மாத்தி யோசி.. பங்குச்சந்தையில் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்குது. அது கல்யாணத்துக்கு நகை சேர்க்க ஆசைப் பட்றீங்க. கல்யாணத்தப்ப பணம் இல்லாட்டி பொண்டாட்டி நகையை கொடுத்திடலாம்னு பிளான் பண்றீங்களா? அப்ப நீங்க ஒரு சராசரி மனிதன். ஏன்னா எல்லாரும் அப்படித்தான் செஞ்சிகிட்டு இருக்கோம்.

 

ஆனா ஒரு குடும்பம். நம்ம நகையை 15 வருஷம் கழித்து மகளுக்குக் கொடுப்பதை விட இப்பவே அதை வித்து ஷேர் மார்கெட் அல்லது வேறெதாவது வருமானம் வரும் வழிகளில் முதலீடு செய்யலாம்னு யோசித்தால் அது தான் மாத்தி யோசி.

கொரோனா காலத்தில் நடந்த ஒரு நல்ல விஷயம்.. 78 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு..!

தங்கம் vs பங்குச்சந்தை

தங்கம் vs பங்குச்சந்தை

உதாரணத்துக்கு இன்றைய நிலைக்கு ஒரு 10 பவுன விக்கிறாங்கன்னு வைங்க. ஒரு பவுன் 36,240 ரூ. ஆக 3,60,000 ரூ. அதை அப்படியே ஷேர் மார்கெட்ல போட்றீங்க அப்படி வச்சிக்கலாம். என்ன ஆகும்னு பாருங்க. இந்தக் கணக்கீடு 3 இலட்சம் போட்டால் என்னாகும் என்ற அடிப்படையில் போடப்பட்டுள்ளது. 3,60,000 ஐயும் போட்டால் அந்தக் கணக்கு இதைவிடச் சில மடங்கு எகிறும்.

TCS

TCS

TCS அப்டின்னு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியோட ஸ்டாக் இருக்கு. அதில் போட்டிருந்தால் உங்கள் 3 இலட்சம் 15 வருடங்களில் 41 இலட்சம் ஆகி இருக்கும்.

 ஹிந்துஸ்தான் யுனிலிவர்
 

ஹிந்துஸ்தான் யுனிலிவர்

ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடட் அப்டின்னு ஒரு கம்பெனி இருக்கு. இவுக வேற யாரும் இல்லை. ஹமாம் சோப்பு, பவுடர்னு நீங்க தினமும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் கம்பெனி. இதில் போட்டிருந்தால் 30 இலட்சம் ஆகி இருக்கும்.

 ஏசியன் பெயின்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

அடுத்து Asian Paint என்ற கம்பெனி. உங்க வீட்டுக்கெல்லாம் இந்தப் பெயிண்ட் தான் அடிச்சி இருப்பீங்க. அதில் போட்டிருந்தால் மூச்ச இழுத்து பிடிச்சிகங்க 1 கோடியே 48 இலட்சம். அம்மாடியோவ் கேட்கவே பிரமிப்பா இருக்குல?

 பெடிலைட் இந்தியா

பெடிலைட் இந்தியா

இன்னொரு கம்பெனி Pidilite India. இவுக வேற யாரும் இல்லை. எல்லோர் வீட்டிலும் பயன்படுத்துவோமே Fevicol, Fevi Quick போன்ற பசைகள். அது தயாரிக்கும் கம்பெனி. இவன் எவ்ளோ கொடுப்பான் தெரியுமா? மறுபடி மூச்சை இழுத்து பிடிச்சிகங்க 1 கோடியே 48 இலட்சம்.

 40 வருட வரலாறு

40 வருட வரலாறு

கடந்த 40 வருடங்களில் இந்தக் கம்பெனி ஷேர்கள் எப்படிச் செயல்பட்டுள்ளன என்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட மதிப்பு இவை. அதற்கான ஆதாரங்களைப் படங்களாக இணைத்துள்ளேன்.

 தங்க முதலீடு

தங்க முதலீடு

இப்ப நகை மேட்டருக்கு வருவோம். நகையின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றை எடுத்து பார்த்தால் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அதன் மதிப்பு இரட்டிப்பாகும். இந்தக் கணக்கின் படி உங்கள் 3 இலட்சம் பதினைந்து வருடங்களில் 7.5 இலட்சம் ஆகும்.

 முதலீட்டு வளர்ச்சி

முதலீட்டு வளர்ச்சி

நம்ம ஷேர்களில் மிகக் குறைந்த ரிட்டன் தந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்டை எடுத்துக் கொள்வோம். 30 இலட்சம் தந்துள்ளது. அதை அப்படியே எடுத்து நகை வாங்கினால் 40 பவுன் வாங்கலாம். சேதாரம் எல்லாம் கழித்தாலும் 35 பவுன் வாங்கலாம். இது தான் உங்கள் 10 பவுன் உங்கள் மகளுக்கு 35 பவுனாக மாறிய வரலாறு.

 மற்றொரு உதாரணம்

மற்றொரு உதாரணம்

இன்னொரு வரலாறு உள்ளது. Asian paint 1 கோடியே 40 இலட்சம் கொடுத்துள்ளது. அதைக் கணக்கே பண்ண முடியவில்லை. சேதாரம் போக 160 பவுன் கிடைக்கும். இது உங்களின் 10 பவுன் உங்கள் மகளுக்கு 160 பவுனாக மாறிய வரலாறு.

 ரிஸ்க் உள்ளது

ரிஸ்க் உள்ளது

ஷேர் மார்கெட் ரிஸ்க் உள்ளது. ஒரு ஷேர் மதிப்பு இறங்கிவிட்டால்? இது இந்தக் கம்பெனிகளில் 40 ஆண்டுகால வரலாற்றின் அடிப்படையில் எடுத்தது. இன்னொரு கேள்வி நான் கேட்கிறேன். ஒரு வேளை தங்கத்தின் மதிப்பு கிடு கிடுன்னு கீழ் இறங்கிவிட்டால்? ஆக எல்லா முதலீடுகளிலும் ரிஸ்க் இருக்கவே செய்கிறது. அதை நீங்கள் எடுக்கத் தயாரா என்பதே வெற்றியின் சூட்சமம்.

 பிரித்து முதலீடு செய்தல்

பிரித்து முதலீடு செய்தல்

ரிஸ்க்க குறைக்க என்ன பண்ணலாம்? ஏசியன் பெயிண்ட்ஸ்ல 1 இலட்சம், பிடிலிட்டில 1 இலட்சம், டாட்டா சாப்ட்வேர்ல 50,000 மற்றும் ஹிந்துஸ்தான் யுனிவர்ல 50,000 எனப் பிரிச்சி போடலாம். ஒன்னு சொதப்பினாலும் மத்த 3 தூக்கிவிட்டுடும். சிம்ப்ள்.

 மாத்தி யோசிங்க

மாத்தி யோசிங்க

முதலீடு என்பது ஒரு கலை, அதைப் பழகப் பழகத் தான் வலிமை திறன்மிக்க ஒருவராக மாற முடியும். இதேபோல் ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் பெற முடியாது.

மாத்தி யோசிங்க. ரிஸ்க் எடுங்க. வெற்றிப் பெறுங்கள். இல்லாட்டி குண்டு சட்டிகுள்ளே குதிரை ஓட்டிகிட்டி போங்க. உங்கள் வாழ்வு உங்கள் கையில். இந்தப் பதிவு பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Stock market investment is better than gold: Think Different

Why Stock market investment is better than gold: Think Different
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X