முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. முதல் நாளே அசத்தல் லாபத்தில் கிளீன் சயின்ஸ், ஜிஆர் இன்ஃப்ரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கெமிக்கல் நிறுவனமான கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி நிறுவனம், ஜிஆர் இன்ஃப்ரா நிறுவனங்கள் அதன் பங்கினை இன்று பங்கு சந்தையில் பட்டியலிட்டன.

 

இதன் விலையானது பிஎஸ்இ-யில் 1784.40 பட்டியலிடப்பட்டுள்ளது. இது 98.26% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதே என்.எஸ்.இயில் 95% பிரீமியத்தில் 1,755 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது.

கிளீன் சயின்ஸ், ஜிஆர் இன்ஃப்ரா ஆகிய இரு நிறுவனங்களுமே ஐபிஓ விலையில் இருந்து, கணிசமான லாபத்தினை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.

 ரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..! ரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..!

 ஜிஆர் இன்ஃப்ரா பங்கு வெளியீடு

ஜிஆர் இன்ஃப்ரா பங்கு வெளியீடு

இதே ஜிஆர் இன்ஃப்ரா நிறுவனம் இடையிலான காலகட்டத்தில் ஜூலை 7 - 9 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இது 93.41 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றது. இது 1,14,92,30 பங்குகளுக்கு எதிராக 1,23,02,672 பங்குகளுக்கு விண்ணப்பத்தினை பெற்றிருந்தது. இதே நிறுவனங்கள் சார்பில் 156.37 மடங்கு விண்ணப்பத்தினையும், நிறுவனமல்லாத முதலீட்டாளார்கள் மத்தியில் 206.43 மடங்கு சந்தாவினையும் பெற்றது.

 ஜிஆர் இன்ஃப்ரா பங்கு விலை

ஜிஆர் இன்ஃப்ரா பங்கு விலை

இதற்கிடையில் ஜிஆர் இன்ஃப்ராவின் பங்கு விலையானது 103% பிரீமிய விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பங்கு வெளியீட்டு விலையானது 837 ரூபாயாகும். இது 1700 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியுள்ளது.
10.2 மணிக்கு இதன் பங்கு விலையானது 1605.25 ரூபாயாகவும், 91.79% ஏற்றத்திலும் காணப்பட்டது.

 பிரீமிய விலையில் கிளீன் சயின்ஸ்
 

பிரீமிய விலையில் கிளீன் சயின்ஸ்

கிளீன் சயின்ஸ் நிறுவனம், 1546.63 கோடி ரூபாய்க்கான பொது பங்கு வெளியீடு, ஜூலை 9ம் தேதி அன்று முடிவடைந்த நிலையில் இன்று பட்டியலிடப்பட்டுள்ளது., ஒரு பங்கிற்கு விலையானது 880 - 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் விலையானது பிஎஸ்இ-யில் 1784.40 பட்டியலிடப்பட்டுள்ளது. இது 98.26% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதே என்.எஸ்.இயில் 95% பிரீமியத்தில் 1755 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது.

 நல்ல எதிர்காலம்

நல்ல எதிர்காலம்

இந்தியாவினை பொறுத்தவரையில் இந்த கெமிக்கல் தொழில் என்பது, பல MNC- களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அம்சமாக உள்ளது. இது பல்வேறு சாதகமான காரணிகளின் மத்தியில் முன்னேறி வருகின்றது. குறிப்பாக சீனாவில் மாசு விதிமுறைகளின் மத்தியில் உற்பத்தி குறைக்கப்பட்டு வருகின்றது. ஆக இந்தியாவில் உற்பத்தியினை அதிகரிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

 நிபுணர்கள் எதிர்பார்ப்பு

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

அதோடு இந்தியாவில் பிஎல்ஐ திட்டம் போன்ற அரசின் சலுகைகள், சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு வரி அதிகம் உள்ளிட்ட பல காரணிகள், இந்திய கெமிக்கல் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன.
இதற்கிடையில் தான் தற்போது உள்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி நிறுவனம், நல்ல வலுவான லாபமுள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆக வருங்காலத்திலும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நல்ல ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜிஆர் இன்ஃப்ரா திட்டங்கள்

ஜிஆர் இன்ஃப்ரா திட்டங்கள்

கடந்த 2006 முதல் ஜிஆர் இன்ஃப்ரா 100க்கும் மேற்பட சாலை கட்டுமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2021 நிலவரப்படி, 14 HAM திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதில் 5 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. நான்கு கட்டுமானம் செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

 என்னென்ன பணிகள்

என்னென்ன பணிகள்

இது மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், கல்வெட்டுகள், ப்ளை ஓவர்கள், விமான நிலைய ஓடுபாதைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரயில் ஓவர் பிரிட்ஜ்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளில் ஜிஆர் இன்ஃப்ரா அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உள்ளது. மொத்தத்தில் எதிர்காலத்திலும் மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Clean science & GR infraprojects IPO listed today; check details

Market update.. Clean science & GR infraprojects IPO listed today; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X