இனி இவர்களுக்கு சென்செக்ஸ் 30-ல் இடம் இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தைகளின் முகமாக இருக்கும் இண்டெக்ஸ் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 30 தான். இந்த 30 பங்குகளின், வெயிட்டேஜ் அடிப்படையிலான சராசரி விலைப் போக்குகள் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த பங்குச் சந்தையின் தன்மையை பிரதிபலிப்பதாக இருக்கின்றன.

 

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருக்கும் நிறுவனங்களின் வியாபார போக்கு, லாபம் ஈட்டும் திறன் அடிப்படையில் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் வைத்துக் கொள்ளலாமா..? அல்லது அதை விட திறமையாக வியாபாரம் செய்து லாபத்தை ஈட்டும் நிறுவனங்களை சேர்த்துக் கொள்ளலாமா..? என ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

இனி இவர்களுக்கு சென்செக்ஸ் 30-ல் இடம் இல்லை..!

அப்படி இந்த முறை ஆலோசித்த போது, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருக்கும் சில நிறுவனங்களை வெளியேற்றி, புதிய சில நிறுவனங்களைக் கொண்டு வர போகிறார்களாம்.

1. டாடா மோட்டார்ஸ் & டிவிஆர்
2. வேதாந்தா
3. யெஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களை, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருந்து வெளியேற்றப் போகிறார்களாம். இந்த நிறுவனங்களுக்கு பதிலாக

1. அல்ட்ராடெக் சிமெண்ட்
2. டைடன் கம்பெனி
3. நெஸ்ட்லீ இந்தியா ஆகிய நிறுவனன்களை சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இணைக்க இருக்கிறார்களாம்.

சென்செக்ஸ் 30 போக சென்செக்ஸ் 50 இண்டெக்ஸிலும் 2 நிறுவனங்களை மாற்ற இருக்கிறார்களாம். இந்தியா புல்ஸ் ஹவுசிங் மற்றும் யெஸ் பேங்க் வெளியேற்றப்பட்டு யூபிஎல் லிமிடெட் மற்றும் டாபர் உள்ளே கொண்டு வருகிறார்கள்.

அதே போல சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் புதிதாக
1. இந்தியா புல்ஸ் ஹவுசிங்,
2. யெஸ் பேங்க்,
3. இண்டர் குளோப் ஏவியேஷன்,
4. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்,
5. இன்ஃபோ எட்ஜ் இந்தியா போன்ற நிறுவனங்கள் பட்டியலிடப்பட இருக்கிறதாம்.

1. கெடிலா ஹெல்த் கேர்
2. டாபர் இந்தியா,
3. க்ளின்மார்க் பார்மா,
4. யூபிஎல்,
5. எடல்வீஸ் ஃபனான்ஷியல் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் இருந்து நீக்கப்பட இருக்கிறதாம்.

 

இந்த மாற்றங்கள், வரும் டிசம்பர் 23, 2019 திங்கள் முதல் அமலுக்கு வர இருக்கிறதாம். இது போக எஸ் & பி பி எஸ் இ 100, எஸ் & பி பி எஸ் இ 200, எஸ் & பி பி எஸ் இ 500 என பல இண்டெக்ஸ்களில் மாற்றம் செய்து இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE indices stocks changed Tata motor yes bank vedanta expelled

The Bombay Stock Exchange indices like sensex 30, sensex 50, sensex next 50, S&P BSE 100, S&P BSE 200, S&P BSE 500 has changed. This changes will be amended from December 23, 2019.
Story first published: Saturday, November 23, 2019, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X