ஒரு நாள் முன்பு தான் இந்திய சந்தையானது வரலாறு காணாத அளவு முதன் முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது. ஆனால் இரண்டாவது நாளோ சந்தை பலத்த சரிவினைக் கண்டு 49,000க்கு கீழ் முடிவடைந்துள்ளது.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வந்தது.
எனினும் வாரத்தின் இறுதி நாளான இன்று புராபிட் புக்கிங் காரணமாக சந்தை சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. அதுவும் கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டியும் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டு முடிவடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு
இன்று காலை ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சரிவில் தான் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் சரிவில் தான் தொடங்கியது. இதற்கிடையில் நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 72.97 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஹெச்யுஎல், ஈச்சர் மோட்டார்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், அதானி பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஹெச்யுஎல், அல்ட்ராடெக்சிமெண்ட், டிசிஎஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இன்றைய சந்தை முடிவு
இதற்கிடையில் முடிவில் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, பலமான சரிவில் முடிவடைந்துள்ளது. முடிவில் சென்செக்ஸ் 746.22 புள்ளிகள் குறைந்து, 48,878.54 ஆகவும், இதே நிஃப்டி 215.45 புள்ளிகள் குறைந்து, 14,371.90 ஆகவும் முடிவடைந்துள்ளது. இது வாரத்தின் இறுதி நாளான இன்று புராபிட் புக்கிங்க் காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்புகள்
இது ஒரு புறம் இருந்தாலும் பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதன் எதிரொலியாகவும் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஏனெனில் பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரபோகின்றதோ? இது எந்தெந்த துறைக்கு சாதகமாக அமையப்போகின்றதோ? எந்த துறை ஏற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் நீடித்து வருகின்றது. இதனால் சந்தை ஏற்ற இறக்கத்தில் காணலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இருக்கும் லாபத்தினை எடுத்து வருவதாலும் சந்தை சரிவினைக் கண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.