கிய சவால்கள்!

Fiscal Policy

Fiscal Policy

இந்தியப் பொருளாதாரத்தில் விதிக்கப்பட்டும் வரிகள் மற்றும் மத்திய அரசு செய்ய இருக்கும் செலவீனங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் அரசு திட்டம் தான் இந்த Fiscal Policy. வரியை கூடுதலாக வசூலிப்பதா வேண்டாமா..? வரியைக் குறைப்பது என்றால் எதில் குறைப்பது, யாருக்கு குறைப்பது, எங்கு செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்படும் முடிவுகளை எல்லாம் Fiscal Policy என்று சொல்லலாம்.

Monetary Policy

Monetary Policy

இதை நாம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம். ஆர்பிஐ வட்டி விகித கூட்டங்கள் நடைபெறுகிறது என்றால், இந்த வார்த்தை அடிக்கடி பத்திரிக்கைகளில் வெளியாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் இருக்கும் பணப் புழக்கம் மற்றும் வட்டி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அது சார்ந்த திட்டங்கள் தான் Monetary Policy என்கிறோம்.

Perquisite tax
 

Perquisite tax

இந்த சொல்லை நம்மைப் போன்ற சாதாரண மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். பெரிய பெரிய கம்பெனிகளில், உயர் அதிகாரிகளுக்கு சொகுசு பங்களா, இலவச தண்ணீர், மின்சாரம், இலவச மருத்துவம், உயர் அதிகாரிகள் வீட்டில் சேவகம் செய்ய ஊழியர்களை எல்லாம் கம்பெனியே கொடுத்துவிடும். அப்படி கொடுக்கும் சலுகைகளுக்கு தகுந்தாற் போல வரி வசூலிப்பார்கள். அது தான் Perquisite tax.

Securities Transaction Tax

Securities Transaction Tax

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் அல்லது டிரேட் செய்பவர்களுக்கு இந்த வரி என்றால் என்ன என்று தெரிந்து இருக்கும். இப்போது நாம் சாதாரணமாக ஒரு பொருள் வாங்கினால் எப்படி ஜிஎஸ்டி செலுத்துகிறோமோ, அது போல பங்குச் சந்தையில், ஒரு பங்கை வாங்கினாலோ, விற்றாலோ நாம் Securities Transaction Tax செலுத்த வேண்டும்.

Corporate Tax

Corporate Tax

இந்த சொல்லை நாம் பலரும் கேள்விப்பட்டு இருப்போம். ஒரு தனி நபர் தான் சம்பாதித்த பணத்துக்கு செலுத்தும் வரியை தனி நபர் வருமான வரி என்று சொல்கிறோம். அதே போல, ஒரு கம்பெனி, ஒரு நிதி ஆண்டில் சம்பாதித்த தொகைக்கு, வரி செலுத்தினால் அது கார்ப்பரேட் வரி அவ்வளவு தான்.

Education Cess

Education Cess

வருமான வரி செலுத்தியவர்கள் அல்லது செலுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த Education Cess என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். நாம் செலுத்த வேண்டிய மொத்த வரிக்கு 4% கல்வி செஸ் செலுத்த வேண்டும். இந்த செஸ் வழியாக திரட்டப்படும் நிதி, மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். உதாரணம்: நாம் 12,500 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்றால் 12,500 * 4/100 = 500 ரூபாய் கல்வி செஸ்ஸாக செலுத்த வேண்டும்.

Surcharge

Surcharge

இந்த சொல், நம்மைப் போன்ற சம்பள ஏழைகளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவு தான். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதிப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வரிக்கு மேல் கூடுதலாக Surcharge என்கிற பெயரில் வரி செலுத்துவார்கள். உதாரணமாக ஒரு நபர், 1 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அவர் வருமான வரியாக 25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றால், இந்த 25 லட்சம் ரூபாய்க்கு 10% கூடுதலாக சர்சார்ஜ் செலுத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax and policy terminologies with simple explanation

Know the simple meaning of someTax and policy terminologies with simple explanation which we heard very often.
Story first published: Wednesday, January 22, 2020, 12:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X