ரூ.55,000 டூ 8 கோடி ரூபாய்.. பல ராயல் என்பீல்டு வாங்கியிருக்கலாமே.. மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2001ல் நீங்கள் ஒரு ராயல் என்பீல்டு பைக் வாங்கியிருந்தீர்களா? பைக்கிற்கு பதிலாக அந்த பைக்கினை உற்பத்தி செய்யும் ஈச்சர் மோட்டார் நிறுவனத்தின் பங்கினை வாங்கியிருந்தால், நீங்கள் பல கோடிகளுக்கு அதிபதி?

 

இது வாவ்னு இருக்குல்ல... பட் உடனே சந்தோஷப்பட்டுடாதீங்க.. இந்த கட்டுரை முழுமையாக படித்து விட்டு, பின்னர் உங்களது கருத்தினை கூறுங்கள்.

கடந்த 2001ல் ராயல் என்பீல்டு பைக் தயாரிக்கிற கம்பெனி Eicher Motors-ன் பங்கு விலை வெறும் 17.50 பைசா தான். அன்னிக்கு இந்த பைக்கோட விலை சுமார் 55,000 ரூபாய்.

ஒரு பைக்கின் மதிப்பு ரூ.83 லட்சமா?

ஒரு பைக்கின் மதிப்பு ரூ.83 லட்சமா?

அன்றைக்கு இந்த பைக் வாங்கறதுக்கு பதிலா? பைக் வாங்கிய காசில் இந்த நிறுவனத்தோட ஷேர் வாங்கி இருந்தா.. 3143 பங்குகள் கிடைச்சி இருக்கும்.. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த நிறுவனத்தோட பங்கு விலை 2661 ரூபாய். அதன் படி பார்த்தால் முதலீட்டுதாரரின் பங்கு விலை 83,63,523 ரூபாயாகும்.

இது வாவ் வாவ் தான

இது வாவ் வாவ் தான

அட.. உண்மையிலேயே இது வாவ் தான்.. ஆனால் அப்படி நினைக்கும்போது, இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயமும் இங்க இருக்கு. ஏனெனில் கடந்த 2020ல் நடந்த இந்த நிறுவனத்தோட பங்கு Split செய்யப்பட்டிருக்கு. அப்போது அதன் முக மதிப்பு (Face Value) 10-ல் இருந்து 1 ஆக குறைஞ்சிருக்கு. .

தற்போதைய மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
 

தற்போதைய மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

ஆக இப்ப முதலீட்டாளர்கிட்ட இருக்கிற பங்கு எண்ணிக்கை 31,430.. அப்படின்னா இதன் உண்மையான மதிப்பு தான் என்ன? 8.36,35,230 ரூபாய். அப்படின்னா இது வாவ்.க்கு மேல வாவ் தான. கடந்த 1 வருடத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 44.99% ஏற்றம் கண்டுள்ளது. இது நல்ல லாபகரனமானதாகவும் உள்ளது.

புதிய வெளியீடுகள் அறிமுகம்

புதிய வெளியீடுகள் அறிமுகம்

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வினோத் தசாரி . ராயல் என்பீல்டு இன்னும் பலம் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இதன் விலை முரட்டுத் தனமாக இருந்தாலும், இன்றைய இளைஞர்களின் கனவு பைக் என்றே கூறலாம். ஆக எதிர்காலத்திற்கும் இதன் சந்தை மதிப்பு என்பது குறைய வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பங்கின் விலையானது 3,200 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்கலாம். ஏனெனில் இதன் எபிடா நன்றாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்திலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய மாடல்கள் வரும்போது, இதன் விற்பனை வேகமெடுக்கலாம். ஆக இது வாங்குவதற்கு சரியான பங்கு தான்.

வாகன சந்தையில் தனி இடம்

வாகன சந்தையில் தனி இடம்

தற்போதைக்கு கொரோனா இந்த பங்கில் சற்று அழுத்தத்தினை கொடுத்திருந்தாலும், இதன் விலையானது நிச்சயம் அதிகரிக்கலாம். அதே போல ஈச்சரின் மற்ற வர்த்தக வாகனங்களுக்கும் என்றுமே சந்தையில் ஒரு தனி இடம் உண்டு. மேலும் தற்போது மூலதன பொருட்கள் விலை உயர்வின் அடிப்படையில் இதன் விலையேற்றமும் ஏற்படலாம். இது இன்னும் கூடுதலாக சந்தைக்கு சாதகமாக அமையும். ஆக மொத்தத்தில் இதற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பது நன்கு மட்டும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bought royal enfield bullet in 2001? You missed chance to crorepati

Eicher Motors latest updates.. Bought royal enfield bullet in 2001? You missed chance to crorepati
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X