4 நிறுவனங்கள் இன்று பங்கு வெளியீடு.. சிறு முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. பங்கு விலை.. மற்ற விவரங்கள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன் ஆட்டோ பிளாட்பார்ம் நிறுவனமான CarTrade Tech, அதன் பொதுப் பங்கு வெளியீட்டினை ஆகஸ்ட் 9 அன்று வெளியிடவுள்ளது.

 

இந்த வெளியீட்டின் கடைசி தேதி ஆகஸ்ட் 11 அன்று முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பங்கு விலையானது 1585 - 1,618 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் 18,532,216 பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கொரோனா-வால் 1 பில்லியன் டாலர் போச்சு.. அழுது புலம்பும் ஆட்டோமொபைல் துறை..!

பொது பங்கு வெளியீடு

பொது பங்கு வெளியீடு

இந்த பங்கு வெளியீட்டின் மொத்த மதிப்பு 2,999 கோடி ரூபாய்க்கான ஆரம்ப பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் ஒரு பகுதியாக CMBD II 22.64 லட்சம் ஈக்விட்டி பங்குகளையும், இதே Highdell Investment Ltd நிறுவனம் 84.09 லட்சம் ஈக்விட்டி பங்குகளையும், Macritchie Investments Pte Ltd நிறுவனம் 50.76 லட்சம் ஈக்விட்டி பங்குகளையும், Springfield Venture International 17.65 லட்சம் ஈக்விட்டி பங்குகளையும் விற்பனை செய்யவுள்ளன.

எவ்வளவு ஒதுக்கீடு

எவ்வளவு ஒதுக்கீடு

இதில் CMBD II நிறுவனம் 11.93% பங்குகளையும், Highdell Investment நிறுவனம் 34.44% பங்குகளையும், Macritchie Investments 26.48%, Springfield Venture International நிறுவனம் 7.09% பங்குகளையும் வைத்துள்ளன.

வெளியீட்டு அளவின் பாதி தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கும் (QIB), சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35% பங்குகளும், நிறுவனமில்லாத முதலீட்டாளர்களுக்கு மீதமுள்ள 15% பங்குகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனம் என்ன செய்கிறது?
 

நிறுவனம் என்ன செய்கிறது?

CarTrade platform நிறுவனம் 2009ல் நிறுவப்பட்டது. இது பயன்படுத்திய கார்கள் மற்றும் புதிய கார்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கப்படுகிறது.

மேலும் பல வகையான சேவைகளையும் CarWale, CarTrade, Shriram Automall, BikeWale, CarTrade Exchange, Adroit Auto மற்றும் AutoBiz உள்ளிட்ட பல பிராண்டுகள் மூலம் செய்து வருகின்றது.

Krsnaa Diagnostics நிறுவனம்

Krsnaa Diagnostics நிறுவனம்

Krsnaa Diagnostics நிறுவனம் அதன் பொது பங்கு வெளியீட்டினை ஆகஸ்ட் 4 அன்று பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இந்த பங்கு வெளியீடானது ஆகஸ்ட் 6 அன்று முடிவடையவுள்ளது.

இந்த பங்கு விலை 933 - 954 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரோலக்ஸ் ரிங்க்ஸ் ஐபிஓ நிலவரம்

ரோலக்ஸ் ரிங்க்ஸ் ஐபிஓ நிலவரம்

ஆட்டோமொபைல் துறையை சார்ந்த உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான ரோலக்ஸ் ரிங்க்ஸ் நிறுவனம் அதன் பொது பங்கு வெளியீட்டினை ஜூலை 28 அன்று வெளியிட்டது. இந்த பொது பங்கு வெளியீட்டில் பங்கு விலையானது 880 - 900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த பங்கு விற்பனையானது ஜூலை 30 அன்று முடிவடைந்தது. இன்று அதன் பங்கு ஒதுக்கீடானது செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை https://www.bseindia.com/investors/appli_check.aspx என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதில் பங்கு ஒதுக்கீடு செய்யப்படாதவர்களுக்கு பணம் திரும்ப அக்கவுண்டில் அளிக்கப்படும்.

தேவயானி இன்டர்நேஷனல் ஐபிஓ

தேவயானி இன்டர்நேஷனல் ஐபிஓ

கே.எஃப்.சி மற்றும் பீட்சா ஹட் போன்ற உணவு சங்கிலி நிறுவனங்களை செயல்படுத்தும் தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனத்தின், 1,838 கோடி ரூபாய் மதிப்பிலான பொது பங்கு வெளியீட்டின் முதல் நாளாகும்.

இன்று 11,25,69,719 பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில், 2.7 மடங்கு அதாவது 30,23,56,560 பங்குகளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தேவயானி இன்டர்நேஷனல் – எதற்காக இந்த ஐபிஓ?

தேவயானி இன்டர்நேஷனல் – எதற்காக இந்த ஐபிஓ?

இந்த பொது பங்கு வெளியீட்டின் விலையானது 86 - 90 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த பங்கு வெளியீடானது ஆகஸ்ட் 6 அன்று முடிவடையவுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது கடனை திரும்ப செலுத்த பயன்படுத்தப்படும், வணிக விரிவாக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Exxaro (எக்ஸாரோ) ஐபிஓ

Exxaro (எக்ஸாரோ) ஐபிஓ

எக்ஸாரோ டைல்ஸ் நிறுவனம் பொது பங்கு வெளியீடு மூலமாக 161 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

குஜராத்தினை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம் 118 - 120 ரூபாயாக பங்கு விலையினை நிர்ணயம் செய்துள்ளது.

இந்த பங்கு விலையானது இன்று தொடங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 6 அன்று முடிவடையவுள்ளது.

இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வருவாயினை கண்டு வரும் நிலையில், இதன் பங்கு விலையானது நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Windlas Biotech –IPO

Windlas Biotech –IPO

விண்ட்லாஸ் பயோடெக் நிறுவனம் இன்று பங்கு வெளியீட்டினை செய்துள்ளது. முதல் நாளான இன்றே பலமான பதிலை கண்டுள்ளது எனலாம். இதன் பங்கு வெளியீடு ஆகஸ்ட் 6 அன்று முடிவடையவுள்ளது. இதன் விலையானது 448 - 460 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று 61.36 லட்சம் ஈக்விட்டி பங்குகளுக்கு எதிராக 78.58 லட்சம் பங்குகளுக்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CarTrade, Krsnaa Diagnostics among other 4 IPOs launched today

Krsnaa Diagnostics, Windlas Biotech, Krsnaa Diagnostics among some other IPOs launched today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X