நிதானமாக ஏற்றம் காணும் இந்திய பங்குச் சந்தை! 40,544-ல் சென்செக்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரத்தில் இரண்டாவது நாளான இன்றும் ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ். ஆனால் ஏற்றத்தின் வேகம் குறைந்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நேற்று (19 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,431 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,420 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

நிதானமாக ஏற்றம் காணும் இந்திய பங்குச் சந்தை! 40,544-ல் சென்செக்ஸ்!

 

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,732 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 112 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,544 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (20 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.30 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.43 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.31 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

இன்று (20 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட், தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங் செங் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் வர்த்தகமாயின.

BSE நிலவரம்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 14 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,849 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,373 பங்குகள் ஏற்றத்திலும், 1,316 பங்குகள் விலை இறக்கத்திலும், 160 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 111 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

பங்கு விலை நிலவரம்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் ஹெச் சி எல் டெக்னாலஜி, டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி, என் டி பி சி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE Sensex surge 112 points closed at 40544 on 20 Oct 2020

The Bombay Stock Exchange benchmark Sensex surge 112 points closed at 40544 on 20 Oct 2020
Story first published: Tuesday, October 20, 2020, 16:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X