2-3 வாரங்களில் 20% வரை லாபம் கிடைக்கலாம்.. 3 பங்குளை பரிந்துரை நிபுணர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க முதலீடு மட்டும் போதுமானதா? என்றால் நிச்சயம் இல்லை. நல்ல பங்குகளை தேர்தெடுப்பதும் சரியான வழியாக இருக்கும்.

 

தினசரி வர்த்தகத்தில் முதலீடு செய்வதை விட, நீண்டகால நோக்கில் சந்தையில் முதலீடு செய்வதே சிறந்த வழியாக இருக்கும்.

அந்த வகையில் இன்று நாம் 3 பங்குகளை பற்றி பார்க்க இருக்கிறோம். ஏன் இந்த பங்குகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. எவ்வளவு லாபம் கிடைக்கலாம், வாருங்கள் பார்க்கலாம்.

அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.15400 கோடி முதலீடு செய்யும் அபுதாபி நிறுவனம்..!

ஐஐஎஃப்எல் பைனான்ஸ்

ஐஐஎஃப்எல் பைனான்ஸ்

ஐஐஎஃப்எல் பைனான்ஸ்- ன் LTP விலை - 366.95 ரூபாய். இப்பங்கின் ஸ்டாப் லஆஸ் 330 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 440 ரூபாயாகும். வருமானம் - 20%

கடந்த மார்ச் 2020ல் இருந்து இப்பங்கின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது தொடர்ந்து வலுவான வால்யூம்களை கொண்டுள்ளது.

இதே நடப்பு வாரத்தில் டெக்னிக்கலாக ஏற்றம் காணலாம் என்றும் விதமாக புல்லிஷ் Marubozu கேண்டில் பேட்டர் பார்ம் ஆகியுள்ளது. ஆக இது வரும் வாரங்களில் வலுவான ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RSI-யும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது, ஆக இப்பங்கின் விலையானது 410 ரூபாய் அதனை தொடர்ந்து 440 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகீறது. எனினும் கட்டாயம் 330 ரூபாயினை ஸ்டாப் லாஸ் ஆக வைத்து கொள்ள வேண்டும்.

 காட்ஃப்ரே பிலிப்ஸ்
 

காட்ஃப்ரே பிலிப்ஸ்


காட்ஃப்ரே பிலிப்ஸ் (Godfrey Phillips) பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள நிபுணர்கள், LTP ஆக 1292.25 ரூபாயாக உள்ளது. ஸ்டாப் லாஸ் - 1185 ரூபாயாகவும், இலக்கு விலை 1550 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதே வருவாய் எதிர்பார்ப்பு 20% ஆகும்.

ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், இப்பங்கினில் வலுவான வால்யூம்கள் உள்ளன.

RSI-யும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆக இப்பங்கின் விலையானது 1425 ரூபாய் அதனை தொடர்ந்து 1550 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப் கட்டாயம் 1185 ரூபாயாக வைக்கவும் நிபுணர்கள் பரிந்துறை செய்துள்ளனர்.

தெர்மாக்ஸ்

தெர்மாக்ஸ்

தெர்மாக்ஸ் பங்கினை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதன் LTP விலையானது 2229.85 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ் - 2050 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 2550 ரூபாயாகவும். வருமானம் எதிர்பார்ப்பு 14% எதிர்பார்க்கப்படுகிறது.

தெர்மாக்ஸ் பங்கு விலையும் டெக்னிக்கலாக ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது 2400 ரூபாய் அதனை தொடர்ந்து 2550 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது

ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது

பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும், மேற்கண்ட பங்குகள் பற்றி அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது. இது GEPL Capital நிறுவனத்தால் பரிந்துரை செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

buy these 3 stocks for up to 20% return in next 2 - 3 weeks

buy these 3 stocks for up to 20% return in next 2 - 3 weeks/2-3 வாரங்களில் 20% வரை லாபம் கிடைக்கலாம்.. 3 பங்குளை பரிந்துரை நிபுணர்கள்..!
Story first published: Friday, April 15, 2022, 15:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X