இந்திய சந்தை கடந்த சில தினங்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், அதிக சந்தை மதிப்பு கொண்ட 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிபானது 2.61 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
இந்த இழப்பில் டாப் இடத்தில் இருப்பது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாகும்.
இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில், கடந்த வார வர்த்தகத்தில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டுமே டாப் கெயினர்களாக உள்ளன. மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது மூலதனத்தினை இழந்துள்ளன.

டாப் லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பில்லியனரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் டாப் லூசராக உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 79,658.02 கோடி ரூபாய் குறைந்து, 15,83.118.61 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த அமர்வில் இதன் பங்கு விலையானது 2.64% குறைந்து, 2,340.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது .

ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு
தனியார் நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 34,690.09 கோடி ரூபாய் குறைந்து, 4,73,922.86 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி-யின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 3.05% குறைந்து, 2,617.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு
தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 33,152.42 கோடி ரூபாய் குறைந்து, 4,16,594.78 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.82% குறைந்து, 6,901.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு
முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 27,298.3 கோடி ரூபாய் குறைந்து, 8,16,229.89 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.80% குறைந்து, 1,473.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 24,083.31 கோடி ரூபாய் குறைந்து, 5,24,052.84 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் 3.43% குறைந்து, 2,230.25 ரூபாயாக குறைந்து முடிவடைந்துள்ளது.

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் சந்தை மூலதனம், 24,051.83 கோடி ரூபாய் குறைந்து, 4,17,448.70 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த அமர்வில் எஸ்பிஐ-யின் பங்கு விலையானது, 2.77% குறைந்து, 467.80 ரூபாயாக குறைந்து முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது, 20,623.35 கோடி ரூபாய் குறைந்து, 5,05,547.14 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த அமர்வில், 1.73% குறைந்து, 728.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 18,254.82 கோடி ரூபாய் குறைந்து, 13,26,923.71 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில், சற்று அதிகரித்து, 3,584.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு
ஐடி துறையில் மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 26,515.92 கோடி ரூபாய் அதிகரித்து, 7,66,123.04 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.78% அதிகரித்து 1,820.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு
மற்றொரு முன்னணி நிறுவனமான விப்ரோவின் சந்தை மூலதனம் 17,450 கோடி ரூபாய் அதிகரித்து, 3,67,126.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 4.11% அதிகரித்து, 670.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டாப் 10 நிறுவனங்கள்
இன்று பட்டியலிடப்பட்டுள்ள டாப் 10 நிறுவனங்களில் வழக்கம்போல முதலிடத்தில் இருப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். அடுத்தடுத்த இடங்களில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச் யு எல், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச் டி எஃப் சி , ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.