குழப்பத்தில் முடிந்த சந்தை.. சென்செக்ஸ் சற்று ஏற்றம்.. நிப்டி சரிவு.. பட்ஜெட் கைகொடுக்கலையே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 20223 - 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்-ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் இந்திய பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது. காலை அமர்வில் அமர்வில் நல்ல ஏற்றத்துடன் தொடங்கி, மதியம் 1000 புள்ளிகளுக்கு மேலாக சென்செக்ஸ் ஏற்றம் கண்டது.

எனினும் முடிவில் சென்செக்ஸ் 158.18 புள்ளிகள் அதிகரித்து, 59,708 புள்ளிகளாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதே நிப்டி 45.85 புள்ளிகள் குறைந்து, 17,616.30 புள்ளிகளாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

மதிய அமர்வில் சென்செக்ஸ் 1200 புள்ளிகள் ஏற்றம் கண்ட நிலையில், முடிவில் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. இது பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 3 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

 புதிய வருமான வரி முறை

புதிய வருமான வரி முறை

புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது.

ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 உண்மை என்ன?

உண்மை என்ன?

இந்த வரி உச்சம் வரம்பு என்பது சாதகமானதொரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், தற்போது நாடு முழுவதும் 20% குறைவானர்களே புதிய வருமான வரி முறையை பின்பற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக இந்த முறையில் வருமான வரிப் பிரிவு 80C மற்றும் 80D-யின் கீழ் வருமான வரிச் சலுகை கிடையாது.

புதிய வருமான வரி முறையில் சம்பளதாரரின் ஆண்டு மொத்த சம்பளமும் மொத்த வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. இதனால் வரிவிகிதம் குறைவாக இருந்தும் கூட, கட்ட வேண்டிய வரி அதிகமாக இருப்பதால், புதிய வரிக் கொள்கையானது சம்பளதாரர்களுக்கு லாபகரமாக இல்லை என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.

எது விலை அதிகரிக்கும்/ விலை குறையும்

எது விலை அதிகரிக்கும்/ விலை குறையும்

சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதால்ம், இது சிகரெட் விலை அதிகரிக்க வழிவகுக்கும். இதே தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது. ஆக இவற்றின் விலையும் அதிகரிக்கலாம். ஏற்கனவே இறக்குமதி வரி 15% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமையலறை சிம்னி சுங்க வரி 15% அதிகரித்துள்ளது. இதே ரப்பர் மீதான இறக்குமதி வரி 25% ஆக அறிவித்துள்ளது.

டிவி பேனல்கள் மீதான வரி 2.5% குறைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதே செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படும். இதேபோல இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் விலை குறைய காரணமாக அமையலாம்.

பின்னடைவு

பின்னடைவு

எனினும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு துறை என சில துறைகளுக்கு பெரிய அறிவிப்பு வெளியாகவில்லை. ஆக இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேபோல நிதித் துறைக்கும் பெரியளவிலான அறிவிப்புகள் ஏதும் இல்லை எனலாம். ஆக இது பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2023: sensex ends above 100 points. nifty fallls below 17,700

In the end, the Sensex gained 158.18 points to close at 59,708 points. The Nifty closed down 45.85 points at 17,616.30.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X