இன்று காலையிலேயே சற்று ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தையானது. முடிவிலும் சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 85.88 புள்ளிகள் அதிகரித்து, 61,308.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 52.30 புள்ளிகள் அதிகரித்து, 18,308.10 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 2101 பங்குகள் ஏற்றத்திலும், 1295 பங்குகள் சரிவிலும், 113 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..?
இன்று காலையிலேயே பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, பின்னர் சரிவினைக் கண்டு முடிவில் மீண்டும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

முக்கிய காரணிகள்
ஓமிக்ரான் அச்சம், மத்திய வங்கிகளின் வட்டி விகித அதிகரிப்பு, பணவீக்கம் என பல்வேறு சர்வதேச காரணிகளும் சந்தைக்கு எதிராக இருந்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. அதிலும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. நிஃப்டி 18,300 உடைத்துள்ள நிலையில், அடுத்ததாக 18,500 ஐ தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியேறும் முதலீடுகள்
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வரும் நிலையில், உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சந்தையானது பெரியளவில் சரிவில் இருந்து தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.இந்த போக்கு வரும் நாட்களில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தொடக்கம்
இன்று காலை தொடக்கத்தில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 74.88 புள்ளிகள் அதிகரித்து, 57,859.69 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 29.30 புள்ளிகள் அதிகரித்து, 18,236.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1674 பங்குகள் ஏற்றத்திலும், 657 பங்குகள் சரிவிலும், 134 பங்குகள் மாற்றாமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ 2% மேலாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப்,பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி,பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ்,பிஎஸ்இ ஆயில் & கேஸ்,பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சற்று காணப்படுகின்றன. மற்றவை சற்று குறைந்தும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹீரோம்மோட்டோகார்ப், கிரசிம், ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், எம் & எம், மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டெக் மகேந்திரா, சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.