வரலாறு காணாத அளவு சரிவினை எட்டிய ரூபாய்.. சென்செக்ஸ் முடிவில் 350 புள்ளிகளுக்கு மேல் சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.

 

சர்வதேச பங்கு சந்தைகள் பணவீக்க அச்சத்தின் மத்தியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் காலை 9.10 மணியளவில் ரூபாயின் மதிப்பானது 77.28 ரூபாயாக சரிவினைக் கண்டிள்ளது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் 0.48% வீழ்ச்சியினை கண்டுள்ளது.

கடந்த அமர்வில் ரூபாயின் மதிப்பானது 76.93 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் 77.06 ரூபாயாக தொடங்கியது.

ரிலையன்ஸ் காலாண்டு முடிவு எப்படியிருக்கும்.. எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்கு விலை 1% மேலாக சரிவு!

வரலாறு காணாத சரிவு

வரலாறு காணாத சரிவு

ரூபாயின் மதிப்பானது இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதிகபட்சமாக 77.31 ரூபாய் வரையில் சரிவினைக் கண்டது. கடந்த மே 7, 2022 அன்று அதிகபட்சமாக 76.98 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், இன்று 77 ரூபாயினையும் தாண்டி வீழ்ச்சி கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

நிலையற்ற சர்வதேச காரணிகள்

நிலையற்ற சர்வதேச காரணிகள்

சர்வதேச அளவில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் தான் பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இதற்கிடையில் சீனாவில் நிலவி வரும் கொரோனா பரவல் சூழல் காரணமாக அங்கு ஜீரோ கோவிட் கொள்கையானது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு சீனாவின் பொரூளாதாரத்தினை பதம் பார்க்கலாம்.

பேங்க் ஆப் இங்கிலாந்தின் முடிவு
 

பேங்க் ஆப் இங்கிலாந்தின் முடிவு

இதனையடுத்து இங்கிலாந்தில் நிலவி வரும் விலைவாசி ஏற்றத்தின் மத்தியில், அங்கு ரெசசன் வரலாமோ என்ற அச்சத்தின் மத்தியில், பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து பூதாகரமாகி வரும் நிலையில், சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையானது தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதியினை தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இது குறித்தான அறிவிப்பு வெளியானதிலிருந்தே மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது மேற்கொண்டு சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் சரிவு

ரூபாய் சரிவு

ஆக உலகம் முழுக்க அதிகரிர்த்து வரும் பணவீக்க விகிதமனது கரன்சிகளின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில் அன்னிய முதலீடுகளானது அதிகளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கரன்சிகளின் மதிப்பு மேலும் அழுத்தம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் தான் ரூபாயின் மதிப்பானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

சென்செக்ஸ் 364.91 புள்ளிகள் குறைந்து அல்லது 0.67% குறைந்து, 54,470.67 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 109.40 அல்லது 0.67% குறைந்து, 16,301.90 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதில் 1036 பங்குகள் ஏற்றத்திலும், 2353 பங்குகள் சரிவிலும், 140 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் திடீர் முடிவு

இந்திய ரிசர்வ் வங்கியின் திடீர் முடிவு

இந்தியாவினை பொறுத்த வரையில் ரிசர்வ் வங்கி, ஏற்கனவே வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இது மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை திடீரென உயர்த்திய நிலையில் பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதுவும் சந்தையில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

அமெரிக்க ஃபெடரல் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வர ஆரம்பிக்கலாம் . இதனால் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறவும் வழிவகுத்துள்ளது. இதுவும் ரூபாயில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் 2023ம் நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பானது 60 - 70 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: sensex falls above 350 points, rupee hits new low

closing bell: sensex falls above 350 points, rupee hits new low/வரலாறு காணாத அளவு சரிவினை எட்டிய ரூபாய்.. சென்செக்ஸ் முடிவில் 350 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X